Published:Updated:

சண்டைக்குப் பின்... சமாதானத்துக்கு வழி என்ன?!

#Avaludan
பிரீமியம் ஸ்டோரி
#Avaludan

#Lifestyle

சண்டைக்குப் பின்... சமாதானத்துக்கு வழி என்ன?!

#Lifestyle

Published:Updated:
#Avaludan
பிரீமியம் ஸ்டோரி
#Avaludan
‘இணையுடன் ஒரு ‘காச்மூச்’ சண்டை போட்டு முடித்த பின்னர், சமாதானம், சமரசத்துக்கு நீங்கள் பின்பற்றும் வழி என்ன..?’ என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

Lakshmi Saravanan: சண்டை காரசாரமாகும்போது ஒருகட்டத்தில் நான் பேசாமல் அமைதியாகிவிடுவேன். அவரும் மெள்ள மெள்ள சத்தத்தைக் குறைத்துவிடுவார். பின்னர், மௌன யுத்தம் ஆரம்பமாக, ‘இப்போ நீ பேசுவியா, மாட்டியா?’ என்று அவர் வந்து கேட்கும்போதே சிரிப்பு வந்துவிடும். அவருக்கும் அது தொற்றிக்கொள்ள... சண்டை போயே போச்!

Valli Subbiah: அவர் குரல் உயர்த்திப் பேசினால் நான் பதில் பேச மாட்டேன். அவர் கோபத்தில் இருந்து இறங்கிய பிறகுதான் என் கருத்தைக் கூறுவேன். ஈகோ எல்லாம் பார்க்காமல் நானே இறங்கிச் சென்று பேசிவிடுவேன். பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் சமாசாரம் எனக்கு செட் ஆகாது!

Lakshmi Vasan: இருவரும் சளைக்காமல் வார்த்தை பரிமாற்றம் செய்துகொண்ட பின், இரண்டு நிமிடங்கள் மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அவருக்கும் கொடுப்பேன். அதுதான் சமாதான சிக்னல். பிறகு, இருவரும் ஒன்றும் ஆகாதது போல் வேலையைத் தொடர்வோம்!

Jothi Ranjiith: எவ்ளோ பெரிய சண்டையா இருந்தாலும் அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள `லவ் யூ’ சொல்லிடணும். இதுதான் எங்க சட்டம். அதுக்கப்புறம் சத்தமா பேசின அதே விஷயத்தை மெதுவா பேசி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு, புரியவெச்சு சமாதானம் ஆயிருவோம்!

Sathya Kumar: விவாதம் முடிந்த பின் நான் என் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவேன்; அவர் மட்டும் என்னையே பார்த்துக்கொண்டு அப்படியே நிற்பார். எனக்கு சிரிப்பு வந்துவிடும். நான் சிரிப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றிடுவார். மீண்டும் பேச வரும்போது, அவர் என்னிடம் முதுகைக் காட்டியபடியே வருவார். வேண்டுமென்றால் அடித்துக்கொள் என்ற அர்த்தம்!

Jayalakshmi Venkatachalam: சண்டை முடிந்த பின்னர், நான் எங்கள் வீட்டு சமாதான ரெசிப்பி அவல் பாயசம் செய்வேன். அவர் எனக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார்.

சண்டைக்குப் பின்...
சமாதானத்துக்கு வழி என்ன?!

Deepa Deepika: என் மீதே தவறிருந்தாலும் அவரை கொஞ்ச நேரம் கெஞ்ச விடுவேன். ஒருவேளை அவர் பேசவில்லை என்றால், மகளைத் தூது அனுப்புவேன்.

Srividhya Prasath: சண்டைக்குப் பின் அவர் வந்து என் உள்ளங்கையில் S O R R Y என எழுதுவார் அல்லது நான் செய்தது தவறு என உணர்ந்தால் அவர் முதுகில் S O R R Y என்று எழுதுவேன். அவ்ளோதான்!

Abdul Rahman Sheikh: எதுவும் பேசாமல் இரண்டு, மூன்று முறை கண்ணுக்குக் கண் சென்று பார்ப்பேன். இருவருமே சிரித்துவிடுவோம். நோக்குவர்மம்!

KarthigaRaghuraman: சண்டைக்குப் பின் ஒரே அமைதிதான். என் மௌனம் அவருக்கு அவருடைய தவறுகளை உணர்த்தும். எனக்கும் என்னுடைய தவறுகள் புரியும். பின்னர், இருவரின் செயல்களிலுமே பாசிட்டிவ் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

Nalini Shanthakumari: தவறு நான் செய்திருந்தால் போகும்போதெல்லாம் அவரை இடித்துவிட்டு நகர்வது, தலையை வருடிச் செல்வது, கிச்சுகிச்சு மூட்டுவது, காதை திருகுவது என இப்படிச் சின்னச் சின்ன தொடுதல்கள் செய்வேன்... ஒரு கட்டத்தில் சிரித்துவிடுவார்!

Mathiraja Thilakar: சமாதானம் செய்ய வேண்டும் என்றால், ‘இந்தக் கோவத்தைக் குறைச்சுட்டு, சண்டை போடுறதையும் குறைச்சுட்டா நீ இன்னும் அழகாகிடுவே’ என்பேன். சுபம்!

Anbu Bala: எதற்கெடுத்தாலும் கோபத்தைக் கொட்டும் ஒருவருடன் குடும்பம் நடத்தி பேரப்பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். அவரே கத்துவார், பிறகு அவரே சமாதானமாகிவிடுவார். எனவே, சமாதானம் செய்யச் செல்லாமல் இருப்பது நன்று என்றாகிவிட்டது!

Vishnu Pryal: கணவருக்கு அதிகமாகக் கோபம் வரும் என்றாலும் என் தரப்பு விளக்கத்தை முழுவதும் கூறிவிடுவேன். பின் சில நிமிடங்களில் நான் மொக்க காமெடி செய்து அவரை கூல் செய்துவிடுவேன்.

Vajini Vijil: எனக்குக் கவிதைகள் எழுதப் பிடிக்கும் என்பதால் சில வரிகள் எழுதி அவரிடம் நீட்டினால்... ஹிஹிதான்!

Shanmuganathan Namasivayam: அன்று இரவு அவரிடம், ‘ஏதோ கோபத்துல பேசிட்டேன்...’ என்று அவர் மார்பில் முகம் வைத்துப்பேசினால் போதும்!

Jeeva Purusothaman: நிறைய சண்டைகள் முத்தங்களில் முற்றுப் பெற்றுவிடும் என்னவனிடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism