Published:Updated:

மொரட்டு சிங்கிள்ஸ் மனசுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தா... ஒரு பெண்ணின் பார்வையில்! #HappySinglesDay

சிங்கிள்

'ம்ம்ம்...'கெத்து... கெத்து' இந்த வார்த்தைலதான் விழுந்துட்டேன்... இல்லன்னா என் அத்தை பொண்ணு லவ் யூ சொன்னப்பவே ஓகே சொல்லிருப்பேனே!' என்று புலம்பும் சிங்கிள் பசங்களே... இன்னிக்குப் போய் நீங்கள் புலம்பலாமா?

மொரட்டு சிங்கிள்ஸ் மனசுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தா... ஒரு பெண்ணின் பார்வையில்! #HappySinglesDay

'ம்ம்ம்...'கெத்து... கெத்து' இந்த வார்த்தைலதான் விழுந்துட்டேன்... இல்லன்னா என் அத்தை பொண்ணு லவ் யூ சொன்னப்பவே ஓகே சொல்லிருப்பேனே!' என்று புலம்பும் சிங்கிள் பசங்களே... இன்னிக்குப் போய் நீங்கள் புலம்பலாமா?

Published:Updated:
சிங்கிள்

'நீங்க கமிட்டடா?' என்றால் 'நான் மொரட்டு சிங்கிள்' என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ஒவ்வொரு சிங்கிள் பையனுக்குள்ளும் 'அப்புறம் ஏன்டா கண்ணு கலங்குது' மொமன்ட் இருக்கத்தான் செய்கிறது!

சிங்கிள்ஸ்
சிங்கிள்ஸ்

`நீங்க இன்னுமா சிங்களா இருக்கீங்க?' என்று யாராவது கேட்டுவிட்டால், 'தனியா வந்தேன்; தனியா போவேன்; சொந்தம் பந்தம் தேவையில்ல' என்று 'மாரி' படப் பாடலை முணுமுணுத்துச் செல்லும் மொரட்டு சிங்கிள் பசங்க மனசுக்குள், 'ஒரு வசந்த மாளிகை' சிவாஜி குமுறிக்கொண்டு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'நானா கமிட்டாக மாட்டுறேன்? நான் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அதுக்கு கல்யாணம் ஆகிடுது; இல்லன்னா அதுக்கு வேற யார்கூடவாவது கமிட் ஆகிடுது. என்னோட ராசி அப்படி!' என மைண்ட் வாய்ஸில் புலம்பிக்கொண்டிருக்கும் சிங்கிள்ஸே... என்ன சொன்னாலும் நீங்க கெத்துதான்!

சிங்கிள்ஸ்
சிங்கிள்ஸ்
jimmyjoy

'அட நீங்க வேற... நானே ஜோடி ஜோடியா காதலர்களைப் பார்க்கிறப்போ எல்லாம் ரத்தக் கண்ணீர் வடிச்சிட்டிருக்கேன். 'நான் கமிட்டே ஆக மாட்டேன்டா'ன்னு சொன்ன, என்கூட சுத்திக்கிட்டிருந்த ஃப்ரெண்ட்ஸுங்குற துரோகிங்க எல்லாம் இப்போ அவனுங்க ஆளுங்ககூட டேட் போயிட்டு இருக்கப்போ, 'மொரட்டு சிங்கள்' மீம்ஸுக்கு எல்லாம் 'ஹா ஹா' போட்டுட்டு இருக்கேன் நான்! இதுதான் கெத்தா? வயிறு எரியுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ம்ம்ம்... 'கெத்து... கெத்து'! இந்த வார்த்தையிலதான் விழுந்துட்டேன். இல்லைன்னா என் அத்தை பொண்ணு லவ் யூ சொன்னப்பவே ஓகே சொல்லிருப்பேனே!' - புலம்பலோ புலம்பலென்று இருக்கும் சிங்கிள் பசங்களே... இன்னிக்குப் போய் நீங்கள் புலம்பலாமா?

சிங்கிள்ஸ்
சிங்கிள்ஸ்

'இன்னிக்கு என்ன' என்கிறீர்களா? இன்று உங்களுக்கான நாள்தான். புரியவில்லையா? அட இன்று 'Single's Day'ங்க! சுதந்திரம், சுதந்திரம்னு சொல்வாங்களே... அதுக்கு உண்மையான சொந்தக்காரங்க நீங்கதாங்க! எந்தெந்த வகையில எல்லாம் தெரியுமா? மேல படிங்க..!

'வாட்ஸ்ஆப்'ல லாஸ்ட் சீனை மறைக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்ல. ராத்திரி 12 மணிக்கும் உங்க மொபைலை ஆன்லைன்ல வெச்சிட்டே தூங்கலாம்.

'இப்பவே வெளியில எங்கேயாவது கூட்டிட்டுப் போ'ன்னு உங்களுக்கு யாரும் ஆர்டர் போட மாட்டாங்க (அதான் யாரும் இல்லையே). அப்படி யாராவது ரெக்வஸ்ட் பண்ணிக் கேட்டாலும், குளிக்காமக் கொள்ளாம சென்ட் மட்டும் அடிச்சிட்டுப் போக வேண்டிய அவசியமும் அவசரமும் உங்களுக்கு இல்லையே. ஏன்னா உங்க காட்டுல நீங்கதான் பாஸ் ராஜா!

சிங்கிள்ஸ்
சிங்கிள்ஸ்

'மாசக் கடைசில என் ஆளுக்கு பர்த்டே வருதுடா, கிஃப்ட் வாங்கணும்', 'ரெஸ்ட்டாரன்டுக்கு வந்தேன்டா, பில்லு அதிகமாகிட்டு. ஆயிரம் ரூபாயை கூகுள் பேல போட்டு விடுடா'ன்னு அசிங்கமா யாரிடமும் போய் கெஞ்ச வேண்டாம்.

எந்தப் படம் வந்தாலும் முதல் நாள், முதல் ஷோ பார்க்கலாம்... யாருக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் காதலிக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகப் படு மொக்கையான படத்தை வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டிய தலையெழுத்து இல்லை

சிங்கிள்ஸ்
சிங்கிள்ஸ்

முக்கியமாக, உங்க உயிர்த் தோழர்களிடம், அதாவது உங்களை மாதிரியே திரிந்துகொண்டிருக்கும் மொரட்டு சிங்கள் பசங்களுடன் நாள் முழுக்க ஊர் சுத்தலாம். அதைவிட சிறப்பான சுதந்திரமா, உங்க 'Crush'-களுடன் நாள் முழுக்க கடலை போட்டுக் கொண்டிருக்கலாம். இதுக்கு மேலே சிங்கிள்ஸுக்கு வேற என்னங்க வேண்டும்?!

'Happy Single's Day' மொரட்டு சிங்கிள் பசங்களா... அடுத்த வருடமும் இதேபோல மொரட்டு சிங்கிளாவே இருக்க வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism