Published:Updated:

`தீபிகா படுகோனின் போட்டோ ஷூட்டும் ரன்வீரின் கமென்ட்டும்!' - இது தீப்வீர் காதல்

தீபிகா
தீபிகா ( instagram )

பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தீபிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

என்ன உடைன்னு தெரியாத அளவுக்கு வித்தியாசமான உடையை டிசைன் செய்து அணிவது, விதவிதமான அக்ஸசரீஸ் பயன்படுத்துவது என ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனின் உடை அலங்காரத்தை லைக் அண்டு ஃபாலோ செய்ய சோஷியல் மீடியாவில் ஒரு தனிப்படையே இருக்கு.

ரன்வீர் - தீபிகா
ரன்வீர் - தீபிகா
instagram

நெட்டிசன்களைக் குஷிப்படுத்தும் வகையில் சோஷியல் மீடியாவில் ரன்வீரும் தீபிகாவும் ஒருவரை ஒருவர் ஜாலியாக வம்பிழுப்பது, க்யூட் காதலை வெளிப்படுத்துவது என மிக ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இவர்களின் காம்போவுக்கெனத் தனி ரசிகர்கள் குழுவும் இருக்கிறது.

தனது நியூ ஹேர் ஸ்டைலுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட தீபிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரன்வீர் சிங் 'என்னைக் கொன்று விடு' எனும் அர்த்தத்தில் ஒரு பதிலைத் தட்டினார்.

தீபிகா
தீபிகா
instagram
`ஃப்ரேய்ட்' ஜீன்ஸ்.. கார்செட்.. பட புரொமோஷனுக்காக மெனக்கெடும் தீபிகா படுகோன்!

ரன்வீர் சிங் தன்னுடைய படமான '83'-ன் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தபோது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதற்கு தீபிகா, 'ஒரு கிலோ மைசூர் பாகும், ரெண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸும் வாங்காமல் திரும்பி வராதே' எனப் பதிவிட்டார்.

தொடர்ந்து சமீபத்தில், 'ELLE' பத்திரிகையின் மார்ச் மாத இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா, அதற்கென எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

கடற்கரையில் தீபிகா மினிமல் உடையில் இருக்கும் அந்த ஹாட் படங்கள், நெட்டிசன்களிடம் வைரலாகி வருகின்றன.

`ரன்வீரின் டான்ஸ்; திடீர் சத்தம்: பேன்ட்டைத் தைத்தேன்!' - தீபிகாவின் `மனைவி' அலப்பறைகள்

ரசிகர்களுக்கு இணையாக தீபிகாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயராக இருக்கும் ரன்வீர் இந்தப் படத்துக்கு 'பேபி கொஞ்சம் கருணை காட்டு' எனும் அர்த்தத்தில் பதிவு செய்தார். ரன்வீரின் இந்த கமென்டுக்கு லைக்ஸும் கமென்ட்ஸும் குவிந்து கொண்டிருக்கின்றன.

தீப்வீர் காதல்!

அடுத்த கட்டுரைக்கு