Published:Updated:

பேசாக் கதைகள் - 8 | நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷன்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா?

பேசாக் கதைகள் ( Representational Image )

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 8 | நான் ஒரு பைசெக்சுவல்... ஹெச்ஐவி பேஷன்ட்... திருமணம் செய்துகொள்ளலாமா?

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
பேசாக் கதைகள் ( Representational Image )
"இந்த விஷயத்தை யார்கிட்ட பேசுவோம்னு காத்துக்கிட்டிருந்தேன். ஒரு நண்பனா எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க"ங்கிற வேண்டுகோளோட மெயிலை ஆரம்பிச்சிருந்தார் அந்த நண்பர்.

"எனக்கு வயசு 27. நான் ஒரு பை செக்சுவல். எப்படி இந்த நிலைக்கு நான் ஆளானேன்னு தெரியலே. சில ஆண் நண்பர்களோட தொடர்பால எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று பாதிச்சிருக்குங்கிறதை 2017-ல கண்டுபிடிச்சேன். வாழ்க்கையே இருண்டு போன மாதிரியாயிடுச்சு. நான் ஹெச்ஐவி பேஷன்ட்ங்கிறது கிராமத்திலிருக்கிற என் அம்மாவுக்கு மட்டும் தெரியும். அம்மா பெரிசா படிக்கலேன்னாலும்கூட என் நிலையை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு அதே அன்போட இருக்காங்க. ஊர்ல அப்பா, அண்ணங்களுக்கோ மற்ற உறவுக்காரங்களுக்கோ நண்பர்களுக்கோ எனக்கு ஹெச்.ஐ.வி இருக்கிறது தெரியாது. நான் இப்போ தொடர் சிகிச்சையில இருக்கேன்.

கொரோனா லாக்டௌனால நகரத்துல இருந்த நான் எங்க கிராமத்துக்கே போகவேண்டியதாகிடுச்சு. கிராமத்துல எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி, நான் ஏன் இன்னும் திருமணம் செஞ்சுக்கலேங்கிறதுதான். "27 வயசாச்சு, இன்னும் ஏன் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணாம இருக்கீங்க"ன்னு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உறவுக்காரங்கள்லாம் அழுத்தம் கொடுக்கிறாங்க. என் தாய்மாமாவுக்கு மகள்கள் இருக்காங்க. அவங்களும் எனக்கு பெண் தர தயாரா இருக்காங்க. குறிப்பா, அப்பாவும் அண்ணாவும் நான் மாமா மகளைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ரொம்பவே விரும்புறாங்க.

ஆண்
ஆண்
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனா, எனக்கு திருமணம் செஞ்சுக்கிறதுல விருப்பமில்லை. முதல்ல நான் ஒரு ஹெச்ஐவி நோயாளி. இன்னொரு காரணம், நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். ஒரு பெண்கூடவும் என்னால செக்ஸ் வச்சுக்கமுடியும்தான். ஆனா திருமணங்கிற பந்தத்துக்குள்ள வாழமுடியுமான்னு சந்தேகமா இருக்கு. அதனால திருமணப் பேச்சைத் தட்டிக்கழிச்சுக்கிட்டே இருக்கேன். இது குடும்பத்தில பெரிய பிரச்னையை உருவாக்குது. குறிப்பா, என்னோட பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்ட அம்மா, அதை வெளியே சொல்ல முடியாம ரொம்பவே தவிக்கிறாங்க. அவங்களுக்கு மனதளவுல மட்டுமில்லாம உடலளவுலயும் இதுனால பிரச்னையாகுது. எனக்கும் தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது. இப்போ நான் என்ன செய்யட்டும்... திருமணம் செஞ்சுக்கலாமா? இல்லே... இப்படியே இருந்திடலாமா?"

ரொம்பவே குழப்பத்தோடவும் மன உளைச்சலோடவும் அந்த மெயிலை அனுப்பியிருக்கார் நண்பர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நண்பா, உங்க குழப்பத்தையும் மன உளைச்சலையும் உங்க வார்த்தைகள்ல தெளிவா புரிஞ்சுக்க முடியுது. உங்க பிரச்னைக்குத் தீர்வு தேடுறதுக்கு முன்னால முக்கியமான ஒரு ஆலோசனை என்னன்னா, தற்கொலைங்கிறது உங்க பிரச்னைக்குத் தீர்வில்லை. அது இன்னும் உங்க மதிப்பைக் குலைச்சு, உங்க குடும்பத்தை தீராத மன அழுத்தத்துல தள்ளிடும். மொத்தமா உங்க குடும்பத்தோட எதிர்காலத்தையே பாதிக்கும். முதல்ல தற்கொலை செஞ்சுக்கணுங்கிற உங்க தோணலை மனசுல இருந்து அழுத்தமா துடைச்சு எடுத்திடுங்க. இந்தப் பிரச்னைக்கு மட்டுமில்லை... எந்தப் பிரச்னைக்குமே தற்கொலை தீர்வு தராது.

நீங்க எழுதியிருக்கிற மெயிலைப் படிக்கும்போது உங்க அம்மா, உங்களுக்காக பெரும் துயரத்தைச் சுமந்துக்கிட்டிருக்காங்கன்னு புரிஞ்சுக்க முடியுது. தன்னுடைய பிள்ளைக்கு ஹெச்ஐவி பாதிப்புன்னு தெரிஞ்சதே அவங்களுக்கு பெரிய அதிர்ச்சி்யா இருந்திருக்கும். அதை கணவர்கிட்டயே மறைக்கிறதும், திருமணம் செய்து வைக்க வலியுறுத்துற உறவுகளைச் சமாளிக்கிறதும் உண்மையிலேயே அந்த மனுஷிக்கு பெரும் அழுத்தம் தரலாம். இந்த வயசுல இது அவங்களுக்கு பெரிய சுமை.

திருமணமே செஞ்சுக்க வேண்டாம்ன்னு உறுதியா நிக்கிற நீங்க இப்போ குழப்பத்தோட இந்த மெயிலை அனுப்பியிருக்கிறதுக்கு காரணம், அம்மா படுற சிரமம்தான்னு புரிஞ்சுக்கிறேன்.

பெண் - ஆண்
பெண் - ஆண்
Representational Image

இந்த உலகத்துல தீர்வில்லாத பிரச்னைகள்னு எதுவுமே இல்லை நண்பா. ஹெச்.ஐ.வி வந்தாலே மரணம்தான்னு ஒரு காலத்துல மருத்துவ உலகம் சொல்லிக்கிட்டிருந்துச்சு. இன்னைக்கு உரிய கூட்டு மருந்துகளை முறைப்படி எடுத்துக்கிட்டா பிரச்னையில்லாம வாழமுடியும்ன்னு ஒரு நிலை வந்திடுச்சுல்ல... அதுமாதிரிதான்.

உங்க அப்பாவுக்கு உங்களைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கும். தன் பிள்ளைக்கு திருமணம் செய்து பார்க்கணும், பேரப்பிள்ளைகளைக் கொஞ்சணும்ங்கிறதெல்லாம் இயல்பாக அவருக்கு இந்த வயசுல வர்ற ஆசைகள்தான். அப்பாவோட வலியுறுத்தல், உறவுகளோட நெருக்குதல்... இதெல்லாம் உங்களுக்குத் திருமணம் செஞ்சுக்கலாமான்னு ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கு.

இதுல ரெண்டு கேள்விகள் இருக்கு நண்பா. நீங்க உங்களை பை செக்சுவலா அறிமுகப்படுத்தியிருக்கீங்க. ஏதோவொரு சூழல்ல ஓரினச் சேர்க்கையாளரா நீங்க மாறியிருக்கலாம். ஓரினச் சேர்க்கை பத்தி இன்னைக்கு உலகளவுல சரி, தவறுகள் விவாதிக்கப்படுது. நாம அந்த விவாதத்துக்குள்ள போகவேண்டாம். ஆனா, சில அடிப்படையான விஷயங்களைப் பேசலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓரினச் சேர்க்கைங்கிறது ஒரு நோயில்லை. அது ஒரு எண்ணம். மூடிவச்ச அறைக்குள்ள நிரம்பியிருக்கிற புகைமாதிரி, அந்த ஈர்ப்பு மனசுக்குள்ள நிரம்பியிருக்கு. வேறெந்த எண்ணமும் அந்த எண்ணத்தைத் தகர்க்கமுடியாது. அது தர்ற திருப்தியை வேறெதுவும் தராது. திருப்திங்கிறது ஆளுக்கு ஆள் மனசுக்கு மனசு வேறுபடக்கூடிய ஒரு விஷயம்தானே.

ஓரினச் சேர்க்கை ஈர்ப்புள்ள ஒருத்தர் அதிலிருந்து விடுபடமுடியுமாங்கிற கேள்விக்கு, மருத்துவ உலகம் சிரமம்தான்ன்னு பதில் தருது. அதுதான் இயல்புன்னு உங்க மனம் முழுமையா நம்பியிருக்கு. அதிலிருந்து விடுபட்டு, இயல்பான எதிர் பால் தாம்பத்யத்துக்குள்ள வர வெறும் 5 சதவிகிதம்தான் வாய்ப்பிருக்கு. உங்களுக்கு அது சாத்தியமான்னு எனக்குத் தெரியாது.

ஓரினச் சேர்க்கையில ஈர்ப்புள்ளவங்க, பை செக்சுவலா இருக்கலாம். ஆனா, அவங்களால திருமண பந்தத்துக்குள்ள அதற்கான கட்டுப்பாட்டோட வாழமுடியுமாங்கிறது கேள்விதான். உலகளாவிய ஆய்வுகள்ல, பை செக்சுவலா இருக்கவங்க, ஓரினச் சேர்க்கையிலதான் தீவிர ஈடுபாட்டோட இருப்பாங்கன்னு தெரிய வந்திருக்கு. ஒரு பெண்கூட உங்களால திருப்தியா வாழமுடியாதுங்கிறதுதான் மருத்துவ உலகம் சொல்ற உண்மை.

ஆண்
ஆண்
Representational Image

திருமணத்துக்குப் பிறகு, இன்னொரு ஆண்கூட நீங்க பழகுறது உங்க மனைவிக்குத் தெரிஞ்சுட்டா அது வேறொரு விபரீதமான பிரச்னையாக்கூட உருவாகலாம். திருமண வாழ்க்கைக்கு நம்பிக்கை முக்கியம். உங்களால உங்க இணைக்கு அந்த நம்பிக்கையைத் தரமுடியுமான்னு யோசிங்க. ஒரு பெண்ணுக்கு நீங்க மிகப்பெரிய ஏமாற்றத்தை தருவீங்க.

நீங்க விடைகாண வேண்டிய இன்னொரு கேள்வி, ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க, திருமணம் செஞ்சுக்கலாமாங்கிறதுதான். இந்தக் கேள்விக்கு மேலோட்டமா விடை காணமுடியாது நண்பா. ஹெச்.ஐவியால பாதிக்கப்பட்ட ஒருத்தர், ஹெச்ஐவியால பாதிக்கப்பட்ட இன்னொருத்தரை திருமணம் செஞ்சுக்கிறதுல பிரச்னையில்லை. அந்தமாதிரி இந்தியாவுல நிறைய திருமணங்கள் நடக்குது. அந்த மாதிரி திருமணம் செஞ்சுக்கிறவங்க, தொற்றில்லாத குழந்தைகளைக்கூட பெத்துக்க மருத்துவ உலகம் தீர்வு வச்சிருக்கு.

ஆனா, ஹெச்,ஐ.வி பாதிப்பில்லாத ஒரு பெண்ணை நீங்க திருமணம் செஞ்சுகிறதுல நிறைய பிரச்னைகள் இருக்கு. முதல்ல, நீங்க ஒரு ஹெச்ஐவி நோயாளின்னு அந்தப் பெண்ணுக்கும் அவங்க குடும்பத்தாருக்கும் தெரியணும். நீங்க வெளிப்படையா அதுபத்தி அந்தப் பெண்ணுக்கிட்ட பேசனும். அந்த நோய் அந்தப் பெண்ணுக்கும் பரவ வாய்ப்பிருக்குன்னு புரிய வைக்கணும். அதை அந்தப் பெண் ஏத்துக்கிட்டு உங்களை திருமணம் செஞ்சுக்க முன்வந்தா பிரச்னையில்லை.

ஒருவேளை அப்படியொரு பெண் முழு மனதோட திருமணத்துக்கு முன்வந்தாங்கன்னா, உங்கமூலமா அந்தப் பெண்ணுக்கு ஹெச்ஐவி பரவாம பாத்துக்கணும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உடலுறவுல கண்டிப்பான பாதுகாப்பு முறைகளைக் கையாளனும். ஹெச்ஐவிங்கிறது உடல்ல சுரக்கிற நீர்மங்கள் வழியாப் பரவுங்கிறதால, சிறு கவனக்குறைவுகூட அந்த நோயை பரப்பிடும்.

இந்த ரிஸ்கைப் புரிஞ்சுக்கிட்டு ஒரு பெண் உங்களை மனமுடிக்க முன்வந்தா நீங்க திருமணம் செஞ்சுக்கிறதைப் பத்தி யோசிக்கலாம் நண்பா. யாருடைய வலியுறுத்தலாலயும் ஏன் உங்க அம்மாவே வலியுறுத்தி நீங்க பை செக்சுவல்ங்கிறதையும் ஹெச்ஐவி பாதிப்புள்ளவர்ங்கிறதையும் மறைச்சு, திருமணம் செஞ்சுக்கச் சொன்னாக்கூட அதை செஞ்சிடாதீங்க. உறவுகளோட அழுத்தத்துக்கும் பணியாதீங்க. உங்க பிரச்னையை அது இன்னும் பலமடங்காக்கிடும்.

உங்களுக்கு இப்போ ஒரு மருத்துவரோட ஆலோசனை தேவை. மகப்பேறு மருத்துவரும் மருத்துவக் கட்டுரையாளருமான டாக்டர் சசித்ரா தாமோதரன் உங்களுக்கு சில ஆலோசனைகள் சொல்றாங்க.

தற்கொலை எண்ணம்
தற்கொலை எண்ணம்
Representational Image

"முழுக்க ஓரினச் சேர்க்கையில இருந்து வெளியில வந்துட்டேன். ஹெச்ஐவிக்கும் சரியான சிகிச்சை எடுத்திக்கிட்டிருக்கேன்... இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு இந்த இளைஞர் கேள்வி கேட்கலே. அம்மாவைச் சமாதானப்படுத்த, பிரச்னையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்ன்னு தான் கேட்டிருக்கார். முழுசா ஓரினச் சேர்க்கையிலிருந்து வெளியே வராம, ஹெச்ஐவி சிகிச்சையை சரியா எடுத்துக்காம திருமணம் செஞ்சுக்கிறது இன்னொரு பெண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கிறதாகிடும். இது நியாயமில்லை.

ஒருவேளை ஒரினச் சேர்க்கையிலிருந்து வெளியே வந்து, ஹெச்ஐவிக்கு முறையா சிகிச்சை எடுத்திக்கிட்டிருந்தார்னா இவர் தாராளமா திருமணம் செஞ்சுக்கலாம். இன்னைக்கு ஏஆர்டி-ங்கிற கூட்டுமருந்து, ஹெச்ஐவி செல்களோட எண்ணிக்கையைக் குறைக்கிறதோட அதனால ஏற்படும் பாதிப்புகளையும் பெரியளவில் கட்டுப்படுத்துது. கடந்த 25 ஆண்டுகளா அப்படி நலமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற ஹெச்ஐவி நோயாளிகளை நாங்க பாத்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனால், திருமணம் செஞ்சுக்கப்போற பெண்ணுக்கும் அவங்க குடும்பத்துக்கும், தனக்கு ஹெச்ஐவி இருக்குங்கிற உண்மையைச் சொல்லி ஒப்புதல் பெற்றுத்தான் திருமணம் செஞ்சுக்கணும்.

திருமணத்துக்குப் பிறகு அந்தப்பெண்ணுக்கு உடலுறவு மூலம் ஹெச்ஐவி பாதிப்பு ஏற்படலாம்ங்கிறதால ஆணுறை அல்லது பெண்ணுறை பயன்படுத்துவது கட்டாயம். இருவரும் நன்கு புரிந்துகொண்ட பிறகு குழந்தை வேணும்னு நினைக்கிறவங்க கர்ப்பம்கூட தரிக்கலாம். ஆனா, அதுக்கு முன்னாடி மருத்துவரோட ஆலோசனை ரொம்ப ரொம்ப முக்கியம். ஹெச்ஐவி பாசிட்டிவ் இருக்கிற ஒருத்தருக்கும் இல்லாத ஒருத்தருக்கும் பிறக்குற குழந்தை ஹெச்ஐவி இல்லாமப் பிறக்க அதிக வாய்ப்பிருக்கு. ஆனா இதெல்லாம் மருத்துவரோட ஆலோசனையின்படிதான் நடக்கனும்.

டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர்
டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர்

சமூகம் நம்மைப் பத்தி என்ன நினைக்கும், எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்றதுன்னு அச்சமிருந்தா, இந்த இளைஞர் திருமணம் செஞ்சுக்காம இருந்திடுறதே நல்லது"ங்கிறாங்க அவங்க.

ஹெச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க மன அழுத்தம் இல்லாம உற்சாகமா இருக்கணும் நண்பா. நாளாக நாளாக திருமணம் செஞ்சுக்கோங்கிற அழுத்தம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். திருமணம் செய்யலாமா, வேண்டாமாங்கிற முடிவை வேறு யாருமே எடுக்க முடியாது. நீங்கதான் எடுக்கனும். அம்மாக்கிட்ட உக்காந்து பேசுங்க. உங்க பிரச்னைகளை இன்னும் தெளிவா புரிய வையுங்க. உங்க அப்பாவால இந்த உண்மை தர்ற அழுத்தத்தைத் தாங்க முடியும்ன்னு நினைச்சீங்கன்னா அவர்கிட்டயும் பேச முயற்சி செய்ங்க. நிதானமா, குழப்பமில்லாம முடிவெடுங்க!

- பேசுவோம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism