Published:Updated:

`நான் அப்செட்டானா அவங்களால தாங்கவே முடியாது!' - சிரஞ்சீவி குறித்து நெகிழும் மருமகள் உபாசனா

"திருமணமானதும் நம் இந்தியப் பெண்களைத் துரத்தும் 'ஏதாச்சும் விசேஷமா?' என்ற கேள்வி என்னையும் விட்டுவைக்கவில்லை..."

Chiranjeevi Family
Chiranjeevi Family

அப்போலோ ப்ரோ ஹெல்த் புராஜெக்ட்டின் தொடக்க விழாவுக்காக சென்னை வந்திருந்தார், அப்போலோ பிரதாப் ரெட்டியின் பேத்தியும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி-யின் மருமகளுமான உபாசனா.

அவரை சந்தித்தோம். ``மருமகளை மகள் மாதிரி பார்த்துக்கிறது ஒரு வகை; மகளாகவே பார்த்துக்கிறது இன்னொரு வகை. இதில், என் மாமய்யா சிரஞ்சீவியும் மாமம்மா சுதாவும் ரெண்டாவது கேட்டகரி'' என்று கொண்டாடுகிறார், உபாசனா.

Upasana - Ram Charan
Upasana - Ram Charan
Instagram

''என் ஹஸ்பெண்ட் ராம்சரணைவிட மாமய்யாவும் அத்தம்மாவும்தான் எனக்கு ரொம்ப க்ளோஸ். எனக்கும் மாமய்யாவுக்கும் ஃபிட்னஸ் மேல ரொம்ப ஆர்வம்கிறதால, அதுபத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். என்னோட யூடியூப் சேனலுக்கு யாரை இன்டர்வியூ எடுக்கலாம்னு ஐடியா கொடுப்பார். என்னோட 'B Positive' மேகஸினை படிச்சுட்டு விமர்சனம் செய்வார்.

அத்தம்மா, எமோஷனல் சப்போர்ட் நிறைய செய்வாங்க. பிசினஸ் விஷயத்துல நான் எப்போவாவது அப்செட்டா உட்கார்ந்திருந்தா, அவங்களால தாங்கவே முடியாது. 'பார்த்துக்கலாம் விடு'னு உடனே சமாதானப்படுத்திடுவாங்க. அவங்க, ரொம்ப எதார்த்தமான கேரக்டர். வீட்ல எல்லாரும் ஒவ்வொரு பக்கம் வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருப்போம். நம்ம கலாசாரம், பழக்கவழக்கம், பாரம்பர்ய உணவுன்னு எங்களை இணைக்கிற புள்ளி, அத்தம்மாதான். எங்க எல்லாரையும் வீட்டுக்குள்ள அன்பால கட்டிவெச்சிருக்கிறவங்க அவங்க'' என்றவர், திருமணமானதும் நம் இந்தியப் பெண்களைத் துரத்தும் 'ஏதாச்சும் விசேஷமா?' என்ற கேள்வி, தன்னையும் விட்டுவைக்கவில்லை என்கிறார்.

Actor Chiranjeevi
Actor Chiranjeevi
Twitter

'' 'கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு, இன்னும் ஏன் நீங்க குழந்தை பெத்துக்கலை?'ன்னு வீட்டுக்கு வெளியே நிறைய பேர் எங்களைக் கேட்டிருக்காங்க. ஆனா, வீட்டுக்குள்ள மாமய்யாவோ அத்தம்மாவோ எங்களிடம் இதுவரைக்கும் இந்தக் கேள்வியை கேட்டதே இல்ல. அது எங்களோட விருப்பம்னு சொல்லிட்டாங்க. என் மனசுக்குள்ள ஓர் ஆசை இருக்கு. புது வீட்ல குடியேறினதும்தான் நான் குழந்தை பெத்துப்பேன். என் குழந்தை அவங்க நானய்யா, நானம்மா மடியிலதான் வளரணும். அவங்ககூடத்தான் வாழணும். இதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன்!''- வார்த்தைகளில் அன்பும் முகத்தில் புன்னகையுமாகச் சொல்கிறார், உபாசனா.