லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நவீன அம்மாக்களின் உலகம் எப்படியிருக்கிறது? - சவால்கள் முதல் சந்தோஷம் வரை...

அன்னையர் தினம் ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்னையர் தினம் ஸ்பெஷல்

அன்னையர் தினம் ஸ்பெஷல்

இந்த உலகின் ஆகச்சிறந்த உறவு ‘அம்மா’. எத்தனை வயதானாலும் அது அப்படித்தான்.

முந்தைய தலைமுறை அம்மாக்கள் குடும்பம், குழந்தைகள், வேலை என எல்லாவற்றையும் எளிதாகக் கையாளத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய நவீன அம்மாக்களுக்கு குடும்பம், குழந்தைகள், வேலையுடன் சமூக அழுத்தமும் கூடிவிட்டது. ‘நான் நல்ல அம்மாதானா...’ என்ற கேள்வியும் குற்ற உணர்வும் பல அம்மாக்களுக்கு இருப்பதையும் பார்க்கிறோம்.

அன்னையர் தினம் ஸ்பெஷல்
அன்னையர் தினம் ஸ்பெஷல்

நவீன அம்மாக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றுக் கான தீர்வுகள், இன்றைய அம்மாக்களின் மன நிலை... பிள்ளைகளின் மனநிலை... இவை குறித்து ஓர் அலசல்...

மனுலட்சுமி
மனுலட்சுமி

‘மீ டைம்’ முக்கியம் அம்மாக்களே... மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி

‘`இன்றைய நவீன அம்மாக்களுக்கு பிரசவம் பற்றியும், அதற்குப் பின்பு ஏற்படும் உடல் மாற்றங்கள் பற்றியும் நிறைய பயம் இருக்கிறது. டெலிவரிக்கு பிறகும் எடை குறையாததால் பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பது, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, யோகா ஆகியவற்றின் மூலம் எடையை சரி செய்துவிடலாம்.

அடுத்ததாக தாய்ப்பால் கொடுப்பது குறித்த பயம்... தாய்ப்பால் குறைவாகச் சுரந்தால் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. பொறுமையாக குழந்தைகளுக்கு பாலூட்ட முயற்சி செய்யலாம். வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ, மருத் துவரிடமோ உதவி கேட்கலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் இரவில் தூங்கமாட்டார்கள். அதனால் இரவில் கண் விழித்திருப்பது, பாலூட்டுவது, குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது என அனைத்தும் அம்மாக்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மேலும் பிரசவத்துக்குப் பிறகு ஹார்மோன் மாற்றங் களால் சில பெண்களுக்கு போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் ஏற்படலாம். அதை வெளிப் படையாகச் சொல்லி, குடும்பத்தார் உதவி யோடும் மருத்துவ உதவியோடும் மீளலாம். புதிதாகக் குழந்தைபெற்ற பெண்கள், எந் நேரமும் குழந்தை குறித்த சிந்தனையிலேயே இல்லாமல், தமக்கென்றும் சில மணி நேரத்தை ‘மீ டைமாக’ ஒதுக்கிக்கொள்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆசுவாசம் தரும்.’’

 பிருந்தா
பிருந்தா

குற்ற உணர்வு தேவையில்லை! - உளவியல் ஆலோசகர் பிருந்தா

‘அப்பல்லாம் நாங்க இப்படி குழந்தைகளை வளர்க்கல’ என்று சொல்லி, இன்றைய நவீன அம்மாக்களை குற்ற வாளிக் கூண்டில் நிறுத்துவது சகஜமாக நடக்கிறது.

குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாத நிலையிலும் பல பெண்களால் விடுப்பு எடுக்க முடிவதில்லை. இது அவர்களுக்கு ஒருவித குற்ற உணர்வைத் தருகிறது. குழந்தை களுக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பது, கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது என அந்தக் குற்ற உணர்ச்சியை சரிக் கட்ட முயல்கிறார்கள். இது குழந்தைகளை பலவீனமாக்கி, சிறு ஏமாற்றத்தைக்கூட தாங்க முடியாதவர்களாக மாற்றும் என்பது அம்மாக் களுக்குத் தெரிவதில்லை. எனவே இந்த விஷயத்தில் சமூகம் தன்மேல் வைக்கும் குற்றச் சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதை நவீன அம்மாக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட வேண்டும். குறைந்த நேரமாக இருந்தாலும் சிறந்த நேரமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அந்த நேரத்தை குழந்தைகளுடன் பேச, நல்ல விஷயங்களைப் பழக்க, விளையாட... இப்படிப் பலவற்றுக்கும் செலவழிக்கலாம்.’’

ஓவியா
ஓவியா

குழந்தை வளர்ப்பு சமூகத்தின் பொறுப்பு! - சமூக ஆர்வலர் ஓவியா

‘`பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும் பொருளாதார தேவைக்காகவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். அதனால் ‘நீ வேலைக்குச் செல்வதால்தான் குழந்தையை சரியாகப் பார்த்துக் கொள்வ தில்லை’ என்று சமூகமும், குடும்பமும் அவர்களைக் குறைசொல்ல முடியாது. எல்லாக் காலக்கட்டத்திலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால், இப்போதுதான் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் பேசுகிறோம்.

இதற்கு சமூக கூடங்கள் நல்ல தீர்வாக இருக்கும். ஒரு குழந்தைக்கு 50 ரூபாய் பொம்மை வைத்து விளையாடக்கூட வசதி இருக்காது. இன்னொரு குழந்தை 5,000 ரூபாய் பொம்மையை உடைத்து விளையாடிக் கொண்டிருக்கும். அரசு, சமூக கூடங்களை அமைக்கும்போது இந்த இரு குழந்தைகளும் ஒரே இடத்தில், ஒரே சூழலில் வளர்வார்கள். மேலும் பெண்கள் தமக்காகவும், தன்னுடைய குடும்பத்துக்காகவும் இன்னும் கொஞ்சம் எளிதாக உழைக்க முடியும், முன்னேற முடியும். எனவே குழந்தை வளர்ப்பு தனிநபர் பொறுப்பல்ல... சமூகத்தின் பொறுப்பு.’’

சுஜா வருணி
சுஜா வருணி

ஃபேமிலி சப்போர்ட் இருந்தா ஜெயிச்சிடலாம்! - நடிகை சுஜா வருணி

‘`எல்லா காலத்துலயும் அம்மாக்கள் குழந்தைகளை எப்படி வளர்த்தாங்களோ, அப்படிதான் இப்பவும் குழந்தைகளை வளர்க்கறோம். அப்போ இல்லாத மாற்றம்னா இப்போ டெக்னாலஜி மட்டும் தான். அந்தக் காலத்துல குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைன்னா டாக்டரை நேர்ல போய் தான் பார்க்கணும். ஆனா, இப்போ... ஒரு போன் பண்ணிக் கேட்டுக்கலாம்.

இப்படி டெக்னாலஜி பல வழிகள்ல உதவியா இருக்கு.

குடும்பத்தோட சப்போர்ட் இருந்தா ஒரு குழந்தையை இல்லை, ஒரு ஸ்கூலையே பார்த்துக்கலாம். என் விஷயத்துல கணவரோட சப்போர்ட் இருக்கிறதாலதான் என்னால வேலையையும் பார்த்துக்கிட்டு, குழந்தை யையும் கவனிச்சுக்க முடியுது. அந்த சப்போர்ட் இருந்தா எல்லா பெண்களும் ஈஸியா ஜெயிச்சிடலாம்.’’

 சாரதா
சாரதா

டெலிவரிக்கு அப்புறம் ரெஸ்ட் கிடைக்கலை... - சாரதா, போட்டோகிராபர்

‘`நான் 10 வருஷமா போட்டோகிராபரா இருக் கேன். பாப்பா வயித்துல இருந்தபோது வேலை விஷயமா சுத்திக்கிட்டே இருப்பேன். அப்பல்லாம் நிறைய பசிக்கும். மயக்கம் போட்டுக்கூட விழுந்திருக்கேன். ஆனாலும் டெலிவரிக்கு ஒரு வாரம் முன்னாடி வரை வேலை செஞ்சுட்டுதான் இருந்தேன். நான் சொந்தமா ஸ்டூடியோ வெச்சுருக்கேன். என்கிட்ட 10 பேர் வேலை செய்யுறாங்க. ஒரு தொழில்முனைவோரா என்னால பெருசா பிரேக் எடுக்க முடியாது. அதனால பாப்பா பிறந்த 15 நாள்லேயே வேலைக்குத் திரும்பிட்டேன். இப்போ பாப்பாவுக்கு ஒரு வயசு ஆகுது. எங்கேயாவது தூரமா போனாலும், லேட் ஆகும்னாலும் தாய்ப் பாலை பம்ப் பண்ணி வெச்சுட்டுப் போயிடுவேன். என்னோட ஸ்டூடியோக்கு பேபி போட்டோ ஷூட்டுக்கு வர்ற குழந் தைங்க அழுதா எனக்கு உடனே பாப்பா ஞாபகம் வந்துரும்.

டெலிவரிக்கு அப்புறம் கண்டிப்பா உடம்புக்கு ரெஸ்ட் கொடுக்கணும், சரியா சாப்பிடணும். ஆனா, எனக்கு அதெல்லாம் கிடைக்கல. என்னோட வேலை அப்படி... ஆனாலும் எல்லா சவால்களையும் தாண்டி ஓடிட்டே இருக்கேன்.’’

 ப.தாரகப் பிரியா
ப.தாரகப் பிரியா

தடுமாற்றம் தேவையில்லை! - ப.தாரகப் பிரியா, உதவி மேலாளர், ஹெச்ஆர், ரைட்டர் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்

``மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்பும்போது பெண்கள், குடும்பம், குழந்தை, வேலை என்று சிறிது தடுமாறு கிறார்கள். அந்தத் தடு மாற்றம் தேவையில்லை.

பெண்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து வரும்போது அவர்களுடைய பணிக் காலத்தில் சிறிது இடைவெளி விழுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதைக் காரணம் காட்டி அவர் களுக்கான பணி உயர்வையோ, சம்பள உயர்வையோ நிச்சயம் தடுக்க முடியாது.

குடும்பம், குழந்தை வளர்ப்பு, வேலை போன்றவை தரும் அழுத்தங்களை யோகா, நடைப்பயிற்சி செய்வது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன்மூலம் சரி செய்து கொள்ளலாம். இன்று பெண்களுக்கு பணி யிடங்களில் அவர்களின் குழுக்களிடம் இருந்து நிறைய உதவிகள் கிடைக்கின்றன. அருமையான பல சட்ட திட்டங்களையும் உருவாக்கியுள்ளனர். அதனால் இன்றைய நவீன அம்மாக்கள் வேலையிலும், குழந்தை வளர்ப்பிலும் கவலையின்றி கலக்கலாக அசத்தலாம்.''

***

எங்க அம்மாதான் பெஸ்ட்!

நவீன அம்மாக்களின் குழந்தை வளர்ப்பு குறித்து சமுதாயமும் குடும்பத்தாரும் ஆயிரம் குறைகள் சொல்ல லாம்... பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்..? அத்தனை பேரின் பார்வையிலும் அவரவர் அம்மாவே பெஸ்ட்டாக இருக்கிறார்.

``நான் பி.டெக் முதல் வருஷம் படிக்கிறேன். என் அம்மா புரொஃபஸரா இருந்தாங்க. ஆனா, இப்போ வீட்டுல தான் இருக்காங்க. அம்மா வேலைக் குப் போயிட்டு இருந்தப்ப கொஞ்சம் டென்ஷனா இருப்பாங்க. ஆனா இப்போ முழு நேரமும் என்னை பாத்துக்குறாங்க. அம்மா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எனக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்காங்க. என் அம்மா எல்லாத்துலயும் பெஸ்ட்!’’ - ப.நந்தினி, திருவண்ணாமலை

``என் அம்மா வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றாங்க. அவங்க வேலை நேரம்போக மீதி நேரம் எல்லாம் என்னோடதான் இருப்பாங்க. விளையாட்டு, படிப்புனு எல்லாத் துலயும் ஹெல்ப் பண்ணுவாங்க. சமையல்ல இருந்து டீச்சிங் வரைக்கும் என்னோட அம்மா எல்லாத்துலயும் பெஸ்ட்!’’ - விஷ்ணு வர்தன், சென்னை

 ப.நந்தினி,  விஷ்ணு வர்தன்,  பாவனா
ப.நந்தினி, விஷ்ணு வர்தன், பாவனா

``என் அம்மா இங்கிலீஷ் புரொஃபஸர். நான் டென்த் வந்த தாலயும், வேலைல நிறைய டென்ஷன் இருந்ததாலும் அம்மா இப்போ வீட்லதான் இருக்காங்க. வேலைக்குப் போனபோதும் சரி, இப்பவும் சரி... அம்மா என்னை நல்லா பாத்துப்பாங்க.

எங்கம்மாவோட சின்ன வயசுல அவங்கம்மா, அதான் என் பாட்டி தினமும் வீட்டு வேலை செய்யச் சொல்வாங் களாம். அம்மா எனக்கும் வீட்டு வேலைகள் எல்லாத்தையும் கத்துக் கொடுத்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்சிருக் கணுமங்கிறதுக்காக... ஆனாலும் பாட்டி மாதிரி அம்மா என்னை வேலை வாங்கினது இல்ல. அந்த வகையில எங்கம்மா தான் பெஸ்ட்!’’ - பாவனா, ஈரோடு