Published:Updated:

சிரிக்கிற தாம்பத்யத்துக்கு ஆயுள் அதிகம்... ஆய்வுகள் சொல்லும் உண்மை!

நீங்கள் பேரழகனாக, பேரழகியாக இருந்தாலும் நகைச்சுவை உணர்ச்சி இல்லையென்றால், மற்றவர்களால் விரும்பப்படுவதற்கு வாய்ப்புக்குறைச்சல்தான்.

 கணவன் மனைவி
கணவன் மனைவி

கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இருக்க வேண்டும்; மரியாதை இருக்க வேண்டும்; காதல் இருக்க வேண்டும் என பல `வேண்டும்'களை இதுநாள்வரைக்கும் அடுக்கிக்கொண்டிருந்தோம்.

 கணவன் - மனைவி
கணவன் - மனைவி

கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த சமீபத்திய ஆய்வு ஒன்று, கணவன் மனைவிக்கு நகைச்சுவை உணர்ச்சி இருந்தால், தாம்பத்யம் அதன் கடைசித்துளி வரைக்கும் மகிழ்வோடும் நிறைவோடும் இருக்கும் என்ற புதுத் தகவலைச் சொல்லியிருக்கிறது.

`50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி!' - இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி

கடந்த 30 வருடங்களாக, 15,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த முடிவுதான் மேலே சொன்னது. இதனுடன் இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் இருக்கிறது. அதாவது, கணவனோ, மனைவியோ இருவரில் ஒருவர் மட்டுமே நகைச்சுவையுணர்ச்சி கொண்டவராக இருந்தால் பிரயோஜனமில்லையாம்.

 கணவன் மனைவி
கணவன் மனைவி

இருவருக்குமே `ஹா ஹா ஹா' உணர்வு இருந்தால்தான், இந்த ஆய்வு முடிவு உங்கள் வாழ்க்கையில் வொர்க் அவுட் ஆகுமாம். நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்து ஆய்வறிக்கையொன்று, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவர்கள், மற்றவர்களை தம்பக்கம் ஈர்த்துவிடுவதில் வல்லவர்கள்.

``உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைப்பது எப்படி?" - விரிவான வழிகாட்டி

இவர்கள் பழகுவதற்குச் சுலபமானவர்கள். நீங்கள் பேரழகனாக, பேரழகியாக இருந்தாலும் நகைச்சுவை உணர்ச்சி இல்லையென்றால், மற்றவர்களால் விரும்பப்படுவதற்கு வாய்ப்புக்குறைச்சல்தான் என்றிருக்கிறது.

 கணவன் மனைவி
கணவன் மனைவி

இன்னொரு முக்கியமான விஷயம், தம்பதிகள் மன உளைச்சலாக இருக்கிற நேரங்களில், `வொய் பிளட்;, `சேம் பிளட்' மாதிரி வடிவேலு காமெடிகளைச் சொல்லிச் சிரித்தால் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரந்து, ஸ்ட்ரெஸ்ஸை விரட்டுமாம். ஸ்ட்ரெஸ் இல்லாத தாம்பத்யத்துக்கு ஆயுள் அதிகம். சேர்ந்து சிரிக்கிற தம்பதிகள் கடைசிவரை சேர்ந்தே இருப்பார்கள் என்று அழுத்தமாகச் சொல்கின்றன ஆய்வு முடிவுகள். ஸோ, இணையோடு சேர்ந்து சிரிங்க மக்களே..!