Published:Updated:

காண்டம் கருத்தடைக்கு மட்டுமே அல்ல; இவற்றுக்கும்தான்! - காமத்துக்கு மரியாதை - 19

Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

விறைப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் வைப்ரேட்டருடன்கூடிய காண்டம் பயன்படுத்தலாம். வைப்ரேட்டரின் தூண்டுதல் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விறைப்புத்தன்மையைப் பெறலாம். மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தயாரான காண்டமும் இருக்கிறது.

காண்டம் கருத்தடைக்கு மட்டுமே அல்ல; இவற்றுக்கும்தான்! - காமத்துக்கு மரியாதை - 19

விறைப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் வைப்ரேட்டருடன்கூடிய காண்டம் பயன்படுத்தலாம். வைப்ரேட்டரின் தூண்டுதல் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விறைப்புத்தன்மையைப் பெறலாம். மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தயாரான காண்டமும் இருக்கிறது.

Published:Updated:
Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

ஆங்கிலக் கதையொன்று. அதில் வருகிற அப்பா கேரக்டர், தன் பிள்ளைகளில் ஒருவனை `காண்டம் கிழிந்ததால் பிறந்த மகன்' என்று ஜாலியாகக் கலாய்ப்பார். காதல் வளர்க்கவும் காமத்துக்கு மரியாதை செய்யவும் தம்பதிகள் காண்டம் பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels

``காண்டம் என்றாலே குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவதற்குப் பயன்படுத்துவது மட்டுமல்ல. உலகின் 70 சதவிகித ஆண்களுக்கு விந்து முந்துதல் பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னையை சிறிது நேரம் தள்ளிப்போடும் காண்டம்கூட இருக்கிறது. இந்த வகை ஆணுறைக்குள் இருக்கிற `அனஸ்தஸ்டிக் ஜெல்' ஆணுறுப்பின் ஆர்கசத்தை சற்றுக் குறைத்து விறைப்படைவதை கொஞ்ச நேரம் நீட்டிக்கச் செய்யும். இதனால், விந்து முந்துதலும் தள்ளிப்போடப்படும்.

விறைப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் வைப்ரேட்டருடன் கூடிய காண்டம் பயன்படுத்தலாம். வைப்ரேட்டரின் தூண்டுதல் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விறைப்புத் தன்மையைப் பெறலாம். மனைவியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தயாரான காண்டமும் இருக்கிறது. இதன் மேல் இருக்கிற புள்ளிகள் பெண்ணின் ஆர்கசத்தைத் தூண்டுவதற்கு உதவி செய்யும். இவற்றைத் தவிர, ஐஸ்க்ரீம்போல காண்டம்களிலும் பல ஃபிளேவர்ஸ் இருக்கின்றன. சிலவற்றை சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில்கூட தயாரிக்கிறார்கள். பெண்களுக்கான காண்டம்களும் இருக்கின்றன.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

ஆணுறையும் சரி, பெண்ணுறையும் சரி, குழந்தைப் பிறப்பை 98 சதவிகிதம் வரை தடுக்கக்கூடியதே. இதைத் தவிர உறவின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்களையும் வரவிடாமல் தடுக்கும். காப்பர் டி போன்ற சில கருத்தடை சாதனங்கள் கருவுறுவதை மட்டுமே தடுக்க, காண்டம் அதனுடன் பால்வினைத் தொற்று நோய்களையும் தடுப்பதென்பது நல்ல விஷயம்தானே'' என்றவர், ஆணுறை தொடர்பான சில விழிப்புணர்வு டிப்ஸையும் வழங்கினார்.

``உணவுப் பொருள்களின் காலாவதி தேதியில் காட்டுகிற கவனத்தை, மக்கள் மற்ற விஷயங்களிலும் காட்ட வேண்டும். முக்கியமாக ஆணுறை வாங்குவதிலும்... தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். கட்டாயம் காலாவதி ஆகியிருக்கக் கூடாது. காலாவதியானது பயன்படுத்துகையில் கிழிந்துவிடலாம். நூறு பேரில் 2 அல்லது 3 பேருக்கு இப்படி நிகழ்வதாகத் தெரிகிறது. ஆணுறைகளைக் கழுவி விட்டு மறுபடியும் பயன்படுத்துப வர்களும் இருக்கிறார்கள். இப்படிச் செய்யவே கூடாது. கணவனுக்கோ, மனைவிக்கோ காண்டம் மறைக்காத பகுதியில் வைரஸால் வருகிற மரு இருந்தால், அது ஒருவருக்கொருவர் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Loc Dang from Pexels

ஆர்கசத்தைத் தூண்டுகிற காண்டம்கூட தற்போது விற்பனையில் இருக்கிறது. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்தலாம். உணவும் உறக்கமும் போலத்தான் காமமும். தேவைப்படாத கருவுறுதலில் அதைத் தொலைக்காமல் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசிக்கொண்டிருக்கிறோம். கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

வாசகர் கேள்வி: ``ஆண்குறி இடது புறமாக சற்று வளைந்து காணப்படுகிறது. விறைப்புத்தன்மை சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்வது டாக்டர்?"

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

டாக்டர் பதில்: ``இடது புறமாக சற்று வளைந்திருப்பதால் பிரச்னையில்லை. விறைப்புத்தன்மை எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்று நீங்கள் கேள்வியில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதால், என்னால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், பாலியல் மருத்துவரை சந்தியுங்கள்."

மரியாதை செய்வோம்!