Published:Updated:

`உடலுறவின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது!' - அதிர்ச்சி மாற்றத்திற்கு காரணம் என்ன? - 11

இளைஞர்கள் உடலுறவு கொள்ளும் அளவு குறைந்து வருகிறது. ஆம்... 21-ம் நூற்றாண்டில் இளைஞர்கள் குறைவான அளவே உடலுறவு கொள்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு சொல்லும் உண்மை.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

(குறள்)

பொருள்: அதோ... வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை ஏற்படுத்தாது!

பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு முடிவடைந்த ஓர் ஆய்வு இது. இரண்டு ஆண்டுகளைக் கடந்தாலும்கூட இன்னமும் இந்த விஷயத்தில் பெரிய மாற்றமில்லை. சொல்லப்போனால், கோவிட் காலத்தில் இது மேலும் குறைந்திருக்கிறது. அதென்ன ஆய்வு?

இளைஞர்கள் உடலுறவு கொள்ளும் அளவு குறைந்து வருகிறது. ஆம்... 21-ம் நூற்றாண்டில் இளைஞர்கள் குறைவான அளவே உடலுறவு கொள்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு சொல்லும் உண்மை.

பங்குச்சந்தை சரிவதைப் போலவே பாலியல் செயல்பாடுகளும் சரிந்து வருவதன் காரணம் என்ன? மனச்சோர்வும் பதற்றமும் இந்த விஷயத்துக்குத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Loc Dang from Pexels

நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்கிறீர்கள்? அது தொற்றுநோய் காலத்தில் குறைந்திருக்கிறதா? பாலியல் உறவின் எண்ணிக்கை குறைவதற்கு அல்லது அதில் ஆர்வம் ஏற்படாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் காரணம்? யோசியுங்கள்.

கோவிட்தான் உடலுறவு கொள்வது குறைந்துபோனதற்கு காரணம் என்றால், அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு காலகட்டத்திலும் பாதுகாப்பாக உறவு கொள்ளும் வழிமுறைகள் பற்றி நீங்கள் அறிவீர்கள். அவற்றைத் தயங்காமல் பின்பற்றுங்கள்.

ஏனெனில், உங்கள் பாலியல் வாழ்க்கையின் தரம் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு பகுதி!

சரி... செக்ஸ் எண்ணிக்கை பற்றிய ஆய்வுக்கு வருவோம்.

* 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 10,000 நபர்களின் உடலுறவு என்ணிக்கை, கால அளவு குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 2000-ம் ஆண்டிலிருந்தே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* 2000 முதல் 2002-ம் ஆண்டு வரை, 18 முதல் 24 வயதுக்குட்பட்டோரில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடாதவர்கள் அல்லது மிகக் குறைவாக ஈடுபடுகிறவர்களின் அளவு 19 சதவிகிதமாக இருந்தது. இதுவே, 2016 முதல் 2018 வரை கணக்கிடப்பட்ட போது, 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

* 2016 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடையில், ஐந்தில் ஒரு பெண் (19 சதவிகிதம்) பாலியல் செயலற்ற நிலையில் இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* 2000 முதல் 2002-ம் ஆண்டு வரை, திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களில் முறையே 71 சதவிகிதம் மற்றும் 69 சதவிகிதம் பேர், வாரம்தோறும் உடலுறவு கொள்வதாகத் தெரிவித்திருந்தார்கள். இதுவே, 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், வாராந்தர உடலுறவு கொண்ட திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதம் முறையே 58 மற்றும் 61 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

* 25 வயதுக்கு மேற்பட்டோர் 2001 முதல் 2012 வரை குறைவாகவே உடலுறவு கொள்வதாகக் கண்டறியப்பட்டது.

* மார்ச் 2017-ல் செய்யப்பட்ட பாலியல் நடத்தை ஆய்வில், பலர் ஓராண்டில் ஒன்பது முறைக்கும் குறைவாகவே உடலுறவு கொண்டதாகக் கண்டறியப்பட்டது.

* 1990-களின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது 2010-களின் முற்பகுதியில் குறைவான எண்ணிக்கையிலான உடலுறவே கொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் தங்களுக்கென ஓர் இணை இல்லாமல் அதிகமான மக்கள் இருந்தனர் என்பதும் ஒரு காரணம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels
உடலுறவின் உச்சக்கட்டத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? - பெட்ரூம் - கற்க கசடற - 5

இளைஞர்கள் உடலுறவு கொள்ளாததற்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஏன் அதிகமான இளைஞர்கள் உடலுறவு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்குப் பல விளக்கங்கள் உள்ளன.

* 24/7 பிஸியான வாழ்க்கைமுறை. உடலுறவு கொள்ள குறைவான நேரமே கிடைக்கிறது.

* தொழில்நுட்ப சாதனங்களில் தலைகளைப் புதைத்துள்ளதும் முக்கியமான காரணம். கட்டிலிலேயே இருந்தாலும் இணையைவிடவும் மொபைலுக்கே முக்கியத்துவம் அளிப்பது இப்போது இயல்பான விஷயமாக இருக்கிறது. இது இரு பாலினருக்கும் பொருந்தும். சமூக திறன்களைக் குறைப்பதில் ஸ்மார்ட்போன்கள் அதிக தாக்கம் செலுத்தி வருவது கவலைக்குரிய விஷயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* இளம் வயதினருக்கு கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரித்து வருகிறது.

* முன்பெல்லாம் ஏதேதோ பிரச்னைகள் காரணமாக பேச்சையே நிறுத்திவிட்ட தம்பதிகள்கூட, படுக்கையறையில் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு உறவில் ஈடுபடுவது சாதாரணமாக இருந்தது. இப்போதோ அப்படி இல்லை. சிறிய பிரச்னை என்றாலும்கூட திரும்பிப் படுத்துக்கொள்கிறார்கள்.

* உடலுறவுக்கான தூண்டுதலை முதலில் யார் தொடங்குவது என்பதில் ஒரு தயக்கம் நிலவுகிறது. அதற்குள் விடிந்துவிடுகிறது.

* நம் சமுதாயத்தில் பெண்கள் செக்ஸில் ஆர்வம் காட்டினால் அது மகா பாவம் எனப் பார்க்கப்படுவதால், அவர்களும் பொதுவாக ஓர் அணைப்புக்குக்கூட முதல் முயற்சி எடுப்பதில்லை.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Rodrigo Souza from Pexels
`உடலுறவின் இன்பம் முத்தத்தில் அல்ல; இதிலிருந்துதான் தொடங்குகிறது!' - பெட்ரூம் கற்க கசடற - 8

* தொழில்நுட்பம் காரணமாக எல்லாமே எளிதாக இருந்தாலும்கூட, உடலுறவு விஷயத்தில் தொழில்நுட்பங்கள் நெருக்கத்தைவிட அதிக இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கின்றன.

* பொருளாதாரமும் உடலுறவு விஷயத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பகுதிநேர வேலை அல்லது வேலையில்லாத ஆண்கள் பாலியல் செயலற்றவர்களாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோவிட் காரணமாக ஏற்பட்டுள்ள இப்போதைய பொருளாதார சரிவு இதை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் நம்மை எங்கே கொண்டுசெல்லும்?

உடலுறவுகளின் எண்ணிக்கைகளை ஆய்வுசெய்யும் பாலியல் மற்றும் புள்ளியியல் நிபுணர்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியே. ``இந்த மனிதத் தொடர்பின் பற்றாக்குறை இன்னும் நீண்ட காலம் நீடிக்கும். உடலுறவுகளை மறுதொடக்கம் செய்வதும், இதற்கான தூண்டுதல் திறன்களை உருவாக்குவதும் கடினமாக இருக்கிறது. எதிர்காலத்தில், மக்கள் இன்னும் குறைவான எண்ணிக்கையிலான உடலுறவில் ஈடுபடலாம்'' என்கின்றனர்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels
செக்ஸில் பெண்களின் விருப்பங்களை அறிவதற்கான ஒரே வழி இதுதான்! - பெட்ரூம் கற்க கசடற - 10

நீங்கள் எவ்வளவு அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும்?

பாலியல் பங்களிப்பு என்பது நல்வாழ்வின் ஓர் அங்கம். எனவே, நல்ல பாலியல் வாழ்க்கையை உருவாக்குவதுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியம், உறவுகள் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் ரகசியம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தூக்கத்தின் தரம், உறவின் தரம், நெருக்கம், பாலியல் செயல்பாடுகள் ஆகியவை மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்க உதவும்!

மனிதத் தொடர்பு, தொடுதல், பாலியல் இன்பம் ஆகியவற்றை ஏதோ ஒரு காரணம் சொல்லி அனுபவிக்காமல் விட்டுவிடக் கூடாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். இது எந்தக் காலகட்டத்துக்கும் பொருந்தும், கோவிட் உட்பட. ஆகவே..!

- சஹானா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு