Published:Updated:

``நானும் அவரும் பிரிஞ்சதுக்கு இதுதான் காரணம்!" - மனம் திறக்கும் ஷாலு ஷம்மு

சனா

தன் காதலரை ஏன் பிரிந்தேன் என்பது பற்றி மனம் திறக்கிறார் ஷாலு ஷம்மு.

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு

ஓர் ஆணும், பெண்ணும் நண்பர்களா இருக்கிறது நல்ல விஷயம்தான். எனக்கு மேடினு ஆண் நண்பன் இருக்கான். நான் என்ன சொல்லப்போறேங்கிறதை நான் சொல்லுறதுக்கு முன்னாடியே அதுதான் விஷயம்னு கண்டுபிடிச்சிடுவான். அஞ்சு வருஷம் எங்களுடையதுதான். என்னோட நண்பன் எப்போதுமே எனக்கு பார்ட்னர் ஆக முடியாது. நட்பும் காதலும் வேற வேறனு நான் நினைப்பேன்'' என்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினார் ஷாலு ஷம்மு. சமீபத்தில் 'மீ டு' விவகாரத்தில் தம் எண்ணங்களை வெளிப்படையாக இவர் பேசியது பலரை ஆச்சர்யப்படுத்தியது. நண்பரோடு இவர் ஆடிய நடனம் சமூக ஊடகத்தில் கடுமையாக ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டாலும், அவற்றை எதிர்த்து தம் கருத்துகளைப் பகிர்ந்தவர்.

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு

உங்களைத் திருமணம் பண்றவங்ககிட்ட எந்த மாதிரியான குணாதிசயங்கள் இருக்கணும்னு நினைக்குறீங்க?

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு

முதலில் என்னை நல்லா புரிஞ்சுக்கணும். என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணக் கூடாது. என்னோட கரியருக்கு உறுதுணையா இருக்கணும். மொத்ததுல எனக்கு நல்ல நண்பனா இருக்கணும். ரெண்டு வருஷமா ஒருத்தரைக் காதலிச்சேன். அவரும் என்னைக் காதலிச்சார். 'Long Distance' ரிலேசன்ஷிப்னு சொல்லலாம். அவர் சிங்கப்பூரில் இருந்தார். அதனால எங்களுக்கு நேரம், காலம் எல்லாம் ரொம்ப பெரிய தொல்லையா இருந்ததுனு சொல்லலாம். அவருக்கு நேரம் இருந்தப்போ நான் இந்தியாவுல பிஸியா இருப்பேன். நான் ப்ரீயா இருந்தப்போ அவர் அங்கே பிஸியா இருந்தார். ரெண்டு பேரும் பேசுறதே பெரிய விஷயமா இருந்தது. இதனால எங்க ரிலேசன்ஷிப்பை சரியா கொண்டு போக முடியல. அதனாலதான் பிரேக் அப் பண்ணிட்டோம். வேற எந்தப் பிரச்னையும் இல்லை.

இப்போல்லாம் நிறைய பிரேக் அப் நடக்குது. அதுக்கு என்ன காரணம்னு நினைக்குறீங்க?

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு

எல்லாரும் ஓப்பனா பேசிட்டா எந்தப் பிரச்னையும் இல்லை. மறைச்சு ஒரு விஷயத்தை பண்றப்போதான் பிரச்னையே ஆரம்பம் ஆகுது. அதே மாதிரி சின்ன விஷயமெல்லாம் வாக்குவாதமா மாறுச்சுனா ரிலேசன்ஷிப்பில் நிம்மதியே இல்லாம போயிரும். வீண் வார்த்தைகளை தவிர்க்கிறது நல்லது. நாம நேசிக்கிறவங்ககிட்ட இருந்து எதிர்பாராத கடினமான வார்த்தைகள் வந்தா அதைத் தாங்கிக்க முடியாது. அதனால ஒரு ரிலேசன்ஷிப்பில்அவங்ககிட்ட இருந்து சில வார்த்தைகள் வர்றப்போ அதுதான் பிரிவுக்கு முக்கியமான காரணமா இருக்கும். முடிந்தளவுக்கு இதையெல்லாம் தவிர்க்கிறதுதான் நல்லது.

லிவிங் டு கெதர் ரிலேசன்ஷிப் சரியா தவறா?

ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு

தப்பெல்லாம் இல்லை. அது சம்பந்தப்பட்டவங்களோட தனிப்பட்ட விருப்பம். அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கிறதுல அவங்க தெளிவா இருந்தா போதும். எந்தத் தப்பும் பண்ணலனு அவங்களுக்குத் தெரிஞ்சா போதும். வெளியே இருக்கிறவங்க என்ன நினைக்குறாங்க என்று நினைக்கத் தேவையில்லை.

" 'ஏ/சி போட்டிருக்கேன், உள்ளே போ'னு சொன்னப்போ, நடுங்கிட்டேன்!" - நடிகை ஷாலு ஷாமு

LGBTQ பற்றி உங்களுடய கருத்து என்ன?

இதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும் தப்பு இல்லை. ஒருத்தவங்க என்னை நினைக்குறாங்களோ அதைதான் பண்றாங்க. இதைத்தான் சுதந்திரம்னு சொல்றோம். வெளிநாடுகளிலிருந்து நிறைய விஷயங்களை நம்ம நாட்டுக்குக் கொண்டு வந்துட்டுதான் இருக்கோம். இப்போ இருக்கிற எல்லாரும் எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிட்டுதான் செய்றாங்க. அதனாலதான் எல்லாருக்கும் எல்லாமே தெரிய வருது. அவங்க பண்ற விஷயத்துல அவங்க சந்தோஷமா இருக்காங்க. அதுதான் அவங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குதுனா அவங்க விருப்பத்துக்கே விட்டரலாம். நம்ம யாருக்கும் தீர்ப்பு சொல்லணும்னு அவசியம் இல்லை. முடிஞ்ச அவங்களுக்கு கவுன்சில் கொடுத்துப் பார்க்கலாம். அதுக்குப் பிறகு அவங்க எடுத்த முடிவில் அவங்க உறுதியா இருந்தா விட்டுறது நல்லது.