Published:Updated:

``ஒருத்தரையொருத்தர் தத்தெடுத்துக்கிட்டோம்!’’

ராமச்சந்திரா, வரலட்சுமி,
பிரீமியம் ஸ்டோரி
ராமச்சந்திரா, வரலட்சுமி,

அப்பா-மகளின் ‘அதுக்கும் மேல’ பாசக்கதை

``ஒருத்தரையொருத்தர் தத்தெடுத்துக்கிட்டோம்!’’

அப்பா-மகளின் ‘அதுக்கும் மேல’ பாசக்கதை

Published:Updated:
ராமச்சந்திரா, வரலட்சுமி,
பிரீமியம் ஸ்டோரி
ராமச்சந்திரா, வரலட்சுமி,

சிலருடைய வாழ்க்கையில், ரத்த உறவுகளை விட பாசத்தில் பூத்த உறவுகள் அருமையாக அமைந்துவிடும். சென்னை, காசிமேட்டில் தகப்பனும் மகளுமாக ஒரு கூட்டுக்குள் வாழ்ந்து வருகிற வரலட்சுமி, ராமச்சந்திரா அட்டாவரின் பந்தம் அப்படிப்பட்டதுதான்.

‘`எனக்கு சொந்த ஊரு திண்டிவனம் பக்கத்துல மயிலம். என் குடும்பம் மூணு தலை முறைக்கு முன்னாடியே சென்னைக்கு வந்து செட்டிலாகிடுச்சு. அப்பா குடிச்சு குடிச்சே குடும்பத்தையும் அவரையும் அழிச்சுக்கிட்டார். அம்மாதான் காய்கறி வியாபாரம் செஞ்சு குடும்பத்தை காப்பாத்துனாங்க. என்கூட பொறந்தவங்க நாலு அக்காங்க. மூணு பேர் கல்யாணமாகி வேற வேற ஊர்கள்ல செட்டிலாகிட்டாங்க. நாலாவது அக்காவும் நானும் அம்மாவை கவனிச்சுக்கறதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டோம். என் குடும்பத்துல முதல் பட்டதாரி நான்தான். நாலாவது அக்கா அம்மா மாதிரியே காய்கறி வியாபாரத் துல இறங்க, நான் தண்ணி கேன் பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன். கூடவே, மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், ஆதர வற்றவர்களுக்கு அரசின் உதவித்தொகை வாங்குறதுக்கு ஹெல்ப் பண்றேன். எங்க ஏரியாவுல அகில இந்திய மீனவர் சங்கத்தின் மகளிர் அமைப்புல செயலாளராகவும் இருக் கேன்’’ என்கிற வரலட்சுமி, ராமச்சந்திராவை ‘டாடி’ என்றே அழைக்கிறார்.

‘`டாடிக்கு சொந்த ஊர் கர்நாடகா. வேலை காரணமா சென்னை வந்து செட்டிலாகிருக்கார். டாடிக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. அந்த அண்ணனுங்க ரெண்டு பேரும் கல் யாணம் முடிச்சு தனிக்குடித்தனம் போயிட் டாங்க. டாடியோட மனைவி, மகள் ரெண்டு பேருமே கேன்சர்ல தவறிட்டாங்க. டாடி மனசொடிஞ்சு இருந்த நிலைமையில தான் அவரை முதல் தடவை சந்திச்சேன்’’ என்றவர், அதை நம்மிடம் பகிர ஆரம்பித்தார்.

‘`நான் செயலாளரா இருந்த மகளிர் அமைப் புல டாய்லெட் வசதி கிடையாது. அந்த பில் டிங்குக்கு பக்கத்துல இருந்த டாடி வீட்டுக்கு வந்து ‘உங்க வீட்டு டாய்லெட்டை பயன் படுத்திக்கிட்டுமா’ன்னு கேட்டேன். அனுமதிச் சாரு. கொஞ்சம் கொஞ்சமா பேசிப் பழக ஆரம்பிச்சோம். அப்போ டாடி மருந்து செல வுக்குக்கூட ரொம்ப கஷ்டப்பட்டிருந்தார். அதைப் போக்குறதுக்காக, ‘என்னோட தண்ணி கேன்களை உங்க வீட்டு காம்பவுண்டுக் குள்ள வெச்சுக்கிறேன். அதுக்கான வாடகை கொடுத்துடுறேன். அந்தப் பணம் உங்களுக்கு உதவியா இருக்கும்’னு சொன்னேன். அதுக்கு டாடி... ‘தாராளமா வெச்சுக்கோ; ஆனா, வாடகை வாங்க மாட்டேன். நீ என் மகள் மாதிரி’ன்னார். அந்த நிமிஷத்துல இருந்தே அவர் எனக்கு டாடியாகிட்டார்’’ என்று சிலிர்ப்பவர், தன் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு ராமச்சந்திரா அட்டாவர் வீட்டிலேயே அடைக்கலமாகியிருக்கிறார்.

‘`நான் ஹாஸ்டல்ல தங்குற முடிவுலதான் இருந்தேன். ஆனா, ‘என் மகளை கைவிட முடி யாது’ன்னு டாடி உறுதியா நின்னுட்டார். அதைப் பார்த்து, ‘எண்பது வயசைத் தாண்டிட்ட டாடியை தனியா விட முடியாது’ன்னு நானும் தீர்மானமா நின்னுட்டேன். ஒருத்தரையொருத்தர் மனசார தத்தெடுத்துக்கிட்டோம். அப்பாவும் மகளுமா வாழ ஆரம்பிச்சு அஞ்சு வருஷமாயிடுச்சு’’ என்றவர், இதனால் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் பகிர்ந்தார்.

``ஒருத்தரையொருத்தர் தத்தெடுத்துக்கிட்டோம்!’’

‘` ‘அப்பாவும் பொண்ணுமா’ன்னு கேலி பேசினாங்க சிலர். ‘சொத்துக்காகத்தான் டாடின்னு கூப்பிடுறா’ன்னு சிலர் டாடியோட பிள்ளைங்ககிட்ட போய் சொல்லி, பெரிய பிரச்னையாக்கினாங்க. அவங்களும் வீட்டுக்கு வந்துப் பேசினாங்க. ‘பெத்த அப்பா என்மேல ஒருநாளும் பாசம் காட்டினதில்லை. அந்தக் குறை உங்களாலதான் தீர்ந்துச்சு. நான் சொத் துக்காக உங்களை டாடின்னு கூப்பிடலைன்னு நிரூபிக்கணும்னா உங்களுக்கப்புறம் இந்த வீடு பெரிய அண்ணனுக்கு சேரணும்னு உயில் எழுதிடுங்க’ன்னு டாடிகிட்ட கேட்டுக்கிட் டேன். அவரும் ஒப்புக்கிட்டார். அன்னியில இருந்து பெரிய அண்ணனும் ‘யார் என்ன சொன்னாலும் நான் உன்னை நம்பறேன். எங்கப்பாவுக்கு நீ பொண்ணுன்னா எனக்கு நீ தங்கச்சி’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

என் டாடி மாதிரி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. இப்போ அவருக்கு 86 வயசு. எனக்கு முடக்கு வாத பிரச்னை இருக்கிறதால காலையில எழுந்தவுடனே என்னால வேகமாக வேலைபார்க்க முடியாது. டாடிதான் வாசல் தெளிச்சு, காபி போட்டு என்னை எழுப்புவார். என் சொந்த அப்பாகூட இப்படி என் மேல பாசமா இருந்ததா எனக்கு நினைவில்லை’’ என்று கண்கலங்கிய வரலட்சுமியை ‘டோன்ட் க்ரை’ என்று தேற்றியபடி பேச ஆரம்பித்தார் ராமச்சந்திரா அட்டாவர்.

‘`என் வொய்ஃப் பிரெஸ்ட் கேன்சர்ல இறந் துட்டாங்க. டாக்டரா இருந்த என் மகளும் கேன்சர்ல தவறிட்டா. ரெண்டு பேரையுமே பறிகொடுத்துட்டு தனியா வாழ்ந்துட்டிருந் தப்போதான் வரலட்சுமியை மீட் பண்ணேன். ரொம்ப பாசமான பொண்ணு. என் வாழ்வா தாரத்துக்காக அவ பார்த்துக்கிட்டிருந்த தண்ணி கேன் பிசினஸை என்கிட்ட கொடுத் திட்டா. ஒருபக்கம் சங்கத்தோட வேலைகள், மறுபக்கம் சோஷியல் சர்வீஸ், கிடைக்கிற நேரத்துல அவ வாழ்வாதாரத்துக்கு மீன் அமிலம், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய்னு எந்நேரமும் பரபரன்னு இயங்கிட்டிருப்பா. ஆனா, இந்த அஞ்சு வருஷத்துல ஒருவேளைகூட நான் நேரம் தவறி சாப்பிட்டதில்லை. என்னை அப்படிப் பார்த்துக்கிறா’’ என்றவரைக் கண்கள் கசியப் பார்க்கிறார் வரலட்சுமி.

இது காலம் சேர்த்த உறவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism