Published:Updated:

`விஜய் இல்லன்னா விஜய் சேதுபதி'... பெண்களின் `back up' உளவியல் பற்றி தெரியுமா ஆண்களே!

தன்னுடன் காதலில் இருக்கிற ஆண் சரியானவனாக இல்லையென்றாலோ, பிரேக் அப் ஆனாலோ, உயிரை விடுவதுபோல நெகட்டிவ்வாகவெல்லாம் யோசிக்காமல், தன்னை நேசிக்கிற இன்னொரு நபருடன் காதலாகி விடுகிறார்கள்!

Relationship
Relationship
`இது இல்லன்னா அது' என்ற `பேக் அப்' மனநிலை மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்றுதான். ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலைத் தவிர்க்க இந்த மனநிலையும் தேவைதான். ஆனால்..?

இந்தக் காலப் பெண்களில் 50 சதவிகிதத்தினர் தங்கள் ரிலேஷன்ஷிப்பில் 'பேக் அப்' வைத்திருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதாவது, தற்போது தன்னுடன் காதலில் இருக்கிற ஆண் சரியானவனாக இல்லையென்றாலோ, பிரேக் அப் ஆனாலோ, உயிரை விடுவதுபோல நெகட்டிவாகவெல்லாம் யோசிக்காமல், தன்னை நேசிக்கிற இன்னொரு நபருடன் காதலாகிவிடுகிறார்கள் பெண்கள் என்கிறது அந்த ஆய்வு. 'ஒன் போல்' (One Poll) என்ற நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தவிர, பெண்களின் 'பேக் அப்'பில் இருக்கிற அந்த நம்பிக்கைக்குரிய ஆண்கள் யாரெல்லாம் என்பதையும் சொல்லியிருக்கிறது.

Relationship
Relationship

பழைய நண்பர்கள்...

பள்ளி அல்லது கல்லூரி காலத்தில் தன்னை நேசித்த ஆண் அல்லது 'அட இவனை லவ் பண்ணா லைஃப் நல்லாருக்குமே' என்று தன்னை யோசிக்க வைத்த பழைய ஆண் நண்பனைத்தான், 'பேக் அப்'பிலிருந்து முதல் தேர்வாகப் பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்களாம். மனம் வெள்ளைத்தாள் போல இருந்த வயதில் தோன்றிய க்ரஷ், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்போதுமே தங்களை நேசிக்கும் என்கிற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாம்.

நன்கு அறிமுகமானவர்கள்...

இந்தப் பட்டியலில் அடுத்து எக்ஸ் பாய் ஃப்ரெண்ட், நெருங்கிய நண்பர், உடன் வேலைபார்ப்பவர், ஜிம்மில் அறிமுகமானவர் ஆகியோர் வருகிறார்கள். சில வருடங்கள் பழகிய காதல் சரிவராதபோது, தன்னுடன் பல வருடங்களாகப் பழகி வருகிற இவர்களில் ஒருவரை தங்களுடைய 'பேக் அப்' சாய்ஸாக தேர்ந்தெடுக்கிறார்கள் பெண்கள். இவர்கள் தன் மேல் பிரியமாக இருப்பார்கள்; தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

woman
woman

தங்களுக்காக எதையும் செய்கிற ஆண்கள்...

தன் மனதுக்குப் பிடித்த பெண் உதவி என்று கேட்டால், 'எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிற அன்பான ஆண்கள்'தான் பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். இந்த ஆய்வில் கலந்துகொண்ட 10 சதவிகிதப் பெண்கள், தங்களுக்காக எந்த நேரத்திலும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிற ஆண்களுக்கும் தங்கள் காதலுக்காக எதை வேண்டுமானாலும் துச்சமாக ஒதுக்கிவிட்டு வரக்கூடிய அளவுக்குத் தம் மேல் கண்மூடித்தனமான அன்பு வைத்திருக்கிற ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம் என்றிருக்கிறார்கள்.

ஒருதலைக் காதலர்கள்...

தங்களை ஒருதலையாகக் காதலித்து, பல வருடங்களாகத் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கிற ஆண்களின் அருமை இந்த நேரத்தில் எங்களுக்குத் தெரிந்துவிடும் என்றிருக்கிறார்கள், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 5 சதவிகிதப் பெண்கள். தான் நேசிப்பவரைவிட, தன்னை நேசிப்பவரைக் காதலிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற பழைய கோட்பாடுதான் இதற்குக் காரணம் என்று தனியாகச் சொல்ல தேவையில்லை.

காதல்
காதல்
`பள்ளித் தோழியைச் சந்தித்தால் தற்போதைய காதல் என்னவாகும்?'  -இளைஞரின் குழப்பம் #LetsSpeakRelationship

இந்த ஆய்வை நடத்திய 'ஒன் போல்' நிறுவனம், ரிலேஷன்ஷிப் விஷயத்தில், பெண்களின் தற்போதைய மனநிலையைத் தெரிந்துகொள்வதற்காக நாங்கள் இந்த ஆய்வை 1,000 பெண்களிடம் மட்டுமே செய்தோம். இந்தக் காலப் பெண்கள் காதல் தோல்விக்கெல்லாம் பெரியளவில் மனம் உடைந்துபோவதில்லை. அதே நேரம், அந்தத் தோல்வி தந்த பயத்தில் 'வாட் நெக்ஸ்ட்' என்று யோசிக்காமல் இருப்பதுமில்லை. பெண்களிடமும் 'பேக் அப்' சாய்ஸ் இருக்கிறது. ஆண்கள் தங்கள் காதலில் உண்மையாக இருந்தே ஆக வேண்டும் என்கிற எச்சரிகையாகத்தான் இந்த ஆய்வு முடிவை நாங்கள் பார்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.

ஸோ, உங்களுக்கு 'த்ரிஷா இல்லன்னா திவ்யா' மாதிரி, இனிமே நாங்களும் 'விஜய் இல்லன்னா விஜய் சேதுபதி'தான் பாய்ஸ்!