Published:Updated:

மேக்கப், நளினம், அழகு... பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்!

couple
couple ( Representational images )

’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க எல்லாரும் நினைச்சுட்டிருக்காங்க. உண்மையில்...’’

‘நாலு பேரு பார்த்தா என்ன சொல்லுவாங்க' என்ற பயமில்லாத மனுஷங்களே கிடையாது. பல பேரோட வாழ்க்கை, 'அவங்க என்ன சொல்லுவாங்களோ, இவங்க என்ன சொல்லுவாங்களோ' என்ற யோசனையிலேயேதான் கடந்து போய்க்கிட்டு இருக்கு. அதிலேயும் குறிப்பா இளம் பெண்கள். 'ஐப்ரோ ட்ரிம் பண்ணலையே', 'இன்னிக்கு ஹேர் ஸ்டைல் சரியா பண்ணலையே', 'பாய் ஃப்ரெண்ட் என்ன நினைப்பான்', ’கணவர் என்ன நினைச்சுப்பார்’ போன்ற எண்ணங்கள் இவங்க மத்தியில் அதிகம். ஆனா, உண்மையில் பல ஆண்கள் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைக் கொஞ்சம்கூட கண்டுக்கிறதே இல்லை என்கிறார் அமெரிக்காவின் ரிலேஷன்ஷிப் எழுத்தாளர் ஜேம்ஸ் மைக்கேல் சாமா. அப்படி பெண்கள்கிட்ட ஆண்கள் கண்டுக்காத விஷயங்களைத்தான் இங்கே தெரிஞ்சுக்கப் போறோம்.

couple
couple
Representational images

1. நீங்க புதுசா ஹேர் கட் பண்ணியிருப்பீங்க. ஒரு ஃபங்ஷன் போறதுக்காகப் பார்த்துப் பார்த்து புதுசா ஹேர் ஸ்டைல் பண்ணியிருப்பீங்க. அதோட 'சதிலீலாவதி' கல்பனா மாதிரி உங்க பாய் ஃப்ரெண்ட் அல்லது கணவர் முன்னாடி போய் நின்னாலும் சரி, நடந்தாலும் சரி, ரெஸ்பான்ஸே இருக்காது. அதுக்காக உங்க மேல அவருக்கு அன்பில்லைன்னு அர்த்தமில்ல. இதையெல்லாம் ஆண்கள் பெருசா கண்டுக்கிறதில்ல.

2. 'அவசரத்துல போட்டுட்டேன். ஐ லைனர் ரெண்டு கண்ணுலேயும் ஒரே மாதிரி இல்ல. லிப்ஸ்டிக் லைட்டா அடிக்கிற மாதிரி இருக்கே'ன்னு நீங்க இனிமே வருத்தப்படவே வேணாம். இதைக் கண்டுபிடிக்கிற அளவுக்கு பாய்ஸ் ஷார்ப் இல்லையாம்.

make-up
make-up
Representational images

3. லேசா தொப்பை விழுந்தாலே வயசு வித்தியாசமில்லாம எல்லா பெண்களும் பதற்றமாகிடுவாங்க. அழகுணர்ச்சி அதிகமுள்ள பெண்கள் இதனால கணவர்கூட பேசக்கூட தயங்குவாங்க. ஆனா, உண்மையில், பெண்களோட செல்லத் தொப்பையை ஆண்கள் கண்டுக்கிறதே இல்லையாம்.

4. தன்னைவிட அதிகமா படிச்ச காதலி, அதிகமா சம்பாதிக்கிற மனைவி. இந்த இரண்டு பேரும் இந்தக் கால ஆண்களோட மனசை டிஸ்டர்ப் பண்றதே இல்லையாம். அதனால, இந்த மாதிரி ஏற்றத் தாழ்வுகளில், வெளிநாட்டு ஆண்களைப் போலவே இப்போ நம்மூரு ஆண்களும் டோன்ட் கேர்தான்.

girl friend calling
girl friend calling
Representational images

5. லவ் பண்ணுறப்போ, பசங்க முதல்ல போன் பண்றதும், அவங்களே முதல்ல மெசேஜ் பண்றதும்துதான் கெத்துனு நினைப்பாங்க பொண்ணுங்க. ஆனா, ஆண்களைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட போன்ல கேர்ள் ஃபிரெண்டோட மெசேஜ் வரும்போதெல்லாம் செமயா ஹேப்பியாகிடுவாங்களாம். உங்க கெத்தெல்லாம் அவங்களுக்குப் புரியறதே இல்லையாம் கேர்ள்ஸ்.

6. கல்யாணமான புதுசுல பல பெண்களுக்கும் ஒரு பயம் இருக்குமாம். அதாவது, லவ் பண்ணினபோதும் கல்யாணத்தின்போதும் நம்மை அழகாவே பார்த்த நம்ம ஆளு, நம்மோட தூங்கி எழுந்த முகத்தைப் பார்த்தா என்ன நினைப்பாருங்குற பயம்தான் அது. இதையும் ஆண்கள் ஒரு பொருட்டாவே நினைக்கிறது இல்லையாம்.

Dating
Dating
Representational images

7. சில பெண்கள் லவ்வர் முன்னாடி அல்லது கணவர் முன்னாடி நான்வெஜ் சாப்பிடக் கூச்சப்படுவாங்க. ராஜ்கிரணுக்குச் சொந்தமான்னு கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு கூச்சம்தான் இதுக்குக் காரணம். டோன்ட் வொர்ரி கேர்ள்ஸ். ஆண்கள் இதைக் கவனிக்கிறது இல்ல. கவனிச்சாலும் ஸ்மைல்தான் ரியாக்‌ஷன். அதனால, லெக் பீஸ் எடுங்க, கொண்டாடுங்க.

8. ஆண்கள் முன்னாடி நாகரிகமா பேசுறது, ஸ்டைலிஷா பேசுறதுன்னு ரொம்ப மெனக்கெடுவாங்க பெண்கள். இதுவும் அவசியமில்லையாம். உங்களோட இயல்பான பேச்சே போதுமாம்.

couple
couple
Representational images
``பர்த்டே கேக் கட் பண்றப்போ குழந்தையாகிடுவாங்க ஆத்தா!''- ஆச்சியின் பேத்தி அபிராமி #HBDAachi

9. ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க எல்லாரும் நினைச்சுட்டிருக்காங்க. உண்மையில், மஜ்னு கண்ணுக்கு லைலா அழகுங்கிற கான்செப்ட்தான் ஆண்களுடையது. அதனால, அழகு விஷயத்துல உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையே வேண்டாம். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

இதுபற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு பேசுகையில், ‘’காதலி, மனைவி என்ற உறவைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தாலும் பெண்களுடைய அடிப்படை இயல்பு தன்னை அழகாக வைத்துக்கொள்வதும் தன் அழகுபற்றிக் கவலைப்படுவதும்... வீட்டில் ஒரு ஃபங்ஷன் என்றால், மேட்ச்சிங் டிரெஸ், மேக்கப், காஸ்மெடிக்ஸ், பூ, பொட்டு என்று பெண்கள் மெனக்கெடுவதன் காரணம் இதுதான்.

உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு
உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு

தவிர, ஃபங்ஷனுக்கு வந்திருக்கிற மற்ற பெண்களின் ஆடை, அலங்காரங்களை ரசிப்பதும் விமர்சிப்பதும்கூட பெண்கள்தான். இந்த ரசனை போட்டோகிராபர், கேமராமேன் போன்ற வேலைகள் செய்கிற ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே இருக்கும். அவர்களும்கூட வேலை சார்ந்து கவனிப்பார்களே தவிர, தன்னுடைய காதலி, தன்னுடைய மனைவி என்று வரும்போது ‘ஹேர்ஸ்டைல் சரியில்ல'; ‘லிப்ஸ்டிக் அதிகமாயிடுச்சு’ என்றெல்லாம் கவனிப்பதில்லை. அதனால்தான், பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, பெண்கள் கணவர் முன் கேட் வாக்கே செய்தாலும் ’எங்கேயாவது ஃபங்ஷனுக்குப் போறியா’ என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்வதில்லை. அந்த வகையில் அந்த அமெரிக்க எழுத்தாளர் சொல்லியிருப்பது உண்மைதான்.

சொல்லப்போனால் ஓர் ஆண் தன் பெண்ணிடம் தேடுவது, உண்மையான அன்பை மட்டுமே. அதில் அவன் பூரணமடையும்போது, தன் மனைவியின்/ காதலியின் எந்தப் போதாமைகளும் அவனுக்குப் பொருட்டாக இருப்பதே இல்லை’’ என்றார்.

உலகின் ஆகச் சிறந்த அழகு, அன்புதானே?!

அடுத்த கட்டுரைக்கு