Published:Updated:

உடலுறவின் உச்சக்கட்டத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? - பெட்ரூம் - கற்க கசடற - 5

Couple (Representational Image) ( Photo by Rodrigo Souza from Pexels )

உணவை நீங்கள் எப்படியெல்லாம் ரசித்து ருசித்துப் புசிப்பீர்களோ, `அந்த' அத்தனையையும் செக்ஸிலும் செய்ய முடியும். இதுவரை அதையெல்லாம் யோசித்துப் பார்த்திராவிட்டால் பாதகமில்லை. இனி நிச்சயம் செய்யுங்கள்!

உடலுறவின் உச்சக்கட்டத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? - பெட்ரூம் - கற்க கசடற - 5

உணவை நீங்கள் எப்படியெல்லாம் ரசித்து ருசித்துப் புசிப்பீர்களோ, `அந்த' அத்தனையையும் செக்ஸிலும் செய்ய முடியும். இதுவரை அதையெல்லாம் யோசித்துப் பார்த்திராவிட்டால் பாதகமில்லை. இனி நிச்சயம் செய்யுங்கள்!

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Rodrigo Souza from Pexels )
- சஹானா

நம் வாழ்வின் அடிப்படைகளில் மிக முக்கியமானது உணவு. அதைச் சாப்பிடும்போது ருசித்து ரசிக்க முடிவதைப் போலவே, அதைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசும்போதும் ரசிக்க முடிகிறது. அழகாக எடுக்கப்பட்ட உணவுப் புகைப்படங்கள், குக்கரி வீடியோக்களைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுவதற்கும், உணவுபற்றிச் சுவைபட எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போது ரசனையாக இருப்பதற்கும் இதுவே காரணம். சிலர் சமைக்கும்போதே அவ்வளவு விருப்பத்துடன் மிக அழகாக அதைச் செய்வார்கள். அந்த உணவுக்கு தனி ருசி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

Couple  (Representational Image)
Couple (Representational Image)
Image by Free-Photos from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆமாம்... தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று தோன்றுகிறதா? பொறுங்கள். உணவு போலவே நம் வாழ்வின் பலவித ரசனைகளுக்கும் ஏற்ற இன்னொரு விஷயம் செக்ஸ் மட்டுமே. ஆமாம்... உணவை நீங்கள் எப்படியெல்லாம் ரசித்து ருசித்துப் புசிப்பீர்களோ, `அந்த' அத்தனையையும் செக்ஸிலும் செய்ய முடியும். இதுவரை அதையெல்லாம் யோசித்துப் பார்த்திராவிட்டால் பாதகமில்லை. இனி நிச்சயம் செய்யுங்கள்!

உணவைப் போலவே செக்ஸும் ஒரு ருசியியல். உணவைப் போலவே அதிலும் ஏராளமான அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கின்றன. படுக்கையில் ஒரு ஜோடி புணரும்போது, அதன் பின்னால் உள்ள அறிவியலைப் பற்றியா சிந்திப்பார்கள்? அது சரிதான். அப்போது வேண்டாம். ஆனால், அதற்குப் பிறகு அதை அசை போடலாம். உதாரணமாக... அறிவியல்ரீதியாகப் பார்க்கும்போது, செக்ஸில் பாலினத்தின் மகுடமான பரவச உணர்வு (ஆர்கஸம்) பற்றி அறியப்பட வேண்டிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, பெண்களுக்குப் பல உச்சக்கட்டங்கள் இருக்க முடியும், பெண்களிடம் உள்ளதைப் போலவே ஆண்களுக்கும் ஜி-ஸ்பாட் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலியல் நிபுணர்கள் பறவைகள் மற்றும் தேனீக்களைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு முன்பு வரை, நீண்ட காலத்துக்கு பாலியல் உச்சக்கட்டம் பற்றிய விஷயங்கள் மர்மமாக இருந்தன. ஆனால், நம் நிபுணர்கள் இப்போது அதில் கரை கண்டிருக்கிறார்கள். அதனால் புணர்ச்சியைப் பற்றிய சில கவர்ச்சிகரமான உண்மைகளை அறிவோம். வெட்கப்பட வேண்டாம் - கொஞ்சம் பாருங்கள், செய்தும்!

Couple (Representational image)
Couple (Representational image)
Pexels

ஏன் இந்த அவசரம்?

முன்கூட்டிய விந்து தள்ளல் (premature ejaculation) பற்றி நீங்கள் நிறைய கேள்விப்படுகிறீர்கள். பெண் உச்சக்கட்டத்தை அடையும் முன்பே, சிறிய பாலியல் தூண்டுதலின்போதே சில ஆண்களுக்கு அல்லது சில வேளைகளில் விந்து வெளிப்பட்டு விடுவதுண்டு. பொதுவாக, உடலுறவு தொடங்கிய உடனே இப்படி நடந்து அந்தச் சூழலை மோசமாக்குவதுண்டு. அல்லது அது தொடங்குவதற்கு முன்பே கூட நடந்து எல்லாவற்றையும் முடித்து வைப்பதும் உண்டு. ஓர் உலகளாவிய மதிப்பாய்வின்படி, முன்கூட்டிய விந்துதள்ளல் என்பது சுமார் 20 முதல் 30 சதவிகிதம் ஆண்களை பாதிக்கிற குறைபாடு. இதைப் பெரிய குறையாக எண்ணி மருள வேண்டாம். நவீன மருத்துவத்தில் இந்தப் பிரச்னையை எளிதாகச் சரிசெய்யும் வழிமுறைகள் நிறையவே உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு சொல்லப்பட இருக்கும் விஷயம் அது அல்ல... சம்பவம் முழுமையாகும் முன்பே உச்சம் அடைவது ஆண்கள் மட்டுமல்ல. சுமார் 40 சதவிகிதம் பெண்கள் சில நேரங்களில் தங்கள் உறவுநிலை பூர்த்தியடைவதற்கு முன்பே புணர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுகிறார்கள். இவர்களில் 3 சதவிகிதம் பேருக்கு இந்த அரைகுறை பிரச்னை அதீத அளவில் உள்ளது.

ஆனால், பெண்களுக்கு மிகவும் பரவலான பிரச்னை புணர்ச்சியின் வெற்றிநிலையான ஆர்கஸத்தை அடைய இயலாமைதான். செக்ஸ் மற்றும் திருமண சிகிச்சை சார்ந்த ஓர் ஆய்வின்படி, 10 முதல் 40 சதவிகிதம் வரையிலான பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் சிரமம் இருக்கிறது.

ஆணுக்கோ, பெண்ணுக்கோ - யாருக்கு உச்சக்கட்டத்தை அடைவதில் சிரமம் இருந்தாலும் அதுபற்றி இருவரும் பேசி, சரிசெய்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். தவறே இல்லை!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Image by StockSnap from Pixabay

எல்லா உச்சக்கட்டங்களும் பூமியை சிதறடிக்கப் போவதில்லை!

உங்கள் ஒவ்வொரு புணர்ச்சியும் ஒலி எழுப்பக்கூடியதாக, கத்தக்கூடியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. `அய்யோ... சரியா இல்லையோ' என்றெல்லாம் குழம்ப வேண்டாம். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை!

சில ஆர்கஸங்கள் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கின்றன. சில பெரியவை... நில அதிர்வைப் போலவே பெண்ணைப் போட்டுத் தாக்கும். உண்மையில், இவை அனைத்துமே மகிழ்ச்சிகரமானவைதாம். ஆனால், உங்கள் உச்சக்கட்டங்கள் விருப்பத்துக்குரியவையாக இல்லையென நீங்கள் உணர்ந்தால், அதைச் சரிசெய்துகொள்ளவும் எளிய வழி இருக்கிறது. சுயஇன்பம் வாயிலாக எந்த இடத்தில் அதிக தூண்டுதல் ஏற்படுகிறது, உச்சக்கட்டம் எப்படி நடக்கிறது என்பது பற்றி உணரலாம். பின்னர், இந்தத் தகவலை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொண்டு, அதற்கேற்ப ஈடுபடலாம். இதுபற்றி உங்கள் துணையுடன் பேச ஒருபோதும் தயங்க வேண்டாம். ஏனெனில், செக்ஸ் என்பது இருவர் இணைந்து செல்லும் பாதை. அது ஒருவழிப் பாதையல்ல. இன்பம் என்பது இருவருக்குமே வாய்க்கப்பட வேண்டும்தானே?

அலைபாயுதே!

பெட்ரோல் விலை மீண்டும் மீண்டும் உயர்வு, ஆப்கானிஸ்தான் பிரச்னை, அடுத்த மாத இ.எம்.ஐ, அலுவலக அரசியல், டிவி சீரியலில் நேற்று என்ன நடந்தது - நீங்கள் உடலுறவு கொள்ளும்போது இப்படி உடலுறவைத் தவிர எல்லாவற்றையும் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிறீர்களா?

வேண்டாமே... படுக்கையறையில் என்ன நடக்க வேண்டுமோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துவது பெரிய அளவில் பலனளிக்கும். பெண்களுக்கு நான்கு அல்லது எட்டு அமர்வுகள் மனதை ஒருநிலைப்படுத்திச் செய்யப்பட்ட செக்ஸ் பற்றிய ஆய்வில் அறியப்பட்ட உண்மை இது. வேறு எதையும் யோசிக்காமல் செக்ஸில் மட்டும் மனதையும் உடலையும் ஈடுபடுத்தி உறவில் ஈடுபட்ட பெண்களின் ஆர்கஸ திறன் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மனதை அலைபாய விடாமல் இருக்க என்ன செய்யலாம்? தியானம் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவும். தியானம் அல்லது யோகாவில் ஈடுபடும் பெண்களுக்குப் பாலியல் செயல்பாடு மற்றும் வேட்கை அளவு அதிகரிப்பது அறியப்பட்டுள்ளது.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

ஆண்களுக்கும் இருக்கிறதாம் ஜி-ஸ்பாட்!

ஜி-ஸ்பாட் என்பது யோனியின் உள்ளே கண்டுபிடிக்கக் கடினமாக இருக்கும் ஒரு முக்கியமான இடமாகும். இது பெண்ணுக்குப் பூமியைத் தகர்க்கும் அளவு உச்சக்கட்ட இன்பத்தைத் தூண்டும். ஆனால், ஆண்களுக்கு இது போன்ற ஓர் உணர்ச்சித் தலம் உள்ளதா?

உடற்கூறியல் அடிப்படையில் பார்த்தால், ஆண்குறி என்பது மிகவும் உணர்திறன் கொண்ட நரம்புகளின் தொகுப்பாகும். அங்கு ஆணின் ஜி-ஸ்பாட் இருப்பதாகவே சில பாலியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், அது உண்மையாகவே இருக்கிறதா என்பது இன்னும் விவாதத்துக்குரிய விஷயம்தான். அது இப்போது முக்கியமல்ல... ஆணுக்கோ, பெண்ணுக்கோ - இந்தப் பகுதிகளைத் தூண்டாமலும்கூட ஆண்களும் பெண்களும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

ஏன் சில நீச்சல் வீரர்கள் மட்டும் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்கள்?

ஆணின் அனைத்து விந்தணுக்களும் சமமாக உருவாகுவதில்லை. புணர்ச்சியின்போது ஆண் உறுப்பிலிருந்து வெளியிடப்படும் விந்தணு மாதிரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் சில இறந்த அணுக்களும் இருக்கும். அசைவற்ற மற்றும் வேகம் குறைந்தவையும் காணப்படும். அதே நேரத்தில், ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் முட்டையின் ரசாயன சமிக்ஞைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வேகமான அணுக்களும் இருக்கும். இந்த வேக அணுக்கள்தான் இனப்பெருக்கத்துக்குக் காரணமாகின்றன. வீரியமுள்ள விந்தணுவானது விநாடிக்கு 30 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு மேல் செல்ல வேண்டும். மேலும், அது பொதுவாக ஒரே இடத்தில் குதிப்பதைவிட முன்னோக்கிச் செல்ல வேண்டும்!

Kiss
Kiss
AP/ Charlie Riedel

செயலைவிட சிறந்தது சிந்தனை!

சில நபர்களால் எந்தவித உடல் தூண்டுதலும் இல்லாமல்கூட கற்பனைமூலமே உச்சக்கட்டத்தை உருவாக்க முடியும் என்பது அறிவியல் உண்மை. பாடகர் லேடி காகா ஒருமுறை கூறியதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்... ``உங்களுக்குத் தெரியுமா, உணர்ச்சிகளின் நினைவகம் ஒரு சக்திவாய்ந்த விஷயம். அதைப் பற்றி யோசிப்பதன் மூலமே எனக்கான உச்சக்கட்டத்தை அடைய முடியும்!''

ஆகவே, அந்த நேரத்தில் இனிமையாக யோசிப்பதன் மூலம் உறவை இன்பமயமாக்க முடியும். அதில் எந்தத் தவறும் இல்லை!

உறவு உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்கும்!

மாதவிடாய் வலியிலிருந்து மீள்வதற்காக இனியும் வலி நிவாரணி மாத்திரைகளை உள்ளே தள்ள வேண்டாம். உடலுறவு அல்லது சுய இன்பத்தில் ஈடுபடுவது மாதவிடாய் வலியை நீக்கும். உச்சக்கட்டத்தை அடைவதில் உள்ள ரசாயன மற்றும் தசை மாற்றங்கள் மாதவிடாய் வலியிலிருந்து விடுபட காரணமாக அமைகின்றன. கவனச்சிதறலைக் குறைக்கின்றன. ரிலாக்ஸாக உணரவும் உதவுகின்றன.

வயதுக்கு ஏற்ப உச்சக்கட்டமும் மேம்படும்!

20 வயதைவிட 40 வயதில் அடையும் ஆர்கஸம் சிறப்பானதா என்று அளவிடுவது கடினம்தான். ஆனால், வயதுக்கு ஏற்ப உங்கள் உடலைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது சிறப்பு. அது உங்கள் இணையுடன் கொள்ளும் உடலுறவை மிகவும் வசதியாக உணர வைக்கும். ஓர் இளம் உடல் புணர்ச்சிக்கு சிறப்பாக இருக்கக்கூடும். ஆனால், வயதான ஓர் உடல் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் அதிக மகிழ்ச்சியை அளிக்கும்!

couple (Representational image)
couple (Representational image)

எவ்வளவு நீடிக்க முடியும்?

ஆர்கஸத்தை அடைவதற்கு எடுக்கும் கால அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். அது உற்சாகம், தூண்டுதல், மன அழுத்த நிலைகள், சோர்வு மற்றும் உறவு இயக்கவியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

ஆண்களுக்கு இந்தக் கால அளவு உள் செலுத்துதல் முதல் விந்து தள்ளல் வரை சராசரி நேரம் ஏழு நிமிடங்களாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். பெண்களின் கால அளவு அதிக அளவில் மாறக்கூடியது. ஏனெனில், பெண்ணின் ஆர்கஸம் மிகவும் நுட்பமானது. சில பெண்கள் யோனி உடலுறவின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவதே இல்லை. சில பெண்களோ ஒரே அமர்வில் பல உச்சக்கட்டங்களை அடைவதாகக் கூறுகின்றனர்.

பெண்ணின் உச்சக்கட்டமே நல்ல பெற்றோரை உருவாக்குகிறது!

உங்கள் உயிரியல் ஆசிரியர் இதை உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்... `இனப்பெருக்கம் செய்வதற்கு, ஆணின் உச்சக்கட்டம் மட்டுமே அவசியம்' என்று. மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையாகத் தோன்றலாம். ஆனால், அறிவியல் அப்படிச் சொல்லவில்லை!

உச்சத்தின்போது பெண்ணின் கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் செல்ல ஆணின் விந்து தள்ளல் அவசியமே. ஆனால், பெண்ணின் உச்சக்கட்டம் என்பது துணைத் தேர்வின் ஒரு பகுதியாகும். ஒரு பெண்ணின் மன அமைப்பு தனது உச்சத்தை உருவாக்கும் திறனை அடிப்படையாகக் கொண்டே தன் இணையைத் தேர்வு செய்கிறது. மேலும், இது ஜோடிப் பிணைப்பை ஊக்கப்படுத்துகிறது. அதாவது அந்த ஜோடி, இனப்பெருக்கத்தைத் தாண்டி, நல்ல பெற்றோராக உருவாக இதுவே அதிக வாய்ப்பை அளிக்கிறது. குழந்தைகளை உருவாக்க விரும்பவில்லை என்றாலும்கூட, செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருப்பது அனைவருக்கும் அவசியம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

அடுத்தடுத்த உச்சக்கட்டங்கள் மகிழ்ச்சியான பின் அதிர்வுகளே!

சில பெண்கள் மீண்டும் மீண்டும் உச்சக்கட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அதை அடைய விரும்புவது இயற்கையே. பல உச்சக்கட்டங்கள் (multiple orgasms) என்று அழைக்கப்படுவது உண்மையில் என்ன? அது இயற்கையாக நிகழும் தன்னியக்க அனிச்சைகளே. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்... நிச்சயமாக, இந்தப் `பின்நடுக்கங்கள்' இன்னும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர காரணமாக இருப்பதால், என்ஜாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism