கட்டுரைகள்
Published:Updated:

மன உளைச்சல் தரும் Toxic Relationship... உங்கள் உறவில் இருக்கிறதா?

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்

இரண்டு பேர் நேசிக்கிறார்கள். திடீரென ஒரு பிரச்னை வருகிறது. அடுத்த நாளிலிருந்து அதில் ஒருவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வாட்ஸ் அப்பில் பிளாக் செய்கிறார். ஃபேஸ்புக்கில் அன்ஃபிரெண்ட் செய்கிறார்.

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் (Toxic Relationship). 2K கிட்ஸ் மத்தியில் அதிகம் பேசப்படுகிற ஒன்று. அதென்ன டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்? சிம்பிளாகச் சொன்னால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற நபருடன் நேரம் செலவழித்த பிறகு மகிழ்ச்சியாக உணர்ந்தீர்களென்றால், அது ஹேப்பி ரிலேஷன்ஷிப். மாறாக, பேசிய பின்னர், முன்னர் இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து, மேற்கொண்டு மனக்கசப்பும் சேர்ந்துகொண்டால், நீங்கள் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது சாம்பிள் மட்டுமே. எவையெல்லாம் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்புக்கான அறிகுறிகள் என மேரேஜ் அண்ட் ஃபேமிலி தெரபிஸ்ட் வர்ஷா சாமி சொல்கிறார், கேளுங்கள்...

எது ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்?

கருத்துப் பரிமாற்றங்களைப் போலவே கருத்து மோதல்களும் ரிலேஷன்ஷிப்பில் சகஜம்தான். இந்த மோதல் தரும் பாதிப்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் சுலபமாக வெளிவந்து விடுவார்கள். அதன்பிறகும் அவர்களிடையே லவ், டேட்டிங் எல்லாம் வழக்கம்போலவே இருக்கும். இதுதான் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப். இந்த சகஜ நிலைமை உங்கள் உறவில் இல்லையென்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாக இருப்பதற்கோ, மாறுவதற்கோ வாய்ப்பிருக்கிறது.

மன உளைச்சல் தரும் Toxic  Relationship... உங்கள் உறவில் இருக்கிறதா?

உங்களுடையது எந்த வகை?

ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களில், ஒருவர் அதை முக்கியத்துவம் வாய்ந்த உறவு என நினைத்துக்கொண்டிருக்க, இன்னொருவர் அதை சாதாரண உறவுதான் என்றுநினைத்துக்கொண்டிருந்தால்... அந்த உறவு டாக்ஸிக் ஆக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சோதனை மேல் சோதனையா?! (Testing Behaviour)

தன் காதலன்/காதலி, தன்னை உண்மையாகக் காதலிக்கிறாரா என்பதை விதவிதமாகப் பரிசோதித்துக் கொண்டிருப்பார்கள். தன்னிடம் அடிக்கடி ஐ லவ் யூ சொன்னால்தான் உண்மையான காதல், தான் கூப்பிடுகிற இடத்துக்குச் சொன்ன நேரத்துக்கு வந்தால்தான் உண்மையான காதல் என்று இந்தப் பரிசோதனைகள் நீளும். பெரும்பாலான உறவில் இந்தப் பரிசோதனைகள் இருக்கின்றன என்றாலும், அளவுக்கு அதிகமானால் இதுவே டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பாகி காதலனை/காதலியைக் கஷ்டப்படுத்திவிடும்.

வர்ஷா சாமி
வர்ஷா சாமி

எக்கச்சக்கக் காதல்; திடீர் இறுக்கம்! (Love bombing Relationship)

வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் தன் காதலை இயல்புக்கு அதிகமாகவே வெளிப்படுத்துவார்கள் சிலர். ஆனால், திடீரென கோபம் வந்துவிட்டால் எல்லாம் போச்சு... இறுக்கமாகிவிடுவார்கள். கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால், காரணத்தைச் சொல்லவே மாட்டார்கள். தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு துணையையும் காயப்படுத்துவார்கள். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இதுவும் மோசமான வகையே. இந்த வகை, இந்தத் தலைமுறை மத்தியில் அதிகமாக இருக்கிறது.

‘நீ தப்பாப் புரிஞ்சிட்டிருக்கே...' (Gaslighting Relationship)

தன்னுடைய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தாமல், தன் காதலனை/காதலியை ‘நீ தப்பாப் புரிஞ்சிட்டிருக்கே...' என்று பேச ஆரம்பிப்பார்கள். துணையின் மெல்லிய உணர்வுகளையும் எண்ணங்களையும், தன்னுடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்களைத் தெரிவிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பார்கள். காலப்போக்கில் காதலனை/காதலியை, ‘நாமதான் தப்போ...' என்று யோசிக்க வைத்துவிடுவார்கள்.

மன உளைச்சல் தரும் Toxic  Relationship... உங்கள் உறவில் இருக்கிறதா?

குறை சொல்லிகள்!

காதலனை/காதலியை எதற்கெடுத்தாலும் ‘இது தப்பு; அது தப்பு' என்று குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்யும் எல்லாச் செயல்களிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். டாக்ஸிக்கில் இதுவொரு வகை.

சின்னச் சண்டை; பெரிய வார்த்தை!

காதலில் சண்டை வருவது சகஜம்தான். ஆனால், சண்டையை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் உங்கள் ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமாக இருக்கிறதா, டாக்ஸிக்காக இருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும். சின்னச் சின்னச் சண்டைகளில்கூட சிலர் கெட்ட வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். இதுவும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்தான். ஓர் ஆரோக்கியமான உறவில் ஐந்து விவாதங்கள் இயல்பாக நடக்கின்றன என்றால், ஒரு விவாதம் கோபத்திலோ, சண்டையிலோ முடியலாம். சமாதானம் அதிகமாகவும், சண்டை குறைவாகவும் இருக்க வேண்டும். ரோலர் கோஸ்டர்போல நிலையில்லாமல் இருந்தால் அதுவும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்தான்.

மன உளைச்சல் தரும் Toxic  Relationship... உங்கள் உறவில் இருக்கிறதா?

அடுத்தொரு ரிலேஷன்ஷிப்பையும் பாதிக்கும்! (Ghosting)

இரண்டு பேர் நேசிக்கிறார்கள். திடீரென ஒரு பிரச்னை வருகிறது. அடுத்த நாளிலிருந்து அதில் ஒருவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வாட்ஸ் அப்பில் பிளாக் செய்கிறார். ஃபேஸ்புக்கில் அன்ஃபிரெண்ட் செய்கிறார். போனையும் எடுக்காமல் இருக்கிறார். மொத்தத்தில், பிரச்னைக்கு முன்பு வரைக்கும் தன்மீது தன் காதலன்/காதலிக்கு இருந்த நம்பிக்கையை மொத்தமாக உடைக்கிறார். தவிர்க்கப்பட்ட நபரோ மிகுந்த காயப்பட்டிருப்பார், ‘என்னாச்சோ' என்று பயந்துகொண்டிருப்பார். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இது மிக மிக மோசமான வகை. இப்படிப்பட்ட ஆணால்/பெண்ணால் பாதிக்கப்பட்டவர் அடுத்தொரு ரிலேஷன்ஷிப்பில் ஈடுபடவே பயப்படுவார். அப்படியே ஈடுபட்டாலும் முன்போலவே பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் எந்நேரமும் பாதுகாப்பின்மை உணர்வுடனே இருப்பார். ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் அடுத்து வருகிற உறவையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது பாருங்கள்.

மொத்தத்தில், உங்கள் மகிழ்ச்சியையும் வாழ்க்கையையும் காதலன்/காதலி பாதிக்கிறார் என்றால், அது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப். காலத்தே அதைக் கண்டறிந்து அதிலிருந்து வெளிவந்துவிடுவதுதான் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு!