Published:Updated:

போராட்டங்களையும் சவால்களையும் தோற்கடித்த இரண்டு காதல் கதைகள்!

நாராயணசாமி
நாராயணசாமி

நாராயணசாமிக்கு, தமிழகத்தின் முதல் கைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தமிழக மருத்துவத்துறை வரலாற்றில் பெரிய மைல்கல். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பத்தாண்டுக்காலக் காதலிலும் வென்று,

வழக்கம்போல அன்றும் கட்டுமான வேலை செய்துகொண்டிருந்தார் நாராயணசாமி. உயரமான கம்பி ஒன்றைத் தூக்கிப் பொருத்தவேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தக் கம்பி, தலைக்குமேலே சென்றுகொண்டிருந்த மின்கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்தது. இரண்டு கைகளையும் நீக்கவேண்டிய அளவுக்கு விளைவுகள் பெரிதாகின. வாழ்க்கை இருண்டது. காதலித்த பெண்ணின் குடும்பம் நிராகரித்தது. தன்னை நிராகரித்த காதலை ஜெயிக்க வேண்டும்... உயிருக்குயிராகத் தன்னை நேசிக்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற வேட்கையில் தன்னம்பிக்கையுடன் போராடி ஜெயித்திருக்கிறார் நாராயணசாமி.

நாராயணசாமிக்கு, தமிழகத்தின் முதல் கைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தமிழக மருத்துவத்துறை வரலாற்றில் பெரிய மைல்கல். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பத்தாண்டுக்காலக் காதலிலும் வென்று, காதலி நதியாவை கடந்த ஆண்டு கரம்பிடித்தார். இந்தத் தம்பதிக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

போராட்டங்களையும் சவால்களையும் தோற்கடித்த இரண்டு காதல் கதைகள்!

...மிகச் சவாலான அறுவை சிகிச்சை என்பதால் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து ஓராண்டுக்காலம் மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் மருத்துவக் கண்காணிப்பிலேயே நாராயணசாமி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில், நாராயணசாமி-நதியாவின் காதல் கதையில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை வெட்கத்துடன் பகிர்கிறார் நதியா.

"மின் விபத்துல அவருக்குக் கைகள் நீக்கிய பிறகு அதைக் காரணமா சொல்லி, மீண்டும் எங்க காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. ஆனா, நான் உறுதியா இருந்தேன். இதனால, ரெண்டு வருஷம் அவர்கூட பேசவும், சந்திக்கவும் முடியாத அளவுக்குக் கண்டிப்பான சூழல் எனக்கு..."

> இந்தப் பகிர்தலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கைத்தலம் பற்றினோம்! https://www.vikatan.com/lifestyle/relationship/meet-narayansamy-the-hero-who-fought-hard-for-his-success

காதலிலே தனித்துவம்!

பார்க்காத காதல், பழகாத காதல் என வித்தியாசமான காதல் கதைகளிலிருந்து தனித்துவமானது மிரண்டா - ரெக்ஸியின் காதல். பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மிரண்டா, தனக்கிருக்கும் சவால்களையெல்லாம் மீறி, திறமையால் சாதித்தவர். தன் குடும்பத்தையும் வசதியான வாழ்க்கையையும் உதறிவிட்டு, மிரண்டாவைக் கரம்பிடித்திருக்கிறார் ரெக்ஸி. காதல் இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது.

நம் வருகையை அமெரிக்கன் சைகை மொழியில் மிரண்டாவிடம் தெரிவித்தார் ரெக்ஸி. கைகுலுக்கி என்னை வரவேற்ற மிரண்டா, நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

"சின்னவயசுல ஓரளவுக்குத்தான் எனக்குச் செவித்திறன் இருந்துச்சு. பலரும் என்னைப் பார்வையற்றவனாக நினைச்சாங்களே தவிர, என் செவித்திறன் பிரச்னையை யாருமே புரிஞ்சுக்கலை. நான் படிக்கிறதுக்கான சிறப்பு வசதிகளும், ஆசிரியர்களும் எந்த ஸ்கூல்லயும் இல்லை...

மிரண்டா – ரெக்ஸியின் காதல்.
மிரண்டா – ரெக்ஸியின் காதல்.

...கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி தகுதித் தேர்வுக்குத் தயாரானேன். என்னைப் போன்ற செவித்திறன் இல்லாதவங்களுக்குத் தனிக் கேள்வித்தாள் தயாரிக்க வாய்ப்பில்லைன்னு தேர்வுக்குழு சொல்லிட்டாங்க. சென்னை உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன். மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கிடைச்சுது. அந்தத் தேர்வுல எனக்குக் கொடுக்கப்பட்ட பிரெய்லி கேள்வித்தாள்ல நிறைய தவறுகள். மீண்டும் நீதிமன்றத்துல முறையிட்டேன். 2013-ம் ஆண்டு சாதகமான தீர்ப்பு கிடைச்சுது. அந்தத் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் நான்தான். ஆனா, இந்த விஷயம் இதுவரை யாருக்குமே தெரியாது.

சென்னை நிப்மெட் கல்லூரியில கெளரவ விரிவுரையாளரா ஒரு வருஷம் வேலை செஞ்சேன். பிறகு, கல்லூரியின் புதிய இயக்குநரா பொறுப்பேற்றவர், 'நீங்க மேற்கொண்டு இங்க வேலை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கான கோர்ஸ் ஏதாவது படிக்கணும்னு உறுதியா சொல்லிட்டார். அதுக்காக பி.எட் (ஸ்பெஷல் எஜுகேஷன்) படிச்சேன். அப்போதான் ரெக்ஸி என் வாழ்க்கைக்குள்ள வந்தார்" - மிரண்டாவின் முகத்தில் வெட்கம் படர்கிறது. ரெக்ஸி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்.

- இந்தப் பகிர்தலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்!" https://www.vikatan.com/lifestyle/relationship/know-the-epic-love-story-of-miranda-and-rexi

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு