Published:Updated:

பெண்கள், டெடி பொம்மை, காதல்... என்ன சம்பந்தம்..?! #TeddyDay

டெடி பியர்

பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பகாலத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, 'புரோஜெஸ்டிரான்' ஹார்மோன்.

பெண்கள், டெடி பொம்மை, காதல்... என்ன சம்பந்தம்..?! #TeddyDay

பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பகாலத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, 'புரோஜெஸ்டிரான்' ஹார்மோன்.

Published:Updated:
டெடி பியர்

பிப்ரவரி - 14... காதலுக்குக் காதலர்களால் கொண்டாடப்படும் ஓர் அழகான தினம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வரப்போவதை முன்னிட்டு காதலர்களுக்கிடையே இந்தக் கொண்டாட்டம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

கோயில் திருவிழாபோல ஒரு வாரம் கொண்டாடப்படும் இதில் ஏற்கெனவே ரோஸ் டே, புரொப்போஸல் டே, சாக்லேட் டே முடிந்துவிட்டன. காதல் குறியீடுகளுக்கு விழா எடுக்கும் இந்த வரிசையில் இன்று (பிப்ரவரி-10) 'டெடி டே' கொண்டாடப்படுகிறது.

டெடி பியர்
டெடி பியர்

காதலுக்கும், டெடி பியர் எனப்படும் கரடி பொம்மைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, டெடி பொம்மைகள் உருவானது எப்படி என்று பார்த்துவிடுவோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெடி பியர் தினத்தைக் கொண்டாடுவதன் பின்னணியில் 1902 நவம்பர் 14 அன்று நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. இந்த நாளில் அமெரிக்க முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் வேட்டைக்குச் சென்றபோது, மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கரடியைப் பார்த்துள்ளார். ஆனால், அதைக் கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. மரத்தில் கட்டப்பட்ட மற்றும் சித்ரவதை செய்யப்பட்ட விலங்கைக் கொல்வது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று ரூஸ்வெல்ட் கரடியை வேட்டையாட மறுத்துவிட்டார்.

டெடி பியர்
டெடி பியர்

இந்தச் சம்பவத்தை கார்ட்டூனிஸ்ட் கிளிஃபோர்ட் பெர்ரிமேன் ஒரு கார்ட்டூனாக வரைய, ரூஸ்வெல்ட் கரடி மீது காட்டிய அன்பு மக்களிடையே வெகுவாகப் பரவத் தொடங்கியது. இதை அடிப்படையாக வைத்து மோரிஸ் மிக்தோம் என்பவர் துணிகளால் ஓர் அழகிய கரடிக் குட்டி பொம்மையைச் செய்து அதற்கு `டெடி' என்று பெயரிட்டு ரூஸ்வெல்ட்டுக்குப் பரிசளித்தார். 'டெடி' என்பது ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயர்.

பிறகு இந்த பொம்மை அதிகளவில் செய்யப்பட்டு 'டெடி என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட்டது. அப்போதிருந்து, டெடி பியர் அன்பின் அடையாளமாக மாறியது. காலப்போக்கில், பிப்ரவரி 10 அன்று டெடி தினமாகக் கொண்டாடப்பட்டது.

காதலின் அடையாளமாக இருக்கும் 'டெடி பியர்' கரடி பொம்மைக்குப் பின்னால், அதற்கான ஓர் அறிவியல் காரணமும் உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் - பார்பரா பீஸ் தம்பதி, இந்த 'டெடி ரகசிய'த்தைத் தங்களுடைய 'ஆண்கள் ஏன் கேட்பதில்லை' புத்தகத்தில் கூறியுள்ளார்கள்.

பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பகாலத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, 'புரோஜெஸ்டிரான்' ஹார்மோன். பெண்களுக்கு இந்த ஹார்மோனின் சுரப்பு, குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்குமாம்.

டெடி பியர்
டெடி பியர்

முக்கியமாகக் குழந்தைகளுடைய வடிவம்தான் இந்தச் சுரப்பு தூண்டப்படுவதற்கான காரணம். குழந்தைகளின் குண்டான, குட்டையான கை கால்கள், உப்பிய மார்பு மற்றும் வயிறு, சற்று பெரிய தலை மற்றும் பெரிய கண்கள் என இவையெல்லாம் அனைவருக்குமே பிடிக்கும். இந்த வடிவங்களை 'ரிலீசர்ஸ்' என்று சொல்கிறார்கள்.

இந்த வடிவங்களால் மனதில் உண்டாகும் விளைவுகள் மிகவும் வலுவானவையாக இருப்பதால், இப்படிப்பட்ட வடிவங்கள் ஒரு பொம்மையில் இருப்பதைப் பார்த்தாலும்கூட இந்த ஹார்மோன் பெண்ணின் உடலில் சுரக்கத் தொடங்கிவிடும். இதனால்தான் குழந்தை போன்ற வடிவில் இருக்கும் கரடி பொம்மைகளைப் பார்த்ததும் பெண்கள் குஷியாகி அதைத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கிவிடுகிறார்கள்.

டெடி பியர்
டெடி பியர்

மேலும், புரோஜெஸ்டிரான் ஹார்மோன் பெண்களுக்குத் தங்கள் இணையின் மீதான காதலையும் ரொமான்டிக் உணர்வையும் அதிகரிக்கும் வேலையையும் செய்வதால் காதலை வளர்ப்பதில் கைகொடுக்கின்றன இந்தக் கரடி பொம்மைகள்!

ஆக ஆண்களே... இன்று உங்கள் காதலிக்குப் பிடித்த நிறத்தில் டெடி பியரை வாங்கிக்கொடுத்து 'டெடி டே' கொண்டாடலாம்!