Published:Updated:

``பாஸ்வேர்டு சொல்ல மறுத்தா பிரேக் அப் சொல்லிடுறாங்க!'' - டிடெக்டிவ் யாஸ்மின் #relationshipgoals

"மூன்றாவது நபர்கள் தலையிடுறதால தம்பதிகளுக்குள்ள பிரச்னை வந்ததுபோய், இப்போது மூன்றாம் நபர்கள் தலையிடாத அதிகபட்ச நாகரிகத்தாலேயே சில பிரிவுகள் நிகழ்ந்துடுது.''

Break Up
Break Up

"இந்தக் காலக்கட்டத்துல பிரேக் அப் சர்வ சாதாரணமா நடக்குது. ஏன்னா, போன தலைமுறை மாதிரி ஒரு காதல் பிரிவதையோ, ஒரு தம்பதி பிரிவதையோ யாரும் சீரியஸா எடுத்துக்கிறதில்லை, அவ்வளவுதான்'' - இரண்டே வரியில் இந்தக் கால பிரேக் அப்புக்கான காரணத்தைச் சொன்ன டிடெக்டிவ் யாஸ்மின் அவர்களிடம், அவருடைய அனுபவத்தில் இருந்து பிரேக் அப்புக்கான மற்ற காரணங்கள், அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கேட்டோம்.

"பார்ட்னர்ல ஒருத்தர் `நான் ரொம்ப பர்ஃபெக்ட்' அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா, இன்னொருத்தருக்கு வர்ற எரிச்சலும் ஒருகட்டத்துல விரிசலை ஏற்படுத்திடுது.''
டிடெக்டிவ் யாஸ்மின்

"திருமணமானவங்கன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா, அவங்களுக்குள்ள பிரச்னை வந்தா தடுக்கிறதுக்கும், விவாகரத்து வரைக்கும் போகாம சமாதானப்படுத்துறக்கும் நெருக்கமான சொந்தங்கள் பக்கத்துல இல்லை. ஐ மீன் கூட்டுக்குடும்பங்கள் இல்லை. கூட்டுக் குடும்பங்கள் இல்லைன்னா என்ன, சோஷியல் மீடியா மூலமா உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் எல்லா உறவுகளும் நெருக்கமாத்தானே இருக்கிறோம். அப்புறம் என்னன்னு நீங்க கேட்கலாம்.

ஆனா, ஒரு தம்பதிக்குள்ள பிரச்னை நுழைஞ்சு, பேசிப்பேசி அது பெரிசாகி, சொந்தக்காரங்க காதுகளுக்கு அது எட்டறதுக்குள்ள, ஒண்ணு இங்கே பிரச்னை ஒரு பிரேக் அப் முடிவுக்கு வந்திருக்கலாம். அல்லது சொந்தக்காரங்க (இதுல பெற்றோர்களும் அடக்கம்), `இது அவங்க ரெண்டு பேருடைய பர்சனல். அதுல தலையிடுறது நாகரிகம் கிடையாது'ன்னு ஒதுங்கி இருந்துடுவாங்க. மூணாவது நபர்கள் தலையிடுறதால தம்பதிகளுக்குள்ள பிரச்னை வந்ததுபோய், இப்போ மூன்றாம் நபர்கள் தலையிடாத அதிகபட்ச நாகரிகத்தாலேயே சில பிரிவுகள் நிகழ்ந்துடுது.

Detective Yasmin
Detective Yasmin

அது கல்யாணமோ, லிவ்விங் டு கெதரோ ஒருத்தர் டாமினேட் கேரக்டரா இருந்தாலும் அது பிரேக் அப்புக்குக் காரணமாகிடுது. அதே மாதிரி, ஒருத்தர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்றது, ஒருத்தர் எந்த வேலையும் செய்யாம இருக்கிறதும்கூட இன்னிக்குப் பிரிவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துடுது. தவிர, பார்ட்னர்ல ஒருத்தர் `நான் ரொம்ப பர்ஃபெக்ட்'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா, இன்னொருத்தருக்கு வர்ற எரிச்சலும் ஒருகட்டத்துல விரிசலை ஏற்படுத்திடுது.

போன தலைமுறைகள்லேயும் டாமினேட் பண்றது, ஒருத்தரே எல்லா வேலைகளையும் செய்றது, பர்ஃபெக்ட்னு பந்தா பண்றது எல்லாமே இருந்துச்சு. அதெல்லாம் அப்போ ஒருத்தரையொருத்தர் சார்ந்து இருந்ததால பெருசா தெரியலை. ஆனா, இப்போ எல்லோருமே தனித்தனி மனிதர்கள்னு ஃபீல் பண்றதால, உரசல் வந்துடுது'' என்றவர் செக்ஸ் எப்படி பிரேக் அப்புக்குக் காரணமாகிறது என்பதைப் பற்றியும் சொன்னார்.

"அந்தக் காலத்துல பார்ட்னரால சகித்துக்கொள்ளப்பட்ட இந்த விஷயத்தை, இந்தத் தலைமுறை மன்னிக்கக்கூட செய்யாது.''
யாஸ்மின்

"கல்யாணமானதான் செக்ஸ் கிடைக்கும்னு இப்போ நிலைமை இல்லை. லிவ்விங் டு கெதர், ஃபிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட், ஒன் நைட் ஸ்டாண்ட்னு எல்லா வழியிலேயும் செக்ஸ் கிடைக்குது. அதே நேரம், தன் பார்ட்னர்கிட்டே தான் நினைச்சபடி செக்ஸ் கிடைக்கலைன்னா அடுத்த பார்ட்னரை தேடிப் போயிடுறாங்க. இதுவும் எல்லா காலத்துலேயும் நடந்த விஷயம்தான். ஆனா, அந்தக் காலத்துல பார்ட்னரால சகித்துக்கொள்ளப்பட்ட இந்த விஷயத்தை, இந்தத் தலைமுறை மன்னிக்கக்கூட செய்யாது. லிவ்விங் ஆக இருந்தாலும் நேர்மையா இருன்னு சொல்ற தலைமுறை இது. இப்படிப்பட்ட நேர்மையான கேரக்டர், நேர்மையில்லாத பார்ட்னரை பிரேக் அப் பண்ணிடுது.

காதலிக்கிறவங்களோ, கல்யாணமானவங்களோ இன்னிக்கு ரெண்டு பேருமே வேலைக்குப் போறாங்க. அலுவலகத்து ஸ்டிரெஸ்ஸோடத்தான் ரெண்டு பேரும் சாயங்காலத்துல சந்திக்கிறாங்க. ஆண் மட்டுமே வேலைபார்த்துக்கிட்டிருந்த காலத்துல, கணவனுடைய ஆபீஸ் ஸ்டிரெஸ்ஸை மனைவி தாங்கிக்கிட்டா. இப்போ மனைவியும் அதே ஸ்டிரெஸ்ஸோட வீட்டுக்கு வர்றதால, உரசல்கள் சகஜமாகிடுச்சு. உரசல்கள் மெல்ல மெல்ல விரிசலுக்குக் கொண்டுட்டுப் போயிடும். வீட்டுக்குப் போனா கூல் மோடுக்கு மாறிடணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டா மட்டும்தான் இந்தப் பிரச்னையை வராம தடுக்க முடியும்.

Break Up
Break Up

வாழ்க்கை எனக்குப் பிடிச்ச மாதிரியில்ல; என் டேஸ்டுக்கு ஏத்தபடியில்ல; நான் நினைச்ச மாதிரி லைஃப் அமையலை என்றதும், அதைவிட்டு வெளியே வருகிற மென்டாலிட்டி இன்னிக்கு அதிகமாகிடுச்சு. காதலுக்கும் இதே ரூல்தான். ரொம்ப சின்சியரா லவ் பண்றவங்களும், பார்ட்னரோட இயல்பு பிடிக்கலைன்னா, அந்த உறவை கல்யாணம் வரைக்கும் கொண்டுபோக விரும்பறதில்ல. 

ஆணை பொருளாதாரத்துல சார்ந்து இருந்த காலத்துல, பெண், அவனோட தவறுகளையெல்லாம் சகிச்சுக்கிட்டா. அதிகபட்சமா அடி, உதைகள் வரைக்கும் சகிச்சிருக்காங்க பெண்கள். பொருளாதார விடுதலை அடைஞ்சுட்ட இந்தக்காலப் பெண்களுக்கு ஆண்களோட ஆதிக்கத்தையும் அடி உதைகளையும் சகிச்சுக்கவேண்டிய அவசியமில்லை. பெண்களுடைய இந்த மாதிரி நியாயங்களும் பிரேக் அப்புக்குக் காரணமாகிவிட்டன.

`இப்படியொரு ஆண் என் வாழ்க்கையில தேவையேயில்லை'ன்னு தூக்கிப்போட்டுட்டு போற இன்றைய சுயமரியாதைமிக்க பெண்களைப் பார்த்து எரிச்சல்படுறாங்க; பயப்படுறாங்க...''
யாஸ்மின்

போன தலைமுறைகள்ல இருந்த 'கணவன் - மனைவிக்கு நடுவே எந்த ரகசியமும் இருக்காது'ங்கிறதை இப்போ ஃபாலோ பண்ணவே முடியாது. ஆபீஸ் விஷயங்கள் நிரம்பிய செல்போன் பாஸ்வேர்டையோ அல்லது லேப்டாப் பாஸ்வேர்டையோ லைஃப் பார்ட்னர்கிட்டேயே தர முடியாதப்போ, லவ் பண்றவங்ககிட்டே கொடுக்கிறதைப்பத்தி யோசிக்கக்கூட முடியாது. பாஸ்வேர்டு சொல்ல மறுத்தா பிரேக் அப் சொல்லிடுறாங்க.

அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போன பெண்களையே பார்த்துக்கிட்டிருந்த ஆண்களுக்கு, பெண்கள் சுயமா முடிவுகள் எடுக்கிறதையே இன்னும் ஜீரணிக்கச்சுக்க முடியலை. காதலிக்கிற ஆணோ, கல்யாணம் பண்ணிக்கிட்ட கணவனோ... தன்னைத் தவிர, மத்த பெண்களோட உறவு வைச்சுக்கிட்டதை சகிச்சுக்கிட்ட பெண்களை பார்த்துக்கிட்டிருந்த ஆண்கள், `இப்படியொரு ஆண் என் வாழ்க்கையில தேவையேயில்லை'ன்னு தூக்கிப்போட்டுட்டு போற இன்றைய சுயமரியாதைமிக்க பெண்களைப் பார்த்து எரிச்சல்படுறாங்க; பயப்படுறாங்க... இந்த உணர்வுகளும் ஒரு கட்டத்துல பிரேக் அப்லதான் கொண்டுபோய் விடுது.

பிரேக் அப்
பிரேக் அப்

'' பாஸ்வேர்ட் சொல்ல மறுத்தா பிரேக் அப் சொல்லிடுறாங்க'' - யாஸ்மின் டிடெக்டிவ் #உறவுகள் #LetsSpeakRelationship வீடியோ : சாந்தி கணேஷ்

Posted by Vikatan EMagazine on Wednesday, August 21, 2019

மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருந்தாதான் சமூகம் வளரும். இன்னிக்கு அவைதான் பிரேக் அப்களுக்கும் காரணமாயிட்டே வருது. ஆண், பெண் உறவின் பலமே ஒருத்தரோட ஒருத்தர் மனம்விட்டுப் பேசறதுலதான் இருக்கு. இன்னிக்கு இருக்கிற பிஸி வாழ்க்கையில இதை நம்மால செய்ய முடியலை. மனம்விட்டுப் பேசறது மட்டும்தான் பிரேக் அப்-களை தடுக்கிற ஒரு பலமான விஷயமா எனக்குத் தோணுது'' என்கிறார் யாஸ்மின்.