Published:Updated:

அரியவகை புற்றுநோய், 6 கீமோ, வாழ்வதற்கான சிறிய வாய்ப்பு... புற்றிநோயிலிருந்து மீண்ட நடிகர் இர்ஃபான்!

நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான் ( facebook.com/irrfanofficial )

"எங்கள் வாழ்க்கையின் மிக நீளமான ஆண்டு இதுதான். இந்த ஓராண்டின் நேரம் அனைத்தையும் வலியிலும் நம்பிக்கையிலும் கடந்தோம்."

"என் வாழ்க்கை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. எதிர்பாராத சம்பவங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனக்குள்ளேயே ஒருவிதமான இணக்கமின்மை நிலவுகிறது. அது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது!"
இர்ஃபான் கான்
புற்றுநோய்க்கான நான்காவது கீமோதெரபி சிகிச்சையை எடுத்துக்கொண்ட பிறகு, பாலிவுட் நடிகர் இர்ஃபான் உதிர்த்த வார்த்தைகள் இவை.
Irrfan Khan
Irrfan Khan
facebook.com/irrfanofficial

உடல்ரீதியாக நிலையற்ற வாழ்க்கைக்குள் தள்ளப்படும் மிகச்சிலருக்கே இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது வாழ்க்கை. 51-வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான இர்ஃபான் கான்.

இந்தி திரைப்படங்களில் மட்டுமன்றி `ஸ்லம்டாக் மில்லினியர்', `தி அமேசிங் ஸ்பைடர்மேன்', `லைஃப் ஆஃப் பை', `ஜூராசிக் வேர்ல்டு' போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமாகவும் பலரின் இதயங்களை வென்றெடுத்தவர் இர்ஃபான். ஹாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக நடைபோடுவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை அவருக்கு. கிரிக்கெட்டில் திறமைசாலியான இர்ஃபானுக்கு அந்தத் துறையில் அடுத்த கட்டத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்தது.

Cancer
Cancer

அந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டுமானால் அதற்குப் பணம் செலுத்த வேண்டும். அதைச் செலுத்த இயலாமல் வாய்ப்பு கைநழுவிப் போனது. தேசிய நாடகப் பள்ளியில் சேர்வதற்கு ஆசைப்பட்டபோது அவரின் தந்தை உயிரிழந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய கனவுகளின் பின்னால் ஓட வேண்டுமா, குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டுமா என்ற நிலை.

இர்ஃபானின் தாயார் கனவுகளின் பின்னால் மகன் ஓடுவதை விரும்பவில்லை. தன்னைவிட்டு எங்கும் செல்லாமல் குடும்பப் பொறுப்புகளை ஏற்பதையே விரும்பினார். அதையும் ஏற்று, ஸ்காலர்ஷிப்பின் உதவியால் தேசிய நாடகப் பள்ளியில் நுழைந்தார் இர்ஃபான். அதன்பிறகு திரைப்படத் துறையில் நுழைந்து தன் கனவுகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.

`இர்ஃபான் திரையில் தோன்றினால் அவர் பேசும் வசனங்களைவிட அவர் கண்கள் அதிகம் பேசும்!' திரைப்பட விமர்சகர்களின் கருத்து இது.

தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை சிறப்பாக்கக் கூடுதலாக மெனக்கெடுவது இவரது சிறப்பு. நடிப்பில் தனக்கென்று முத்திரையைப் பதித்த இர்ஃபான் பெயர், பணம், புகழ் ஆகியவற்றுக்கிடையில் சந்தோஷமாக ஓடிக்கொண்டேயிருந்தபோது திடீரென வந்தது ஒரு ஸ்பீட் பிரேக்கர்.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்குத் தீவிர மஞ்சள்காமாலை நோய் பாதித்தது. சிகிச்சைக்குப் பிறகு அவரை ஓய்விலிருக்குமாறு அறிவுறுத்தினர்.

Irrfan Khan
Irrfan Khan
facebook.com/irrfanofficial
வலிக்கு முன்னால் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சுகள், ஆறுதல் வார்த்தைகள் என எதனாலும் என்னால் நிற்கமுடியவில்லை. கடவுளைவிட வலிதான் பெரியது!
நடிகர் இர்ஃபான் கான்

ஒரு மாதத்துக்குப் பிறகு இர்ஃபான் ட்விட்டரில் ஒரு போஸ்டை வெளியிட்டார். "சில நேரங்களில் நீங்கள் விழித்தெழும்பும்போது வாழ்க்கை உங்களை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கும். கடந்த 15 நாள்களாக என் வாழ்க்கை சன்பென்ஸ் நிறைந்த கதையாக மாறியிருக்கிறது. அதில் கொஞ்சம்தான் எனக்குத் தெரியும். என்னை ஏதோ ஓர் அரிதான நோய் தாக்கியிருக்கிறது.நான் எப்போதும் விட்டுக்கொடுத்ததேயில்லை.

எப்போதும்போல் இப்போதும் போராட்டத்தைத் தொடர்வேன். ஒரு வாரம் அல்லது பத்து நாள்களில் என் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் எனக்கு என்ன பிரச்னை என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வாழ்த்திக்கொண்டேயிருங்கள்."

நடிகர் இர்ஃபான் கான்
நடிகர் இர்ஃபான் கான்

பரிசோதனை முடிவில் அவருக்கு நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த அரிதான நோயானது ரத்தத்துக்கு ஹார்மோன்களை அனுப்பும் செல்களைப் பாதிக்கும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்களை ரத்தத்துக்குள் அனுப்பி இதயநோய்கள், ரத்த அழுத்த பாதிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிகிச்சைக்காக லண்டன் சென்றார் இர்ஃபான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இர்ஃபானின் மனைவியுடன் பேசிய ஓர் இயக்குநர் இர்ஃபானின் உடல், சிகிச்சையை நன்றாக ஏற்றுக்கொள்கிறது. விரைவில் கேமராவின் முன்னால் இர்ஃபான் நிற்பார் என்று எதிர்பார்ப்போம் என்று தெரிவித்திருந்தார்.

"நான் வேறு விதமாக விளையாடிக் கொண்டிருந்தேன். வேகமான ரயிலில் பயணம், பலபல கனவுகள், திட்டங்கள், குறிக்கோள்கள்... அதன் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று யாரோ ஒருவர் என் தோளைத் தட்டி, நீங்கள் சேர வேண்டிய இடம் வரப்போகிறது. அதனால் கீழே இறங்குங்கள் என்றார். நான் மிகவும் குழம்பிய நிலையில், இல்லை... இல்லை.. இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை என்றேன்.

கடல் அலையில் அடித்துச் செல்லும் தக்கையைப் போன்று வாழ்க்கையில் எந்த நிச்சயத்தன்மையும் இல்லை என்று உணர்ந்தேன். சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் பலமுறை சென்று வந்த பிறகு பயத்தினாலும், அதிர்ச்சியினாலும், குழப்பத்தினாலும், `இந்தப் பிரச்னையை இதுபோன்று நான் சந்திக்கக் கூடாது. நான் எனது காலை மிகவும் பலமாக ஊன்றி நிற்க வேண்டும்' என்று என் மகனிடம் என்னையும் அறியாமல் புலம்பியிருக்கிறேன்.

Actor Irrfan Khan
Actor Irrfan Khan

அதுவே என் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், அங்குதான் வலி என்னைத் தாக்கத் தொடங்கியது. வலியின் குணாதிசயத்தையும் பலத்தையும் அப்போதுதான் உணர்ந்தேன். வலிக்கு முன்னால் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சுகள், ஆறுதல் வார்த்தைகள் என எதனாலும் என்னால் நிற்கமுடியவில்லை. கடவுளைவிட வலிதான் பெரியது என்று நினைத்தேன்.

நான் 2 ஆண்டுகள் இருப்பேனா அல்லது 8 மாதங்களா அல்லது வெறும் 4 மாதங்களா என்ற விளைவை அறியவில்லை. ஆனாலும் இந்தப் புரிந்துணர்வு என்னைச் சரணடையவும், நம்பவும் வைத்திருக்கிறது. ஆனாலும் என்னுடைய தன்னம்பிக்கையை நான் இழக்கவில்லை. அது என்னுடைய உடலில் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது. எதற்கும் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்'' சிகிச்சையின் இடையே ஒரு பேட்டியில் இர்ஃபான் பேசிய நம்பிக்கை வார்த்தைகள் இவை.

நான் வாழ்வதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் அதிகரிக்குமானால், என் மனைவிக்காகவே வாழ விரும்புகிறேன்.
புற்றுநோயிலிருந்து மீண்ட இர்ஃபான்

ஆனால் வாழ்க்கை வேறு செய்தியை அவருக்கு வைத்திருந்தது. நோய் கண்டறியப்பட்டு சிகிக்சை தொடங்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு நான்கு சுழற்சி கீமோதெரபி சிகிச்சை செய்த பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நோயின் தாக்கம் நீங்கவில்லை என்ற முடிவு கிடைத்தது.

"இப்போது வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கிறேன். வாழ்க்கையில் எதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இன்னும் இரண்டு சுழற்சி கீமோதெரபி சிகிச்சை மீதம் இருக்கின்றன. அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார் இர்ஃபான்.

சிகிச்சைகள் தொடர்ந்தன. இர்ஃபானின் ரசிகர்களோ அவர் மீண்டும் வருவதற்கான வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் ஏறெடுத்துக்கொண்டே இருந்தனர். ஓராண்டுக்குப் பிறகு இர்ஃபானின் மனைவி சுதாபா, "எங்கள் வாழ்க்கையின் மிக நீளமான ஆண்டு இதுதான். இந்த ஓராண்டின் நேரம் அனைத்தையும் வலியிலும் நம்பிக்கையிலும் கடந்தோம்.

Fight against cancer
Fight against cancer
Vikatan

இந்த நாள்களில் நாங்கள் பல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகளாலும் வாழ்த்துகளாலும் நெகிழ்ந்துபோனோம். மீண்டும் ஒரு புதிய தொடக்கத்துக்கான சிறிய வாய்ப்பை இந்த உலகம் எங்களுக்கு வழங்கியிருக்கிறது. இன்றிலிருந்து நாங்கள் எங்கள் அன்றாடப் பணிகளுக்குத் திரும்புகிறோம். நடனமும் பாட்டும் மீண்டும் தொடரும்" என்று 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகவல் தெரிவித்திருந்தார்.

பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மீண்டும் கேமரா முன் தோன்றினார் இர்ஃபான். `அன்கிரேசி மீடியம்' என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஷூட்டிங்கில் இருக்கும்போதும் சில நேரங்களில் வலியாலும் சோர்வாலும் அவதிப்பட்டிருக்கிறார். இருப்பினும் பொறுத்துக்கொண்டு நடித்துக்கொடுத்திருக்கிறார்.

Actor Irrfan's wife Sutapa
Actor Irrfan's wife Sutapa

வரும் வெள்ளிக்கிழமை இந்த `அன்கிரேசி மீடியம்' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. "நோயுடனான இந்த நாள்கள் ரோலர் கோஸ்டர் போல இருக்கிறது. நான் இப்போது நலமாக இருக்கிறேனா என்றுகூட சொல்லத் தெரியவில்லை. என் உடல் சில நாள்கள் நன்றாக இருக்கிறது, சில நாள்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக்கொண்டே இருக்கிறேன்.

cancer
cancer
Aum

சிகிச்சையிலிருந்த நாள்கள்தான் என் மகன்களுடன் என்னால் நேரம் செலவழிக்க முடிந்தது. என் மனைவி சுதாப்தா 24 மணி நேரமும் எனக்காகவே வாழ்ந்தார். நான் வாழ்வதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் அதிகரிக்குமானால், என் மனைவிக்காகவே வாழ விரும்புகிறேன்" என்றும் `அனைவருடன் அன்பாக இருக்க வேண்டும்' என்ற மெசேஜை மட்டும் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் நெகிழ்ந்திருக்கிறார் இர்ஃபான்.

தற்போது 53 வயதாகும் இர்ஃபான் புற்றுநோயிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனினும் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.

Movie Zindagi Medium
Movie Zindagi Medium
பெண்கள் பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுமா?#Quiz

தனது பெயரின் ஸ்பெல்லிங்கை Irfan என்பதில் கூடுதலாக ஒரு 'R' சேர்த்து 'Irrfan' என்று முன்பே மாற்றிக்கொண்டார்.

"அதற்கு நியூமராலஜியெல்லாம் காரணமில்லை. என் பெயரில் கூடுதலாக உள்ள 'R'-ஐ அழுத்திச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றார்.

வாழ்க்கையின் மீதான உங்களது அழுத்தமான பிடிப்பும் எங்களுக்கும் பிடித்திருக்கிறது இர்ஃபான்!

அடுத்த கட்டுரைக்கு