Published:Updated:

`ஆண்களின் ஆர்கஸத்திலும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன!' - பெட்ரூம் - கற்க கசடற - 21

Couple (Representational Image)
News
Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

டெஸ்டோஸ்டிரோன் மூலம் பாலியல் ஆசை தூண்டப்படுவதுதான் ஆணின் ஆர்கஸத்துக்கான அடிப்படை. இந்தப் பாலியல் ஆசை அல்லது உச்சிக்கு வழிவகுக்கும் செயல்முறையில் கோளாறு ஏற்பட்டால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

உடலுறவின்போது ஆணுக்கு ஏற்படும் உச்சக்கட்டம் என்கிற க்ளைமாக்ஸ் தருணத்தை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம்? விந்து வெளியேற்றம் நடந்தவுடன் ஆண் பரவசம் அடைந்துவிட்டதாக நினைக்கிறோம். பரவச இன்பம் என்பது அவ்வளவு எளிமையானதா? நிச்சயமாக அப்படி அல்ல. உண்மையில் ஆண் உச்சியை அடையும் தருணம் என்பது ஒரு சிக்கலான செயல்முறையே.

விந்துவெளியேற்றல் மட்டுமே பரவசத்துகான குறியீடு அல்ல. ஆண் உறுப்பு, ஹார்மோன்கள், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து, திறம்படச் செயல்பட்டால்தான், அந்த ஆண் இந்தத் தொடர் படிகளின் மூலம் உச்சியை அடைய முடியும்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

ஆணின் ஆர்கஸத்துக்கான ஆற்றல் மூலம் - அதாவது அதன் செயல்முறைக்கான எரிபொருள் எது தெரியுமா?

ஆணின் விரைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன்தான். அதோடு, விரைகள் இன்னொரு முக்கியமான வேலையையும் செய்கின்றன, நாம் நன்கறிந்த வெள்ளையான, புரதம் நிறைந்த திரவம்... அதாங்க விந்து! அந்த விந்து என்கிற செமனை லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாளும் கடமை தவறாமல் உற்பத்தி செய்கின்றன. இந்தத் திரவத்திலுள்ள உயிரணுக்கள் விந்துவெளியேற்றலுக்குப் பிறகும் குறிப்பிட்ட காலம் வரையில் உயிர் வாழ்கின்றன. ஆண் உச்சியடையும்போது ஆண்குறியின் சிறுநீர் வடிகுழாயின் மூலம் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது.

ஓர் ஆணின் உடலில் பாயும் டெஸ்டோஸ்டிரோன் உடன் உளவியல் காரணிகள் இணையும்போது செக்ஸ் விருப்பத்துக்கான வலிமை தீர்மானிக்கப்படுகிறது.

ஆணின் பேரின்ப வாசலுக்கு வழி எது?

டெஸ்டோஸ்டிரோன் மூலம் பாலியல் ஆசை தூண்டப்படுவதுதான் ஆணின் ஆர்கஸத்துக்கான அடிப்படை. இந்தப் பாலியல் ஆசை அல்லது உச்சிக்கு வழிவகுக்கும் செயல்முறையில் கோளாறு ஏற்பட்டால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

* அந்த ஆணுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கலாம்.

* மன அழுத்தத்தால் அவர் அவதியுற்றுக் காணப்படலாம்.

ஆண் பேரின்பத்தை அடையும் வழிமுறை இதோ!

வெற்றிகரமான உச்சக்கட்டத்தை ஓர் ஆண் அடைவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் வகுத்திருக்கிறார்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

* தூண்டப்படுதல்

ஒரு பார்வை, ஒரு பேச்சு, ஒரு காட்சி, ஓர் அணைப்பு, ஒரு முத்தம், உடை அவிழ்ப்பு... இப்படி ஒவ்வொரு காரணத்தால் பாலியல் ஆசை தூண்டப்படலாம். அப்போது அந்தத் தூண்டல் எண்ணம் மூளைக்கு ஒரு சமிக்ஞையாக அனுப்பப்படுகிறது. அதன்பிறகு, முதுகுத்தண்டு வாயிலாகப் பாலியல் உறுப்புக்கு `ரெடியாகுடா தம்பி’ என ஆசை காட்டியவுடன் விறைப்புத்தன்மை உண்டாகிறது.

அப்பாவியாக இத்தினியூண்டு இருக்கும் ஆண்குறியானது விறைப்புத்தன்மை ஏற்பட்டவுடன் உருட்டுக் கம்பி போல உறுதியாக நிற்பது எப்படி? இதற்கு யார் உதவி செய்கிறார்கள்? அடிப்படையில் ஆண் உறுப்பு பஞ்சுபோன்ற திசுக்களாக மெத்தென்றுதான் இருக்கிறது. அதனுள் தமனிகளால் 50 மடங்கு வேகத்தில் ரத்தவோட்டத்தைச் செலுத்தும்போதுதான் ஆண்குறி நிமிர்ந்து சல்யூட் அடிக்கிறது. இப்போது புரிகிறதா? இதயப் பிரச்னைகளுக்கு அளிக்கப்படும் அதே மருந்து வயாக்ராவாகவும் செயல்படுவது எப்படி என்று!

* ஆர்கஸத்தை நோக்கி...

ஆண் உடல் உச்சக்கட்டத்துக்கு தயாரான உடன், தசைகளில் இறுக்கம் - குறிப்பாக இடுப்பு எலும்பில் ஏற்படும். அதன் பின் 30 விநாடிகள் முதல் 2 நிமிடங்கள்வரை ஆணின் உச்சக்கட்ட இன்பம் நீடிக்கும். இந்தக் கட்டத்தில் ஆணின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 150 முதல் 175 வரை அதிகரிக்கும்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* உச்சக்கட்டத்தின் இறுதிக்கட்டம்

மேற்கண்ட தசை இறுக்கம் மற்றும் இதய படபடப்புக்குப் பிறகு, சிறுநீர்க் குழாயில் தயாராகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் விந்து வெளியேற்றப் பணி தொடங்கப்படுகிறது. உடனே நரம்புகள் மூலமாக மூளைக்கு இன்பக் குறியீடுகள் அனுப்பப்படுகின்றன.

இந்த இன்பப் பரிமாற்றம் மற்றும் விந்துவெளியேற்றலுக்குப் பிறகு, ஆண்குறி அதன் விறைப்புத்தன்மையை இழக்கத் தொடங்குகிறது. இதன் பிறகு, ஆண் தளர்வாகவோ சோம்பேறித்தனமாகவோ உணரலாம். அதனால்தான் அப்படியே படுத்துக்கிடக்கிறார்களோ? படுத்துக் கிடந்தாலும்கூட, அந்த நேரத்திலும் இணையைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பது சிறப்பு என்பதை மறக்க வேண்டாம்!

* அடுத்து எப்போ?

பொதுவாக, ஆண்கள் அடுத்த விறைப்புத்தன்மையை அடைவதற்கு ஒரு கால இடைவெளி தேவை. 20-களில் இருக்கிற இளைஞனால் 15 நிமிடங்களிலேயே அடுத்த விறைப்புத்தன்மையை அடைய முடியும். முதிய ஆண்களுக்கு, இது 10 முதல் 20 மணி நேரம் வரைகூட ஆகலாம். உலக அளவில் சராசரி மறு விறைப்புக் காலம் என்பது அரை மணி நேரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

* ஆண் வேறு பெண் வேறு!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விஷயத்தில் பெரிய வேறுபாடு உண்டு. அடுத்த செக்ஸுக்குத் தயாராக ஆணுக்கு விறைப்புத்தன்மை ஏற்பட குறிப்பிட்ட நேரம் ஆகும். ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல... எதையும் இழக்காமலே அடுத்தடுத்த ஆர்கஸங்களை ஒரே அமர்விலும், தொடரும் அமர்வுகளிலும் பெறமுடியும்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels

* உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கலா?

பெரும்பாலும் உளவியல் காரணிகளே ஆணின் உச்சக்கட்டத்துக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதற்கான பிரதான காரணங்கள்:

- ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம்.

- கட்டுப்பாடற்ற வளர்ப்பு முறை பாதிப்பு

- உடலுறவு முறைகளில் ஏற்படும் குழப்பம்

- நரம்பியல் அல்லது இதயப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்

- நரம்பு சார்ந்த அறுவைசிகிச்சைகள்

உச்சக்கட்டத்தை அடைவதிலோ, விறைப்புத்தன்மை ஏற்படுவதிலோ பிரச்னைகள் இருந்தால் குறுகிய கால தீர்வாக வைப்ரேட்டர் அல்லது பாலியல் பொம்மையைப் பயன்படுத்தி ஆண்குறியைத் தூண்டலாம். எனினும், நீண்டகால நோக்கில் நிலையான மாற்றங்களை அடைய மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளோ, செக்ஸ் தெரபியோ தேவைப்படலாம். செக்ஸ் தெரபியை இணையோடு இணைந்து பதற்றம் இல்லாமல் செய்யும்போது இன்பம் ஆரம்பமாகிவிடும்!

- சஹானா