Published:Updated:

`மனைவி சொன்ன ஒரு வார்த்தை; வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நோய்'- காதலுக்காக 7 வருடமாகப் போராடும் கணவர்!

ஸ்டீவ் கர்டோ - கேம்ரே
ஸ்டீவ் கர்டோ - கேம்ரே

`7 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் எங்கள் முதல் குழந்தையின் வரவை எதிர்நோக்கி இருந்தோம். எங்கள் இருவர் வாழ்க்கையிலும் மிகவும் உற்சாகமான நேரம் அது.'

`என் மனைவிக்கு நான் யார் என்று தெரியவில்லை. எங்கள் குழந்தையை யார் என்று அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் நான் முற்றிலும் உடைந்துபோனேன். ஆனால், அப்போதும் அவள் என்னிடம் `நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னாள். அந்த வார்த்தைகள்தான் இன்றுவரை என்னை தூண்டிக்கொண்டே இருக்கின்றன. முன்னோக்கிச் செல்ல இந்த வார்த்தைகள்தான் எனக்கு ஆயுதமாக இருந்தன.' இந்த வரிகள் ஏதோ கற்பனைக் கதைகளில் பேசப்பட்டவை அல்ல. மூளை பக்கவாதத்தால் பாதித்து அனைத்தையும் மறந்த தன் மனைவி மீது அதீத காதல் கொண்ட 38 வயது காதல் கணவர் எழுதியது.

ஸ்டீவ் கர்டோ - கேம்ரே
ஸ்டீவ் கர்டோ - கேம்ரே

ஸ்டீவ் கர்டோ அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி கேம்ரே. ஏழு வருடங்களுக்கு முன்பு இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. கர்ப்ப காலத்தின்போது ப்ரீக்லாம்ப்சியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார் கேம்ரே. பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சில நேரங்களில் வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த நோயினால் பிரசவத்துக்குப் பின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு நினைவு சக்தியை இழந்தார் கேம்ரே. பழைய நிகழ்வுகள் எதுவும் அவர் நினைவில் இல்லை.

இருந்தாலும், ஒருபுறம் கைக்குழந்தையுடனும் மறுபுறம் நினைவுகளை இழந்த மனைவியையும் வைத்து வாழத்தொடங்கிய ஸ்டீவ் 7 வருடங்களாக குழந்தையை சிறப்பாக வளர்த்ததுடன், தன் காதல் மனைவி குறித்து நினைவுகளை, அவருடன் சுற்றித்திரிந்த அழகான தருணங்களை புத்தமாக எழுதி தனது திருமண நாளில் பரிசளித்திருக்கிறார்.

சர்ப்ரைஸ் காட்டினார்; சிரிப்பை அடக்க முடியவில்லை! - மனைவியின் கவலையைப் போக்கிய கணவர் செய்தது என்ன?

அதில் தங்களது வாழ்க்கையில் என்ன நேர்ந்தது என்பதையும் விவரித்துள்ளவர், ``நான் முதலில் கேம்ரேவைச் சந்தித்தபோது ​முதல் பார்வையிலேயே அது காதலாக மாறியது. அந்த இரவைத் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு அந்தத் தருணங்கள் அழகாக வந்து செல்கின்றன. ஆனால், என் மனைவிக்கு அந்த நினைவுகள் இல்லாமல் போய்விட்டன. 7 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் எங்கள் முதல் குழந்தையின் வரவை எதிர்நோக்கி இருந்தோம். எங்கள் இருவர் வாழ்க்கையிலும் மிகவும் உற்சாகமான நேரம் அது.

ஸ்டீவ் கர்டோ - கேம்ரே
ஸ்டீவ் கர்டோ - கேம்ரே

பெற்றோராக மாறுவதில் உள்ள எதிர்பார்ப்புகளோடு கனவுகளில் திளைத்திருந்தோம். சரியாக 7-வது மாதம் ஒரு நாள் அவள் தொண்டையில் வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்குதான் எங்கள் வாழ்க்கை மாறியது. கேம்ரேவுக்கு ப்ரீக்லாம்ப்சியா இருப்பதாக நாங்கள் கண்டுபிடித்தோம், ஆனால், அதற்குள் எங்களின் கனவு `கேவின்’ பிறந்தான். குழந்தையின் உடல்நலத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியை மருத்துவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். கூடவே அந்த விஷயத்தையும் கூறினார்கள். துரதிர்ஷ்டவசமாக கேம்ரேவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனை இழந்ததால் கடுமையான மறதி பிரச்னைகள் ஏற்பட்டன. அவள் எல்லா நினைவுகளையும் மொத்தமாக இழந்துவிட்டாள்.

மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...! - வைரலாகும் புகைப்படம்

என் மனைவிக்கு நான் யார் என்று தெரியவில்லை. எங்கள் குழந்தையை யார் என்று அவளுக்குத் தெரியவாய்ப்பில்லை என்பதால், அந்த நேரத்தில் நான் முற்றிலும் உடைந்துபோனேன். இந்தச் சரியான தருணத்தில் நான் என் வாழ்க்கையின் அன்பை உணர்ந்தேன். சில மணிநேரங்களுக்கு முன்பு அவள் எப்படி நன்றாக இருந்தாள். நான் எங்கள் மகனை தனியாக வளர்க்கப் போகிறேன் என்பதையும் விரைவில் உணர்ந்தேன். எங்கள் குடும்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று மறுநாள் படுக்கையில் இருந்த அவள் முன் வாக்குறுதி அளித்தேன். அப்போதிலிருந்து, எங்கள் பயணம் புதியதாக தொடங்கியது.

ஸ்டீவ் கர்டோ - கேம்ரே
ஸ்டீவ் கர்டோ - கேம்ரே

கேம்ரே மருத்துவமனையை விட்டு வெளியேற 25 நாள்களும், கேவின் வெளியேற 35 நாள்களும் ஆயின. அவளையே அவளுக்கு யார் என்று தெரியாத நிலையில் என்னை நம்பத் தொடங்கினாள். அப்போதும் அவள் என்னிடம் `நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னாள். அந்த வார்த்தைகள்தான் இன்றுவரை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. நான் முன்னோக்கி நகர்வதை இந்த வார்த்தைகள் எளிதாக்கியது.

``பெண்ணால் இவ்வளவு வலி தாங்க முடியும்னு இப்போதான் புரிஞ்சது!'' - சுஜா வருணியின் கணவர்

பெற்றோர்களாக எங்கள் முதல் ஆண்டு சவால் நிறைந்தது. ஆனால், நாங்கள் எங்களால் இயன்றவரை சிறப்பாகச் செய்தோம். கேவின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள அவளுக்கு சுமார் 1 வருடம் ஆனது. எங்களுக்குச் சாதகமான விஷயங்கள் நிகழ்ந்தன. எங்கள் புதிய வாழ்க்கை சரியான திசையில் சென்றுகொண்டிருந்தன. ஒரு வருடம் முடிவதற்கு உள்ளாகவே கேம்ரேக்கு மற்றொரு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் அது தொடர்ந்துகொண்டே இருந்தது. 6 ஆண்டுகளில் சுமார் 400 வலிப்புத் தாக்கங்களை எதிர்கொண்டிருந்தாள். எங்கள் வாழ்க்கை மீண்டும் மீண்டும் சவாலாகவே சென்றுகொண்டிருந்தன.

ஸ்டீவ் கர்டோ - கேம்ரே
ஸ்டீவ் கர்டோ - கேம்ரே

மருந்துகள் ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே வேலைசெய்தன. எங்கள் வாழ்க்கையின் மோசமான எதிரியாக வலிப்பு நோய் இருந்தது. இதை ஒருபோதும் விரும்பவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை நரக வேதனையை அனுபவிப்பதைப் பார்ப்பது கடினம். ஆனால், 6 ஆண்டுகளாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கேம்ரே மற்றும் நான் எப்போதும் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எதிர்வரும் சிறந்த நாள்கள் குறித்து நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களின் குறிக்கோளை ஒருபோதும் கைவிடக் கூடாது.

ஃபேஸ்புக் நட்பழைப்பில் துளிர்த்த கார்த்திக் நேத்தாவின் காதல் கதை! #VikatanDiwaliMalar2019

எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதத்தை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கு ஒரு குடும்பம் உள்ளது" என எழுதி தன் மனைவி கூறிய `But I know I love you' என்ற வாக்கியத்தையே தனது புத்தகத்துக்கு தலைப்பாக வைத்து அந்தப் புத்தகத்தை காதல் மனைவிக்கு திருமண நாள் பரிசாக அளித்துள்ளார்.

புத்தகம் வெளியானவுடன் கேம்ரே மீது ஸ்டீவ் கொண்டிருந்த காதல் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஸ்டீவ், `` ஒரு குடும்பமாக நாங்கள் இன்றும் இங்கே அமர்ந்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் நம்பிக்கையை விட்டுவிடாததே என்று நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். என் மனைவியின் வலிமையைக் கண்டு ஆச்சர்யப்படுவதாகவும், அவள் ஓர் அம்மாவாக இருப்பதில் அவள் அவ்வளவு நல்லவள்.

புத்தகம்
புத்தகம்

கேம்ரே இன்னும் வலிப்பால் அவதிப்படுகிறார். ஆனால், அவளுடைய நினைவகம் மெதுவாக மேம்படுகிறது. புதிய நினைவுகளை உருவாக்க எதிர்பார்க்கிறாம். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், இன்று நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் என்ன செய்தோம் என்பதையும் என் மனைவியும் குழந்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பியே இந்தப் புத்தகத்தை எழுதினேன்" எனக் கூறியுள்ளார்.

இது காதல் இல்லை... அதையும் தாண்டி புனிதமானது!
அடுத்த கட்டுரைக்கு