Published:Updated:

பேசாக் கதைகள் - 1 | தனிமையும் தற்கொலை எண்ணமும் துரத்தும் காரணம் என்ன... இதிலிருந்து எப்படி மீள்வது?

பேசாக் கதைகள் - 1 | மன அழுத்தம், தனிமை

நாம மட்டும் ஏன் இப்பிடியிருக்கோம்... நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தனக்குள்ளே பேசிப்பேசி இறுதியா நாம பிறந்ததே வேஸ்ட்டுங்கிற அளவுக்கு அவங்க மனநிலை மாறிடுது.

பேசாக் கதைகள் - 1 | தனிமையும் தற்கொலை எண்ணமும் துரத்தும் காரணம் என்ன... இதிலிருந்து எப்படி மீள்வது?

நாம மட்டும் ஏன் இப்பிடியிருக்கோம்... நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தனக்குள்ளே பேசிப்பேசி இறுதியா நாம பிறந்ததே வேஸ்ட்டுங்கிற அளவுக்கு அவங்க மனநிலை மாறிடுது.

Published:Updated:
பேசாக் கதைகள் - 1 | மன அழுத்தம், தனிமை
ராஜாவுக்கு 26 வயசு. 'என்னை அடையாளப்படுத்திருக்கிறதுல பிரச்னை இல்லை சார்'ன்னு சொன்னதனால அவரோட பெயரை இங்கே பகிர்ந்துக்கிறேன். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான். அப்பா ராணுவத்துல வேலை செஞ்சு பணி நிறைவுக்குப் பிறகு சென்னையில ஒரு தனியார் நிறுவனத்துல வேலை செய்றார். அம்மாவும் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை செய்றவங்கதான். ராஜா ஒரே பையன். படிச்சு முடிச்சு சமீபத்துலதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்திருக்கார். வசதி வாய்ப்புல எந்தக் குறையும் இல்லாத ராஜா கொஞ்சநாளா இயல்பா இல்லை.

"கூட யாருமே இல்லாத மாதிரியிருக்கு சார். தனியாவே இருக்கணும்னு தோணுது. உன்னால எதுவுமே முடியாது. நீ பிறந்ததே வேஸ்ட்னு மனசுக்குள்ள குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்கு. திடீர்ன்னு தற்கொலை செஞ்சுக்கலாம்ன்னு கூட தோணுது. சம்பாதிக்கிறேன். வீட்டுக்குக் குடுக்கணும்ன்னுகூட அவசியமில்லை. விருப்பப்பட்ட மாதிரி வாழலாம். ஆனா, எதுலயுமே மனசு ஒட்டமாட்டேங்குது. யார்கூடவும் பழகக்கூட விருப்பமாயில்லை. சில நேரங்கள்ல ரொம்பப் பசியாயிருக்கு. சில நேரங்கள்ல சாப்பிடவே தோண மாட்டேங்குது. தூக்கமும் அப்படித்தான். பல ராத்திரிகள்ல தூக்கம் வராம தவிக்கிறேன். எதுலயுமே ஒட்டமுடியல. நிஜமாவே என்னால யாருக்கும் பயனேயில்லை சார்... நான் பிறந்ததே வேஸ்ட்..." ராஜா பேசிக்கிட்டே இருந்தார். அவர் கண்ணெல்லாம் கலங்கி சிவந்திருந்திருச்சு.

பேசாக் கதைகள் - 1 | மன அழுத்தம், தனிமை
பேசாக் கதைகள் - 1 | மன அழுத்தம், தனிமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை பாட்காஸ்ட் ஆக கேட்க... இங்கே க்ளிக் செய்யவும்!

வசதியான குடும்பம்... நல்ல வேலை... அப்பாவும் அம்மாவும்கூட வேலையில இருக்காங்க. அப்புறம் என்ன ராஜாவுக்குப் பிரச்னை... ராஜாவுக்கு தனிமைதான் பிரச்னை... அவர் தன்னைச் சுத்தி ஒரு மாய அரணை அமைச்சுக்கிட்டு அதுக்குள்ள மூச்சுமுட்ட உக்காந்திருக்கார். இன்னைக்கு நகர வாழ்க்கையில ஏராளமான இளைஞர்களுக்கு இந்தப் பிரச்னையிருக்குன்னு சொல்றாங்க மனநல நிபுணர்கள். அப்பா, அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால பிள்ளைகள் தங்களோட பிரச்னைகளை மனசு விட்டுப் பேச, கூட இருந்து அரவணைக்க யாரும் இல்லாம மனசளவுல பெருசா பாதிக்கப்படுறாங்க. நாளாக, நாளாக மனசுக்குள்ள இது பெரும் போராட்டமா மாறுது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாம மட்டும் ஏன் இப்பிடியிருக்கோம்... நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு தனக்குள்ளே பேசிப்பேசி இறுதியா நாம பிறந்ததே வேஸ்ட்டுங்கிற அளவுக்கு அவங்க மனநிலை மாறிடுது.

ராஜாவுக்கு ஏற்பட்டிருக்கறது, மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்ங்கிறார் மனநல மருத்துவர் சுந்தர். மன அழுத்தம்ங்கிற வார்த்தையை நாம சாதாரணமா கடந்து போயிடுறோம். அது ஒரு பெரிய பிரச்னைக்கான தொடக்கம்னுகூட நிறைய பேருக்குத் தெரியிறதில்லை. காய்ச்சலோ, தலைவலியோ... பாதிக்கப்பட்டவங்க நமக்கு நோய் வந்திருக்குன்னு உணரமுடியும். மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம பாதிக்கப்பட்டிருக்கோம்ன்னு உணரவும் முடியாது. உணர்த்தவும் முடியாது. ஒருவேளை அவங்க நடவடிக்கைகளை வச்சு, அவங்க மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு உணர்ற அளவுக்கு நமக்கும் பக்குவமோ விழிப்புணர்வோ இல்லை.

மன அழுத்தம்
மன அழுத்தம்

ஆய்வுகளை எடுத்துப் பாத்தா, நாட்டோட மொத்த மக்கள் தொகையில பத்து சதவிகிதம் பேருக்கு மன அழுத்தம் இருக்கலாம்ன்னு சொல்றாங்க. நாட்டுல நடக்கிற பல குற்றங்களுக்கு மன அழுத்தம் காரணமா இருக்கு. அதைவிட அபாயமா, தற்கொலை செஞ்சுக்கிறவங்கள்ல 50 சதவிகிதம் பேர் மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டவங்கன்னு தெரிய வந்திருக்கு. புள்ளி விவரங்களை ஆய்வு செஞ்சா, ஏழைகளைவிட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகமா ஏற்படுதுன்னு தெரியவருது.

'மன அழுத்தம் இந்த அளவுக்கு பாதிக்க என்ன காரணம் டாக்டர்'ன்னு நான் டாக்டர் சுந்தர்கிட்ட கேட்டேன்.

நம்ம வாழ்க்கைமுறைதான் காரணம்ங்கிறார் சுந்தர். ராஜா விஷயத்திலயும் இதுதான் நடந்திருக்கு. "சின்ன வயசுல இருந்தே அவருக்கு அப்பா, அம்மாவோட அரவணைப்பும், அன்னியோன்யமும் கிடைக்கலே. அவர் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வெளி எங்கேயுமே இல்லை. பணம், பணம்ன்னு அப்பாவும் அம்மாவும் ஓடிக்கிட்டிருக்க, ராஜா தனிமைப்பட்டிருக்காரு. யாருக்காக சம்பாதிக்கிறோம்... பிள்ளை நல்லாயிருக்கனும்ன்னுதானேன்னு ராஜாவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு நியாயம் இருக்கும். ஆனா, பிள்ளைகள் பணத்தைவிட அன்பையும் அரவணைப்பையும்தான் அதிகம் எதிர்பார்க்கிறாங்கன்னு இன்னைக்கிருக்கிற இளம் பெற்றோருக்குத் தெரியிறதில்லை.

நாம கூட்டுக்குடும்பமா வாழ்ந்த தலைமுறையோட பிள்ளைகள். தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பான்னு வீடு முழுக்க மனிதர்கள் இருப்பாங்க. பிள்ளைகளை கண்காணிப்பாங்க. தவறுகள் செய்யும்போது கண்டிப்பாங்க. திட்டி திருத்துவாங்க. அன்பா நல்ல விஷயங்களைக் கத்துக்குடுப்பாங்க. நம்ம பிரச்னைகளைக் கேக்க, தீர்வு சொல்ல உறவுகள் இருக்காங்கங்கிற தைரியமே நமக்கு நம்பிக்கையா இருக்கும். இன்னைக்கு நாம சிதறிட்டோம். பக்கத்துல பக்கத்துல வாழ்ந்தாலும் மனசு ஒட்டவே இல்லை. பிள்ளைக்கு அதை வாங்கிக் குடுக்கனும், இதை வாங்கிக்குடுக்கனும்னு நினைச்சாங்களே ஒழிய ராஜாவோட பிரச்னைகளை கேக்கனும். அவர்கூட உக்காந்து பேசனும்ன்னு அவங்க அப்பா அம்மாவுக்குத் தோணலே. சின்ன வயசுல மனசுல ஏற்பட்ட காயம், நாளாக நாளாக வளர்ந்து ரணமாயிருச்சு. ராஜாவுக்கு இப்போ தேவை, கொஞ்சம் சிகிச்சையும்... அன்பும் அரவணைப்பும்தான்" என்கிறார் சுந்தர்.

மன அழுத்தம்ங்கிறது ஒரு பெரு நோயோட அறிகுறி. நாளாக நாளாக மனநோயா மாறும். அவங்களால மகிழ்ச்சியையோ சோகத்தையோ உணரமுடியாமப் போயிடும். உச்சமா கோபப்படுவாங்க. என்ன செய்றோம்ன்னு தெரியாம செய்யத் தொடங்குவாங்க. எல்லோரையும் எதிரி மாதிரி நினைப்பாங்க. சந்தேகப்படுவாங்க. நாளாக நாளாக எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே தெரியாது.
தனிமை
தனிமை

ராஜாவுக்கு இப்போ தேவை ஒரு மனநல மருத்துவரோட வழிகாட்டுதல். அவரோட அப்பா, அம்மாவோட அன்பு, அரவணைப்பு. அதிர்ஷ்டவசமா ராஜா எந்த கெட்டப்பழக்கத்துக்கும் அடிமையாகலே... ரொம்ப சீக்கிரமே ராஜா மன அழுத்தத்துல இருந்து மீண்டு இயல்புக்குத் திரும்புவார்.

ராஜாவுக்கு மட்டுமில்லே... நம்மள்ல நிறைய பேருக்கு இதுமாதிரியான எதிர்மறை சிந்தனைகள் இருக்கலாம். அதை அடையாளம் கண்டு இந்த நிமிஷத்திலேயே வேர்பிடுங்கி வீசிடுறது நல்லது. நல்ல நண்பர்களை கூட வச்சுக்குங்க... பிரச்னைகளை மனசு விட்டுப் பேசுங்க. எவ்வளவு பெரிய வலியும் பேசுனா குறையும். மனசுல இருக்கிற காயம் மத்தவங்க தர்ற நம்பிக்கையால ஆறும்.

இன்னைக்கு எல்லாருமே இண்டஸ்ட்ரியல் லைப்ஸ்டைலுக்குள்ள வந்துட்டோம். நெருக்கடிகளிலிருந்து தப்பமுடியாது. வேலை செய்யிற இடம், வீடுன்னு எல்லா இடங்கள்லயும் அழுத்தம்ங்கிறது இருக்கத்தான் செய்யும். ஆனா நெருக்கடிகளை அங்கங்கே விட்டுட்டு வரப்பழகுங்க.

எதுவுமே நம்ம கை மீறி நடக்கப்போறதில்லை. நம்புங்க... உண்மையிலேயே வாழ்க்கை நல்ல விஷயங்களால நிறைஞ்சது..!

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!