யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
- குறள்
(யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். `யாரை விட..? யாரை விட..?' என்று கேட்டு ஊடல் கொண்டாள்.)
ஏறத்தாழ 500 நாள்களைத் தாண்டி நம் வாழ்க்கை வேறொரு பாணியில் பயணிக்கிறது. நம்மில் பலர் கோவிட் உடன் வாழப் பழகிவிட்டோம். மற்றும் பலர் அப்படியொரு பிரச்னை இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் மிக இயல்பாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பல வீடுகளில் உறவுச் சிக்கல்கள், மனச் சிக்கல்கள் எழுவதை நம் அறிவோம். அதோடு, பெருந்தொற்றுக் காலத்தில் பாதுகாப்பான - அதே நேரத்தில் திருப்திகரமான உடலுறவு கொள்வது எப்படி என்ற எண்ணமும் பலரை ஆட்டிப் படைக்கிறது.

நெருக்கம் என்பது மனித அனுபவத்தின் முக்கியமான ஒரு பகுதி. சிக்கல்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பான பாலியல் செயல்பாடு என்பதன் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட அதிகம். கட்டாய சமூக விலகல், முகமூடி அணிதல், அதிகப்படியான கை கழுவுதல் ஆகியவற்றைப் போலவே நெருக்கமான பாலியல் செயல்பாடுகளுக்கும் புதிய விதிகள் உண்டு!
தடுப்பூசிகள் பரவலாகப் போடப்பட்டாலும்கூட, பாதுகாப்பான பாலியல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களைக் கைவிடுவதற்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஏனெனில், இந்தத் தொற்றுநோய் முழுமையாக எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள்பற்றி வல்லுநர்கள் தொடர்ந்து அறியும்போது, அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளும் மாறலாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் (ஜூன் 2020-ல்) நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் கணக்கெடுப்பு இது. பங்கேற்பாளர்களில் பாதி பேர் தங்கள் முன்கூட்டிய பாலியல் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் பாலியல் உறவு இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவே தெரிவித்தனர்.
உடலுறவு என்பது ஓர் இன்பச் செயல் மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல; பாதுகாப்பான மற்றும் ஒருமித்த உடலுறவு நம்மை நிம்மதியாக உணர வைக்கும். கவலை மற்றும் பதற்றத்தைக் குறைக்கும். இயற்கையான தூக்க மாத்திரையாகச் செயல்படும். எண்டார்பின், ஆக்ஸிடோஸின் (காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது) உள்ளிட்ட ஹார்மோன்களை வெளியிட உதவும்.

இந்த ஹார்மோன் ரசாயனம்தான் உடலுறவுக்குப் பிறகும் நம்மை அரவணைக்க விரும்புகிறது. இந்த ஹார்மோன்களின் வெள்ளப் பாய்ச்சலானது நமக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. ஒரு பிணைப்பையும் உருவாக்குகிறது.
எந்தவோர் உடல் தொடர்பும் - குறிப்பாக 20 விநாடி கட்டிப் பிடித்தல் அல்லது 10 விநாடிகளாவது நீடிக்கும் நீடித்த முத்தம்கூட அதே நல்ல ரசாயனங்களை வெளியிடும். குறிப்பாக - மன அழுத்தம் மிகுந்த இந்த நிச்சயமற்ற நேரங்களில், மனநிலையை இலகுவாக்கும் இது போன்ற செயல்களிலிருந்து பயனடையலாம்.
மானுடத்துக்கு சருமப் பசி அவசியமானது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். தொற்றுநோய்களின்போது நம் தேவைகள் மாறவில்லை. அந்தத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில்தான் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொற்றுநோய்களின்போது பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது எப்படி?
தொற்றுநோய்களின்போது உடலுறவு கொள்வதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. நீங்களும் உங்கள் இணையும் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுதான் அது. வெளியில் சென்று வரும் ஒருவரால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று சொல்வோமே. அது போலவே இதுவும். வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் நபர்கள் பல்வேறு நிலை அபாயங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால், இதில் கூடுதல் கவனம் தேவை.
யோனி திரவத்தில் கொரோனா வைரஸ் இருப்பதாகத் தெரியவில்லை என்பதும், பல கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் விந்துவில் அந்த வைரஸ் இல்லை என்பதும் அண்மைக்கால ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமற்ற நிலையில் உறவுகொள்வதில் பிரச்னை ஏதும் இல்லை. அதே நேரத்தில் புதிதாக ஒருவருடன் உறவுகொள்வதைத் தவிர்க்கும்படி விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், உங்கள் வீட்டில் இல்லாத எவருடனும் ஆறு அடிக்கு மேல் நெருங்கக் கூடாது என்பதே விதி. ஆகவே, பொறுப்பாக ஓர் உறவை உருவாக்குங்கள்.
பி,கு: புதுமணத் தம்பதிகளுக்கு இது பொருந்தாது. அவர்கள் திருமணத்துக்கு ஒரிரு நாள்கள் முன்னதாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில்!

எப்போது தவிர்க்க வேண்டும்?
நீங்களோ உங்கள் இணையோ கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கவலைப்படுகிறீர்கள் என்றால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிந்தவரை உங்கள் தூரத்தைத் தக்க வைத்துக்கொள்வது நல்லது, அவர்கள் அறிகுறிகளை உருவாக்கவில்லை என்பதை உறுதிசெய்யும் வரை, காக்க காக்க பொறுமை காக்க!
அடிப்படை விதிகள் பாலுறவுக்கும் பொருந்தும்: வேலையின் போதும், வீடு திரும்பும் போதும் கைகளை நன்கு கழுவவும். அடிக்கடி உங்கள் மொபைல் போன், சாவிகள் மற்றும் நீங்கள் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யவும். அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்துவதற்கான ஆயத்த திட்டத்தை உருவாக்கவும்.
உடலுறவுக்கு முன் அல்லது உடலுறவுக்கிடையே நீங்கள் உங்கள் கணினி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இரட்டைத் தடுப்பூசிகள் மூலம் அல்லது கோவிட் தாக்குதல்மூலம் எதிர்கால தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளை பெரும்பாலான மக்கள் உருவாக்கிவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், இந்த ஆன்டிபாடிகளின் திறன் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று விஞ்ஞானிகளால் இன்னும் சரியாகக் கூற முடியவில்லை. ஓர் ஆய்வில், கொரோனா வைரஸிலிருந்து மீண்டு எட்டு மாதங்கள்வரை மக்களுக்கு ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சில ஆய்வுகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகள் வியத்தகு முறையில் வீழ்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளன.

தொலைதூர வெளிச்சம் நீ!
இணைகள் வெவ்வேறு இடங்களில் இருக்கும்பட்சத்தில் இந்தக் காலகட்டம் இன்னும் கடினமாகவே நகரும். ஆனால், உறவு என்பது வெறும் உடல் அல்லது பாலுறவு மட்டுமே அல்ல. ஒரு புதிய உறவில் கூட, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்பிக்கை, நெருக்கம் மற்றும் நம்பகத்தன்மையை வளர்க்க ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அறிவோம். அப்படியானால் என்ன செய்யலாம்?
தொலைதூர தம்பதிகள் ஒரே நேரத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், ஒரே நேரத்தில் வீடியோ இணைப்பில் இரவு உணவு சாப்பிடவும் அல்லது ஒன்றாக உடற்பயிற்சி செய்யவும் மனவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பல உறவுகள் வழக்கமாகவே நீண்ட தூரத்தில்தான் வாழ்கின்றன. அது போன்ற சூழலில், தங்கள் இணையுடன் உடல் ரீதியான அணுகல் இல்லை. அப்போது நவீன டேட்டிங் நுட்பங்களில் சிலவற்றைப் பயன்படுத்தலாம்.
உங்கள் பாலியல் வாழ்க்கை மெய்நிகராகவும் இருக்கலாம், வீடியோ அழைப்பு பல புதிய வாயில்களைத் திறக்கும். ரொமான்டிக்காக (கொஞ்சம் அப்படி இப்படியும் இருக்கலாம். தவறே இல்லை!) பேச்சில் ஈடுபடுங்கள். இவை சிற்றின்ப விளையாட்டுக்கு சிறந்த வாய்ப்புகளை அளிக்கும்.
பரஸ்பர சுயஇன்பமும் இதற்கு உதவும். நீங்கள் பிரிந்திருந்தால், அதே நேரத்தில் நீங்கள் வீடியோ மூலமாகவோ, தொலைபேசியிலோ அதை உங்கள் இணைக்குத் தூண்டலாம். குறிப்பாக இணை இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, சுய-தூண்டுதலை ஆராயவும், உங்கள் உடல் விரும்புவதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் இது சிறந்த நேரம்!
நீங்கள் இதற்கு முன்பு ஒரு சாதனத்தைப் பயன்படுத்தவில்லை என்றால், அதை முயற்சி செய்ய இதுவே ஒரு சிறந்த நேரம். உங்கள் உடற்பயிற்சிக்கான உடற்பயிற்சி கருவியைப் போலவே சுயஇன்பத்திற்கான வைப்ரேட்டர்கள், பாலியல் பொம்மைகள் பற்றியும் சிந்தியுங்கள்.

மருத்துவம் மற்றும் மனநல அறிவியல் அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்துவது இயல்பானதே. கோவிட் காலகட்டத்தில் பாலியல் பொம்மை விற்பனை - குறிப்பாக வைப்ரேட்டர்களுக்கான ஆர்டர்கள் மிகவும் அதிகமாகியிருக்கின்றன. ஊரடங்கு மற்றும் வீட்டிலேயே வேலை காரணமாக பாலியல் நோய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சில தரவுகள் காட்டுகின்றன.
ஒரே ஒரு விஷயம்... உங்கள் செயல்பாட்டின்போது நீங்கள் பயன்படுத்தும் பொம்மைகள் அல்லது வைப்ரேட்டரை கழுவி கிருமி நீக்கம் செய்ய வேண்டும். கோவிட் -19 கிருமி பல மணிநேரங்கள் அல்லது சில நாள்கள்கூட மேற்பரப்பில் வாழ முடியும். அதோடு, உங்கள் நெருக்கமான பாகங்களுக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, கவனம்!
- சஹானா