Published:Updated:

`நீங்கள்தான் உண்மையான ஜென்டில்மேன்!' -மனைவியின் உடையை ஏந்திக்கொண்ட ஷாருக்; புகழும் ரசிகர்கள்

ஷாருக்கான், தன் மனைவி உடையின் பின்புறத்தில் நீண்டிருந்த அந்த 'ட்ரெயின்' தரையில் தவழ்வதைக் கண்டவுடன் அதை எடுத்து தன் கைகளில் ஏந்திக்கொண்டார்.

ஷாருக்கான், கௌரிகான்
ஷாருக்கான், கௌரிகான் ( instagram.com )

"வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல" - என்ற டயலாக் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமல்ல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கும் கனகச்சிதமாகப் பொருந்தும்.

ஷாருக்கான், கௌரிகான்
ஷாருக்கான், கௌரிகான்
instagram.com

தன் இளமை மாறாத அழகாலும் துள்ளலான நடிப்பாலும் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் ஷாருக், பொதுஇடங்களில் நடந்துகொள்ளும் விதத்தாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் 'வோக் எக்ஸ் நைகா ஃபேஷன்' நடத்திய 'தி பவர் லிஸ்ட் 2019' என்ற விருது வழங்கும் விழா கடந்த திங்கள்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது. பாலிவுட் ஸ்டார்கள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் சிறந்த ஸ்டைலிஷ் ஸ்டார்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஷாருக்கான், கௌரிகான்
ஷாருக்கான், கௌரிகான்
instagram.com

இதில் பிரபல நட்சத்திர தம்பதியினரான ஷாருக்கான், அவரின் மனைவி கௌரிகானுக்கு இந்த ஆண்டின் மிகவும் ஸ்டைலிஷ் ஜோடி என்ற விருது வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஷாருக்கான் - கௌரி இருவரும் இரவின் நிறத்தை அள்ளி பூசிக்கொண்டதுபோல கறுப்பு நிறத்தில் உடையணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர்.

சாதாரணமாகவே இவர்கள் இருவரும் இணைந்து செல்லும் விழாக்களில் இவர்கள் அணிந்து செல்லும் உடைகள் அதிகம் பேசப்படும். அதற்குக் காரணம் கௌரிகான்தான். இவர் ஒரு ஃபேஷன் டிசைனர்.

`சோஷியல் மீடியா ஆக்சஸை எங்ககிட்ட கொடு!' - பார்ட்டி, பாய் ஃப்ரெண்ட்ஸ்... பெற்றோரின் ஜாலி தண்டனை

இந்த விழாவுக்கு ஷாருக் கறுப்பு நிற கோட்-சூட்டில் மேன்லியாக வந்திருந்தார். கௌரிகான் கறுப்பு நிற கவுனில் வந்திருந்தார். இந்தக் கவுனின் ஹைலைட்டே அதில் இருந்த  ஹாலோகிராபிக்  பளபளப்பும் கவுனின் பின்புறம் தரைவரை நீண்டு படர்ந்திருந்த 'ட்ரெயின்' எனப்படும் துணியும்தான்.

விழா அரங்கத்தில் கௌரிகான் முன் நடக்க அவரைப் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்த ஷாருக்கான் மனைவியின் உடையின் பின்புறத்தில் நீண்டிருந்த அந்த 'ட்ரெயின்' தரையில் தவழ்வதைக் கண்டவுடன் அதை எடுத்து தன் கைகளில் ஏந்திக்கொண்டார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஷாருக்கானின் இந்தச் செயலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவரின் ரசிகர்கள் ஷாருக்-கெளரிதான் உண்மையான ``ரப்னே பனா டி ஜோடி'' என்று புகழ்ந்தும், ஷாருக்கானை ``நீங்கள்தான் உண்மையான ஜென்டில்மேன்'' என்று பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஷாருக்-கெளரி தம்பதியினர் தங்கள் 28-ம் திருமண ஆண்டில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.