கட்டுரைகள்
Published:Updated:

பிரேக் அப்... முடிவல்ல ஆரம்பம்!

பிரேக் அப்... முடிவல்ல ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேக் அப்... முடிவல்ல ஆரம்பம்!

வாழ்க்கை முழுவதும் ஒன்றாகப் பயணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தில் நிறைய கனவுகள் கண்டிருப்பீர்கள். உறவே இல்லையென்று ஆகும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

80’ஸ் கிட்ஸில் தொடங்கி 2கே கிட்ஸ்வரை எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை, ரிலேஷன்ஷிப் பிரேக் அப். அன்று, காதல் தோல்வி என்றால் ஆண்கள் தாடி வளர்ப்பது வழக்கம். இன்று, பிரேக் அப்புக்குப் பின் பெண்கள் ஹேர்கட் செய்துகொள்வது டிரெண்டு. பிரேக் அப்புக்குப் பின்னான கடின நாள்களை எதிர்கொள்வதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் வந்தனா.

‘‘பிரேக் அப்பின் பாதிப்பு என்பது, நீங்கள் அந்த நபருடன் எத்தனை ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்கள், எவ்வளவு நெருக்கமாக இருந்தீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். வருத்தங்களும், மனவேதனைகளும் நிச்சயம் இருக்கும். அதிலிருந்து வெளியே வர வேண்டுமானால், பிரேக் அப்பிற்கான காரணம் பற்றி யோசிக்காதீர்கள். யார் காரணம், யார் மீது தவறு என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். எனவே ‘காதல் போயின் சாதலா, இன்னொரு காதல் இல்லையா’ என அடுத்த வேலையைப் பாருங்கள்.

பிரேக் அப்... முடிவல்ல ஆரம்பம்!

வாழ்க்கை முழுவதும் ஒன்றாகப் பயணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தில் நிறைய கனவுகள் கண்டிருப்பீர்கள். உறவே இல்லையென்று ஆகும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்த ஒரு நபரை வற்புறுத்தி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்க வைக்க முடியாது. அதற்கு முயற்சியும் செய்யாதீர்கள்.

‘அவங்க இப்போ என்ன பண்ணிட்டு இருப்பாங்க?’ என்று உங்களை விட்டுச் சென்ற நபரைப் பற்றி யோசிக்காதீர்கள். அப்படி யோசித்தால் அவர் சோஷியல் மீடியாவில் இருக்கிறாரா, ஆன்லைனில் இருக்கிறாரா, உங்கள் ஸ்டேட்டஸைப் பார்க்கிறாரா என்றெல்லாம் கவனிக்கத் தோன்றும். ஒருவேளை உங்கள் ஸ்டேட்டஸை அவர் பார்த்திருந்தால், ஒருவேளை அவர் உங்கள் மீது இப்போதும் அன்பில் இருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றலாம். பார்க்கவில்லை என்றால், அவர் உங்களைப் புறக்கணிக்கிறார் என்று தோன்றலாம். இரண்டுமே தேவை யில்லாத மன அழுத்தத்தில் தள்ளும். எனவே பிரேக் அப் ஆன பிறகு சம்பந்தப்பட்டவரை அனைத்து சோஷியல் மீடியாவிலும், போனிலும் பிளாக் செய்வது நல்லது.

காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை போனில், சாட்டில், நேரில் உங்களுடன் பயணம் செய்தவர் திடீரென்று ஒரு நாள் தொடர்பில் இல்லை என்று ஆகும் போது, உங்களுடைய ரெகுலர் வேலை தடைப்பட்டது போன்றுதான் தோன்றும். அதிலிருந்து வெளியே வர மற்ற வேலைகளில் உங்களை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிரேக் அப்... முடிவல்ல ஆரம்பம்!

உங்களை விட்டுச் சென்றவரைப் பற்றி அவரின் நண்பர்களிடம் விசாரிப்பது, பேசுவது போன்றவற்றை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. நமக்கு இல்லாத ஒருவரிடம் கோபமும் பட வேண்டாம், அன்பும் செலுத்த வேண்டாம் என்ற தெளிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.விட்டுச் சென்றவர்கள் இனி வரப்போவதில்லை என்ற நிதர்சனத்தை முதலில் புரிந்துகொள்வது நல்லது. மீண்டும் மீண்டும் அவரிடம் சென்று அன்பைத் தேடி சுயமரியாதையை இழக்காதீர்கள். அது கூடுதல் மன உளைச்சலையே தரும். முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று கெத்தாக இருந்தாலே, நீங்கள் அந்த பிரேக் அப்பை எளிதாகக் கடந்துவிடலாம்.

பிரேக் அப்பிற்குப் பிறகு பலரும் செய்யும் தவறு... குறுகிய காலத்திலேயே இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவது. வருத்தத்தில் இருக்கும்போது உங்களுக்கு யாராவது ஆறுதல் சொன்னால்கூட, அவரை உங்கள் மனதுக்குப் பிடித்துப் போய்விடும். அவர்களிடம் அன்பைத் தேடத் தொடங்குவீர்கள். இந்தப் புதிய அன்பு என்பது ஒரு வெற்றிடத்தை நிரப்புவது போன்றுதான். இது சக்சஸ் ஆகும் என்று சொல்ல முடியாது. பிரேக் அப்பிற்குப் பிறகு உங்களை நீங்களே நன்கு புரிந்துகொண்டு, உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, உங்கள் ப்ளஸ், மைனஸ் பற்றியெல்லாம் தெரிந்துகொண்ட பின் இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவது நல்லது.

வந்தனா
வந்தனா

காதல் காலத்தில் நீங்கள் கொண்ட அன்பு இல்லாமல் போகும்போது, அது வெறுப்பாக மாறலாம். காதல் வெறுப்பாக மாறும்போது, அவரை வாழ விடக்கூடாது என்ற எண்ணம் தோன்றும். எனவே, வெறுப்பு சிந்தனை இல்லாமல் பிரிவை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சோகப் பாட்டு கேட்பது, மதுப் பழக்கத்திற்கு அடிமையாவது, எப்போதும் சோகமாக இருப்பது இவையெல்லாம் காதல் தோல்விக்கான அடையாளங்கள் என சினிமாக்கள் பதிய வைத்திருக்கின்றன. பிரேக் அப் ஆனதற்

காக நம் இயல்பை மாற்றி வாழ்க்கையைத் தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்ததுபோல் வாழ்க்கை நிச்சயம் மாறும்.