Published:Updated:

நல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா? - பெட்ரூம் கற்க கசடற - 12

Couple (Representational Image) ( Photo by Jonathan Borba from Pexels )

தூக்கத்துக்கும் பாலியல் பிரச்னைகளுக்கும் இடையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

நல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா? - பெட்ரூம் கற்க கசடற - 12

தூக்கத்துக்கும் பாலியல் பிரச்னைகளுக்கும் இடையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Jonathan Borba from Pexels )

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

- குறள்

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்!)

சிறப்பான தூக்கம், நல்ல உடலுறவு... இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கின்றன.

உங்கள் பாலியல் வாழ்க்கையை இன்பமயமாக்க, நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். அதே போல நல்ல தூக்கத்தைப் பெற்று அடுத்த நாளை உற்சாகமாகத் தொடங்க திருப்தியான செக்ஸ் செயல்பாடு அவசியம். ஆம்... இப்படித்தான் இவை இரண்டும் உங்கள் கட்டிலில் இணைந்து பிணைந்திருக்கின்றன.

குறிப்பாக, நடுத்தர வயது பெண்களின் பாலியல் செயலிழப்பு மோசமான தூக்கத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்துகிறது ஒரு புதிய ஆய்வு. நல்ல செக்ஸ் மற்றும் நல்ல தூக்கம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. அனுபவித்தவர்களும் இதற்கு சாட்சி சொல்வார்கள்!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Andrea Piacquadio from Pexels

தூக்கம் மட்டுமல்ல; திருப்திகரமான பாலியல் வாழ்க்கையானது உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தின் பல அம்சங்களை அதிகரிக்கிறது. மனநிலையிலிருந்து இதய ஆரோக்கியம் வரை அனைத்தையும் மேம்படுத்துகிறது.

இரவில் நல்ல தூக்கம் கிட்டவில்லையா? நீரிழிவு நோய் ஏற்கெனவே இருந்தால் அது எகிறவும், இல்லையெனில் வரவும் கூடிய அபாயத்தை அது அளிக்கும்; நோயெதிர்ப்பு செயலிழப்பு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளையும் உருவாக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. நன்றாக உறங்காத, மெனோபாஸை நெருங்கும் பெண்களின் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலியல் மற்றும் தூக்கம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?

நம் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றுமே பெரும்பாலும் ஒரு படுக்கையை உள்ளடக்கிதானே இருக்கிறது? தூக்கத்துக்கும் பாலியல் பிரச்னைகளுக்கும் இடையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், இந்த இரண்டுமே நடுத்தர வயதுப் பெண்களை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. சமீப ஆண்டுகளில் மிகவும் பொதுவான பிரச்னையாகவே இது மாறியிருக்கிறது.

போதுமான தூக்கம் இல்லாத நடுத்தர வயதுப் பெண்களில் பெரும்பான்மையானோருக்கு பாலியல் வாழ்வும் சிறப்பாக இல்லை என்பது ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடுத்தர வயதுப் பெண்களில் 26 சதவிகிதத்தினருக்கு கணிசமான தூக்கப் பிரச்னைகள் இருப்பது முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash

அதைத் தொடர்ந்த ஆராய்ச்சியில் மாதவிடாய் மாற்றத்தின்போது பாதிக்கும் மேற்பட்டோர் பல தூக்கப் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள் என்பது அறியப்பட்டது. இந்த இரண்டு ஆய்வுகளையும் பின்தொடர்ந்த இன்னோர் ஆய்வு அவர்களின் வாழ்வில் போதுமான அல்லது திருப்தியான செக்ஸ் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியது.

நடுத்தர வயதில் இருக்கும் பெண்களில் 43 சதவிகிதத்தினருக்கு பாலியல் பிரச்னைகள் உள்ளன. ஆசையின்மை, அதிருப்தி, ஆர்கஸம் கிட்டாமை, புணர்ச்சிப் பிரச்னைகள், வலி அல்லது வேறேதோ செக்ஸ் சிக்கல் இந்தக் காலகட்டத்தில் ஏற்படுகின்றன. மெனோபாஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்விலும் தூக்கமும் தாம்பத்தியமும் பிரிக்க முடியாத தொடர்பில் இருப்பது உறுதியாகியுள்ளது.

நடுத்தர வயது பெண்களின் கவலை, மனநிலை மற்றும் உறவு திருப்தி ஆகியவையே நல்ல உறக்கத்தை முடிவு செய்கின்றன. இது ஒரு பெண் தூங்கும் கால அளவுபற்றியது மட்டுமல்ல... அவள் தூங்குவதில் பிரச்னை இருக்கிறதா? உடல்நிலை எப்படியிருக்கிறது? அறையின் வெப்பநிலை உட்பட ஏதாவது ஒன்றால் அவளது தூக்கம் பாதிக்கப்படுகிறதா? அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் நேர்கிறதா? உறவுக்கு முன்போ, பின்போ ஒருவித பாதுகாப்பின்மையை உணர்கிறாளா? இப்படி சகல விஷயங்களையும் உள்ளடக்கியே மருத்துவ விஞ்ஞானிகள் இந்தப் பிரச்னையை ஆராய்கிறார்கள்.

இது முக்கியமானதொரு பாலியல் துயரம் என்பதைப் பல பெண்கள் உணர்வதில்லை. பொதுவாக, அவர்கள் யாரிடமும் இதுபற்றிப் பேசுவதில்லை. ஏன்... தனக்குத் தானே கூட, கேள்வியாகக் கேட்டுக்கொள்வதில்லை. உதாரணமாக, ஆசை குறைந்திருக்கிறது அல்லது ஆர்கஸத்தை அடைய முடியவில்லை என்பது வரை அவள் அறிவாள். ஆனால், அது தன்னைத் தொந்தரவு செய்து அன்றாட வாழ்வை பாதிக்கிறது என்பதை அந்தப் பெண் அடையாளம் காண்பதில்லை. அதை அவசியம் செய்ய வேண்டும்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

நடுத்தர வயது பெண்களிடையே செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 75 சதவிகித பெண்கள் மோசமான தூக்கத் தரத்தைப் புகாரளித்தனர், அவர்களில் 54 சதவிகிதத்தினருக்கு பாலியல் உறவு இல்லாமலோ, மோசமானதாகவோ இருந்தது. மற்ற காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மோசமான தூக்க தரம் கொண்ட பெண்கள் பாலியல் பிரச்னைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு 1.48 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல, பாலியலில் சுறுசுறுப்பான பெண்கள் நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவதும் உறுதியானது.

இரவின்போது, ஒரு நபர் தொடர்ச்சியான தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறார். இது ஒவ்வோர் இரவும் பல முறை மீண்டும் மீண்டும் வருகிறது. இந்தச் சுழற்சிகள் தடையின்றி நடக்கவும் பாலியல் உறவு உதவுகிறது. தூக்கத்தின் தரம் ஏன் காலத்தைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இதை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஆய்வுகள் நீடிக்கின்றன.

மோசமான, தரமற்ற தூக்கம்தான் மோசமான பாலியல் உறவுக்கு காரணமானதா அல்லது ஒரு பெண்ணின் தூக்க திறனைப் பாதிப்பதற்கு நல்ல பாலியல் உறவின்மை காரணமா என்பதையும் ஆராய்ச்சியாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை. கோழியா, முட்டையா கதைதான் இதிலும்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Loc Dang from Pexels

தர்க்கரீதியாகப் பார்த்தால், தூக்கத்தின் தரப் பிரச்னைகள் பாலியல் செயல்பாட்டை பாதிக்கும். ஏனென்றால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்கு அதிக ஈடுபாடு இருப்பதில்லை. ஆனால், அது உறவில் உள்ள ஒரு பிரச்னை காரணமாகவும் இருக்கலாம். அது தூக்க திறனைப் பாதிக்கிறது. அதனால், தூக்கம் அல்லது செக்ஸ்... இந்த இரண்டில் எதில் பிரச்னை இருந்தாலும் தீர்க்கப்படாமல் விட்டு விடாதீர்கள் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வில்லாத கால் நோய்க்குறி, பீதி தாக்குதல்கள், இரவு வியர்வை போன்ற மாதவிடாய் நின்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பொதுவாகவே மருத்துவர்கள் நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கம் அல்லது அவர்களின் பாலியல் வாழ்க்கை பற்றிக் கேட்பதில்லை. உங்கள் மருத்துவர் கேட்கவில்லையென்றாலும், அதை நீங்களே சொல்வது முக்கியம்.

பாலியல் செயல்பாட்டு பிரச்னைகள் கொண்ட பெண்கள் தங்கள் தூக்கத்தையும் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

- சஹானா