Published:Updated:

அம்மா, அப்பா, நான், ராகுல், வரு, பூஜா...

தாய்மை: உறவுகள் உணர்வுகள் பகிரும் ரேயான்

பிரீமியம் ஸ்டோரி

நடிகை ராதிகாவின் அடையாளங்களில் ஒன்றான அதே வெடிச்சிரிப்பு, அவரின் மகள் ரேயானிடமும்... அம்மாவைப் போலவே மகளும் போல்டு அண்டு பியூட்டிஃபுல் பர்சனாலிட்டி.

செலிபிரிட்டி வாரிசு என்பதைத் தனக்கான விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்துவோர் மத்தியில் ரேயானோ, அப்படி எந்தச் சாயலையும் விரும்பாதவராக இருக்கிறார். அம்மாவின் ராடான் நிறுவனத்தில் 'ஹெட் ஆஃப் நியூ மீடியா' எனும் பொறுப்பில், பொறுப்பாகப் பணியாற்றிவருகிறார்.

‘`அம்மாவும் அப்பாவும்தானே செலிபிரிட்டீஸ்... அவங்க பொண்ணுங் கிறதாலயே நானும் செலிபிரிட்டினு சொல்லிக்க முடியாதில்லையா?’’ என்று சொல்கிற ரேயான், வெறும் பேச்சுக்காக அல்ல, இயல்பிலும் அப்படித்தான்.

``டெலிவரிக்குப் போறவரைக்கும் அம்மாவோட கம்பெனியில வேலை பார்த்திருக்கேன். பிரேக் முடிஞ்சு மறுபடி அந்த வேலைகள்ல பிசியாயிடுவேன்’’ என்று அத்தனை சின்சியராகச் சொல்லும் ரேயானை ராதிகாவின் கைகளில் குழந்தையாகப் பார்த்ததே இன்னும் மறக்கவில்லை. அதற்குள் ரேயான் கைகளில் இரண்டு குழந்தைகள்.

 கணவர் குழந்தைகளுடன் ரேயான்
கணவர் குழந்தைகளுடன் ரேயான்

``என் சைல்டுஹுட் நாள்கள் ரொம்ப ஸ்பெஷலானவை. அம்மா எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அதேநேரம் என் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே, ஆனுவல் டேனு எதையும் விட்டுக்கொடுக்காம வந்திருக்காங்க. சிங்கிள் மதரா சில வருஷங்கள் அம்மாபட்ட சிரமங்களை, சந்திச்ச போராட்டங்களை நான் பார்த்திருக்கேன்.

ஹார்டுவொர்க் மட்டும்தான் வாழ்க்கையில உதவும்னு தினம் எனக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. அதைத் தன் லைஃப்லயும் அப்ளை பண்ணினவங்க. ராடான் கம்பெனி ஆரம்பிச்சபோது, சித்தி சீரியல் ஆரம்பிச்சபோதெல்லாம் அவங்க பட்ட கஷ்டங்கள் எனக்கு இன்னும்கூட மறக்கலை. இந்த சொசைட்டியில சிங்கிள் மதரா ரிஸ்க் நிறைஞ்ச ஒரு பிசினஸை ஆரம்பிச்சு நடத்தறது அந்தக் காலத்துல அவ்வளவு சாதாரண விஷயமில்லை. எவ்வளவு கஷ்டம் வந்தபோதும் அவங்க விட்டுக்கொடுத்ததே இல்லை. இன்னிக்கு அம்மா இருக்கிற நிலைக்கு அந்த உழைப்பும் மன தைரியமும்தான் காரணம்...’’ - இடைவெளியில்லாமல் அம்மா புராணம் படித்தவர்,

``அப்பாவைப்பத்திச் சொல்லவே வேணாம். அவருடைய டிரஸ்ஸிங், நடிப்புன்னு எல்லாத்தையும் கிண்டலடிப்பேன். என்னதான் ஓட்டினாலும் அம்மாவையும் அப்பாவையும் அவ்வளவு பிடிக்கும். அவங்க சேர்ந்து நடிச்ச ‘வானம் கொட்டட்டும்’ படத்தை ரொம்ப ரசிசேன்.

அம்மா, அப்பா மட்டுமல்ல, ராகுல், வரு, பூஜானு நாங்க எல்லாருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி. தம்பி ராகுலுக்கும் எனக்கும் 12 வயசு வித்தியாசம். அவன் எனக்கு முதல் குழந்தை மாதிரி. அம்மாவும் அப்பாவும் ஷூட்டிங்ல பிசியா இருந்தபோது நான்தான் அவனைப் பார்த்துக்கிட்டேன். நானும் அவனும் எல்லா விஷயங்களையும் பேசுவோம்.

ராதிகா - சரத்குமார்
ராதிகா - சரத்குமார்

அப்புறம் என் வாழ்க்கையின் முக்கியமான பர்சன் என் கணவர் மிதுன். ரொம்ப அமைதி. கல்யாணமாகி நாலு வருஷங்களாகப் போகுது. எங்களுக்குள்ளே இருக்கிறது வெறும் லவ்னு சிம்பிளா சொல்லிட முடியாது. அதைத் தாண்டின பரஸ்பர நட்பும் மரியாதையும்தான் எங்க அந்நியோன்யத்தை நாளுக்கு நாள் அழகாக்கிட்டிருக்கு. கிரிக்கெட் பிளேயர். ஆனா வீட்டுக்குள்ள அன்பான கணவர், பாசக்கார அப்பா, எங்கம்மா, அப்பாவுக்கு அருமையான மருமகன்...’’ திகட்டத் திகட்ட உறவுகளின் மகிமை பேசுகிறார்.

``லாக்டெளன் நாள்கள் நிறைய பாடங்களைக் கத்துக் கொடுத்திட்டிருக்கு. பொறுமையைக் கத்துக்கொடுத்திருக்கு. எதுக்கும் ஆசைப்படாம, பதற்றப்படாம பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்காம அந்தந்த நாளை ரசிச்சு வாழவேண்டியதன் அவசியத்தைக் கத்துக்கொடுத்திருக்கு. இப்போ வாழ்க்கை இன்னும் அழகா இருக்கு...’’

- பாசத்தில் தொடங்கி, பாசிட்டிவிட்டியில் முடிகிறது ரேயானின் பேச்சு.

படம் உதவி: Mommy Shots by Amritha

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு