Published:Updated:

`செல்லப் பிராணிகளே பெட்டர்!' -பெண்களின் தூக்கத்துக்கு ஆய்வுகள் சொல்வது என்ன?

பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்லப்பிராணி
செல்லப்பிராணி

``பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய், நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்..." என்று என்னதான் ரொமான்டிக்காக பாடல்கள் இருந்தாலும் உண்மையில் பெண்களுக்கு அவர்கள் தூங்கும்போது தொந்தரவு செய்தால் பிடிக்கவே பிடிக்காது.

செல்லப்பிராணி
செல்லப்பிராணி

அதனால்தான் பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாகவும், அப்போதுதான் அவர்கள் அதிக நிம்மதியாக இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும்வரை பெண்களுக்கு உள்ள வேலைகளைச் சொல்லி மாளாது. காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகள், அதை முடித்தவுடன் அலுவலக வேலைகள், பிறகு மீண்டும் வீட்டு வேலைகள் என்று பெண்களின் ஒருநாள் பொழுது தொடர்கதையாகிக் கொண்டிருக்கும்நிலையில் அவர்கள் ஓய்வெடுக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் நேரம் மட்டும்தான்.

செல்லப்பிராணி
செல்லப்பிராணி

அப்படி அவர்கள் தூங்கும்போது தங்கள் வாழ்க்கைத்துணையின் அணைப்பில் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அணைத்தபடி உறங்கவே அதிகம் விரும்புவதாகவும் அந்த உறக்கம் அவர்களுக்கு நிம்மதியையும் மன அமைதியையும் தருவதாகவும் அமெரிக்கவில் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான கிறிஸ்டி எல். ஹாஃப்மேன், கெய்லீ ஸ்டட்ஸ் மற்றும் டெர்ரி ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்லப்பிராணிகள் பெரும்பாலானோரின் குடும்ப உறுப்பினர்களாக மாறிக்கொண்டு வருகின்றன. வேலைசெய்யும் இடங்களுக்கே தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அழைத்துவரலாம் என்ற நிலைகூட வந்துவிட்டது. இதற்குக் காரணம் செல்லப்பிராணிகளைப் போல் நம் மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியவை வேறெதுவுமில்லை.

அதிகம் பேசும் பெண்... அதை  விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பெண்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், செல்லப்பிராணிகளுடன் உறங்கும்போது அவர்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தும் கனவுகள் ஏற்படுவது குறைவதாகவும்" கூறப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி
செல்லப்பிராணி

ஆக, பெண்களே..நீங்களும் உங்கள் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதைப் பற்றி யோசிக்கத் தொடங்குங்கள். ஆண்களே... நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணைக்குச் செல்லப்பிராணிகளைப் பரிசளிப்பதைப் பற்றி சிந்தியுங்கள்.