Published:Updated:

தள்ளிப்போகும் மறுமணம், தற்கொலை எண்ணம்...வாசகியின் பிரச்னைக்கு நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

#LetsSpeakRelationship ( Representational Image )

வேலைபார்த்து கொஞ்சம் சேமிப்பு, ஓய்வு நேரங்களில் மேற்படிப்பு என்று உங்களை மேம்படுத்திக்கொள்வதுதான், இந்தச் சமூகத்தில் உங்களை மரியாதையாக வாழவைக்கும்.

தள்ளிப்போகும் மறுமணம், தற்கொலை எண்ணம்...வாசகியின் பிரச்னைக்கு நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

வேலைபார்த்து கொஞ்சம் சேமிப்பு, ஓய்வு நேரங்களில் மேற்படிப்பு என்று உங்களை மேம்படுத்திக்கொள்வதுதான், இந்தச் சமூகத்தில் உங்களை மரியாதையாக வாழவைக்கும்.

Published:Updated:
#LetsSpeakRelationship ( Representational Image )

என் வயது 26. விவாகரத்தானவள். தற்போது நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரும் என்னைப்போலவே விவாகரத்தானவர்தான். அவர் தற்போது சில பொருளாதாரப் பிரச்னைகளில் இருப்பதால், எங்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் எங்களுடன் இல்லை. நானும் என் தம்பியும் மட்டும்தான் வீட்டில் இருக்கிறோம். தம்பிக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. அவன் பணம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமானவன். திருமணத்துக்குப் பிறகு அவன் குடும்பத்தைத்தான் பார்ப்பானே தவிர, என்னைக் கவனிக்க மாட்டான். அதனால், என் சொந்தக்காரர்களும் நண்பர்களும், `அவனுக்குத் திருமணம் நடப்பதற்கு முன் உன் திருமணம் நடந்துவிட வேண்டும்' என்று சொல்கிறார்கள். எனக்கும் அதுதான் சரியென்று தோன்றுகிறது. ஆனால், இவ்வளவு சிக்கல்களையும் சொன்ன பிறகும் நான் காதலிப்பவர், `இப்போது திருமணம் செய்ய முடியாது, பொருளாதாரப் பிரச்னைகள் தீரட்டும்' என்பதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பற்றியோ என் திருமணத்தைப் பற்றியோ கவலைப்படுவதற்கு யாருமில்லை. வேலைக்குப் போகவும் பிடிக்கவில்லை. எதிர்காலம் பற்றிய பயத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட தோன்றுகிறது. எனக்கு வழிகாட்டுங்களேன்.

பெயர் சொல்ல விரும்பாத வாசகி

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
Representational Image

தீர்வு சொல்கிறார் உளவியல் நிபுணர் மாயா

``பெற்றோர் இல்லை. தம்பிக்கும் திருமணமாகவிருக்கிறது. இந்த இரண்டுமே உங்களுடைய பிரச்னையில்லை. நீங்கள் நேசிப்பவரை இன்னமும் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. அவரைத் தவிர உங்களுக்கு வேறு யாருடைய ஆதரவும் இல்லை. அதனால், அவர் நம்மை கைவிட்டுவிடுவாரோ என்கிற பயம்தான், உங்களை தற்கொலை எண்ணம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீங்கள் முதலில் அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரும் உங்களைப் போன்றே விவாகரத்தானவர் என்பதால், உங்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வார் என்று நம்பலாம். அவரிடம் மனம்விட்டுப் பேசி உங்கள் மனநிலையை எடுத்துச் சொல்லுங்கள்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
Representational Image

வேலைக்குப்போக பிடிக்கவில்லை என்கிறீர்கள். இன்றைய நிலைமையில் இருவரும் வேலைபார்த்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும். உங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் தேட வேண்டியது வேலையைத்தான். வேலைபார்த்து கொஞ்சம் சேமிப்பு, ஓய்வு நேரங்களில் மேற்படிப்பு என்று உங்களை மேம்படுத்திக்கொள்வதுதான், இந்தச் சமூகத்தில் உங்களை மரியாதையாக வாழவைக்கும். பெரிதாக வீட்டு பாரமும் இல்லாத இந்தக் காலகட்டத்தில் உங்களுடைய கரியரில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

தற்கொலை எண்ணம் வந்தால், உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்திப்பது அவசியம்.
#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
Representational Image

உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருப்பதால், உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்திப்பது அவசியம். அவர்கள்தான் உங்களை ஜட்ஜ் செய்யாமல் உங்களுக்காக யோசிப்பார்கள். என்னென்ன விஷயங்களில் உங்களை வளர்த்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை தருவார்கள். இந்த மன இறுக்கத்திலிருந்து நிச்சயம் உங்களை உங்களுக்கு மீட்டுத் தருவார்கள்.

உங்களை நம்பி, உங்கள் தன்னம்பிக்கையை நம்பி வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். எதிர்காலம் நன்றாக இருக்கும்.''

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship