Published:Updated:

“காதலே... காதலே... தனிப்பெரும் துணையே!” - ரியல் ‘ராம்-ஜானு’வின் லவ் ஸ்டோரி

படங்கள்: அசோக் அர்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

“சமூக வலைதளத்தில் எங்களை எப்படிப் பார்க்க றீங்களோ, நிஜத்திலும் நாங்க அப்படித்தான். நிறைய சண்டை போட்டுக் குவோம், கலாய்ச்சுக்கு வோம். ஆனா அதெல்லாம் அன்பின் வெளிப் பாடுன்னு ரெண்டு பேருக்குமே தெரியும்''

- கல்யாண ஆல்பத்தை ரசித்தபடியே பேசுகிறார் ஜானு. க்யூட்டான சண்டைகள், காதல் கலாட்டா, விளையாட்டுத்தனம் கலந்த வீடியோக்கள் என ‘ராம் - ஜானு’ ஜோடியின் யூடியூப் வீடியோக்கள் பிரபலம். கடந்த மூன்று வருடங்களாக லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள், கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். தலை தீபாவளி தம்பதியிடம் பேசினோம்.

“காதலே... காதலே... தனிப்பெரும் துணையே!” - ரியல் ‘ராம்-ஜானு’வின் லவ் ஸ்டோரி

“எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பத்தாவது படிச்சிட்டிருந்தபோது, சென்னை யில நடந்த அறிவியல் கண்காட்சியில போட்டியாளரா கலந்துகிட்டேன். கீர்த்தியும் வந்திருந்தாங்க. ஸ்கூல் ஐடி கார்டை பார்த்து இவங்க பெயரை தெரிஞ்சுக்கிட்டேன். தயக்கமா இருந்ததால பேசல. அடுத்த ரெண்டு வருஷம் ஃபேஸ்புக்ல, கீர்த்தின்ற பெயர்ல இருந்த எல்லாருக்கும் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தேன். நிறைய பேர்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வந்துச்சு. ஆனா, இவங்களை கண்டுபிடிக்கவே முடியல. ப்ளஸ் டூவுல, கோயம்புத்தூர்ல நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில மறுபடி கீர்த்தியை சந்திச்சேன். அவங்ககிட்ட என் ஃபேஸ்புக் ஐடியை எழுதிக்கொடுத்துட்டு வந்தேன். சில மாசங்கள் கழிச்சு , என் ஃபிரெண்ட் ரெக் வெஸ்ட்டை ஏத்துக்கிட்டாங்க. ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஸாதான் இருந்தோம். நான்தான் முதல்ல காதலை சொன்னேன். ஆனா, அவங்க ஆறு வருஷம் கழிச்சுதான் காதலை என்கிட்ட சொன்னாங்க'' என்ற ராமை, வெட்கத்துடன் பார்த்துப் பேச ஆரம்பிக்கிறார் கீர்த்தி .

“காதலே... காதலே... தனிப்பெரும் துணையே!” - ரியல் ‘ராம்-ஜானு’வின் லவ் ஸ்டோரி

“எங்க வீட்டுல ராம் பத்தி சொன்னேன். அடி விழுந்தது. ஆனாலும், என் முடிவுல தெளிவா இருந்தேன். போகப்போக ராமோட கேரக்டர் எங்க அம்மா, அப்பாவுக்கும் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்துக்கு ஓகே சொன்னாங்க. நான் மாடலிங் பண்ணவும், சீரியல்கள்ல நடிக்கவும் ஆரம்பிச்சேன். எதிர் பாராதவிதமா என் கால்ல அடிபட்டு ஆபரேஷன் நடந்தது. அதுக்கு அப்புறம் என் கரியரை பத்தி யோசிச்சப்போ, ராம்தான் யூடியூப் தொடங்குற ஐடியாவைக் கொடுத்தாரு. அந்த லைஃப்ஸ்டைல் சேனல் நல்லா போயிட்டிருந்தபோதே, 2019-ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘ராம் வித் ஜானு’ சேனலை தொடங்குனோம்.

எங்க சேனலுக்காக நிறைய வேலைகள் இருக்கும். வேலை முடிச்சு வீட்டுக்குப்போக லேட் நைட் ஆகும். அதனால வீடு வாடகைக்கு எடுத்து அதை ஆபீஸா மாத்தினோம். அங்கேயே தங்கவும் ஆரம்பிச்சோம். மூணு வருஷம் லிவ்இன் வாழ்க்கையில இருந்தோம். சமூக வலைதளங்களில் எங்க வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கினதும் எல்லாரும் எப்போ கல்யாணம்னு கேட்க ஆரம்பிச்சாங்க. எல்லாருடைய ஆசீர்வாதத்தோடும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்ற கீர்த்தி, ‘ஜானு’வுக் கான பெயர்க்காரணம் சொல்கிறார்.

“காதலே... காதலே... தனிப்பெரும் துணையே!” - ரியல் ‘ராம்-ஜானு’வின் லவ் ஸ்டோரி

‘`ஹிந்தியில ‘ஜான்’-னா உயிர்னு அர்த்தம். ஆரம்பத்துலேருந்தே ராம் என்னை அப்படி தான் கூப்பிடுவார். ‘96’ படத்துல ராம் - ஜானு கேரக்டர்களைப் பார்த்தப்போ எங்களுக்கே செம ஷாக்... இப்போ எல்லாருமே என்னை ‘ஜானு’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. யூடியூப் பிரபலங்கள் பலரும் எங்க கல்யாணத் துல கலந்துகிட்டாங்க. ரசிகர்களுக்காகவே கோயம்புத்தூர்ல தனியா ஒரு ரிசப்ஷன் நடத்தினோம். சோஷியல் மீடியா எங்களுக்கு இவ்வளவு அன்பை சம்பாதிச்சுக் கொடுத்திருக் குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த அன்புக்கு என்னிக்கும் கடமைப் பட்டிருப்போம்'' என்று விடைபெறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு