Published:Updated:

லாக்டௌன்... அமெரிக்காவில் அதிகம் வசிக்கும் சிங்கிள் மதர்களுக்கு அதிகரித்துள்ள துயரம்!

சிங்கிள் மதர்
சிங்கிள் மதர் ( Representational Image )

அமெரிக்காவில் மட்டுமல்ல... உலகம் முழுக்கவே சிங்கிள் மதர்களின் நிலை லாக்டௌனால் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இது சுகாதாரப் பாதிப்பாக மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கோவிட்-19ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை எட்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Single Mother
Single Mother
Representational Image

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு பிரத்யேகப் பிரச்னை கவனிக்கவைக்கிறது. உலகிலேயே, சிங்கிள் பேரன்ட்டுடன் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மொத்தக் குழந்தைகளில் கால் பகுதியினர் சிங்கிள் பேரன்ட்டுடன் வசிக்கின்றனர். கொரோனா தொற்று கடுமையாகப் பாதித்துள்ள அமெரிக்க நகரமான நியூயார்க்கில், 4,25,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒற்றைப் பெற்றோருடன் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கிள் மதர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிங்கிள் அம்மாக்களில் பெரும்பான்மையினர் வேலைக்குச் செல்பவர்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் எனப் பணியாற்றுபவர்கள். தங்கள் குழந்தைகளை டே கேர் மற்றும் பள்ளிகளில் விட்டுச்செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். ஆனால், இந்த லாக்டௌனில் இந்தப் பெண்கள் அனைவரும் வேலையின்றி இருக்கும் நிலையில், குடும்பத்தின் ஒரே வருமானமும் நின்றுபோனதால், இந்தப் பெண்களின் வீட்டுப் பொருளாதார நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கிறது.

Money
Money
Representational Image

இன்னொரு பக்கம், பெரும்பாலான வேலைக்கான கோரிக்கைகளும் பெண்களிடமிருந்துதான் வருகின்றன என்பதை அமெரிக்காவின் பல மாநிலங்களின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நியூயார்க் பகுதியில், மார்ச் கடைசி இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையின்மைக் கோரிக்கைகளில், பாதிக்கும் மேற்பட்டவை பெண்களிடமிருந்து வந்தவை. இத்தனை கோரிக்கைகள் பெண்களிடமிருந்து வருவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மருத்துவமனை.. நம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை! #Corona

அமெரிக்காவில் மட்டுமல்ல... உலகம் முழுக்கவே சிங்கிள் மதர்களின் நிலை லாக்டௌனால் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் குடும்பத்தின் பிரெட் வின்னராகவும், இன்னொரு பக்கம் ஹோம் மேக்கராகவும் ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு, அன்றாடச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு