Published:Updated:

``அப்பா வாங்கிக்கொடுக்காத ஷூவுக்காக வருத்தப்படாதே!’’ - 15 வயது 'சிக்கு'க்கு விராட் கோலியின் கடிதம்

விராட் கோலி
விராட் கோலி ( facebook.com )

சில நேரங்களில், பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்று நீ யோசிக்கலாம். ஆனால், ஒன்றை நினைவில்கொள். எந்த நிபந்தனையுமின்றி நம்மை நேசிக்க நம் குடும்பத்தால் மட்டுமே முடியும்.

ர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் போட்டிகளில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

விராட் கோலி
விராட் கோலி
facebook.com

ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கும் வேளையில், தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய ஒரு கடிதத்தைப் பதிவிட்டுள்ளார். 15 வயது கோலிக்கு 31 வயது கோலி எழுதியுள்ள இந்தக் கடிதம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

"ஹாய் சிக்கு" என்று கோலியின் செல்லப் பெயருடன் தொடங்கும் இந்தக் கடிதத்தில், அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

facebook post
facebook post
facebook.com

"ஹாய் சிக்கு, முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் எதிர்காலத்தைப் பற்றி என்னிடம் கேட்க நிறைய கேள்விகளை வைத்திருப்பாய். மன்னித்துவிடு, அதில் பல கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. ஏனென்றால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத வரையில்தான் அனைத்து ஆச்சர்யங்களும் இனியதாகவும், அனைத்து சவால்களும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஒவ்வொரு ஏமாற்றமும் பாடம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. இன்று இதை நீ உணர்ந்திருக்கமாட்டாய். இலக்கைவிட பயணமே பெரியது. அழகானது.

இது விராட் கோலி, கிரிக்கெட்டர் கோலிக்குத் தந்த இரண்டாவது இன்னிங்ஸ்! #HBDKOHLI

விராட்... உனக்கு நான் சொல்ல வருவதெல்லாம், வாழ்க்கையில் உனக்குப் பெரிய விஷயங்கள் எல்லாம் காத்திருக்கின்றன என்பதைத்தான். உன் பாதையில் வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும். உன்னிடம் உள்ள எதையும் எளிதாக எடை போட்டால் தோற்றுவிடுவாய். இது அனைவருக்கும் பொருந்தும். எழுச்சிகொள்ள என்றும் மறக்கமாட்டேன் என்று உனக்கு நீயே உறுதி எடுத்துக்கொள். முதலில் தோற்றாலும் மீண்டும் முயன்று பார்.

விராட் கோலி
விராட் கோலி

பலர் உன்னை விரும்புவார்கள். பலர் வெறுப்பார்கள். உன்னைப் பற்றி அறியாதவர்களை நீ கவனத்தில் கொள்ளாதே. எப்போதும் நீ உன்னை நம்பு.

விராட் கோலியின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதான்! #HBDKohli

எனக்குத் தெரியும், அப்பா இன்று உனக்குப் பரிசளிக்காத அந்த ஷூவைப் பற்றி நீ நினைத்துக்கொண்டிருப்பாய் என்று. இன்று காலையில் அவர் உன்னை அணைத்த அன்பிற்கும், உன் உயரம் பற்றிய ஜோக்கால் சிரிப்பைப் படரவிட்ட மகிழ்ச்சித் தருணத்துக்கும் எந்த ஷூவும் ஈடாகாது. அதை நினைத்து மகிழ்ச்சிகொள். சில நேரங்களில் அவர் உன்னிடம் கடுமையாக நடந்துகொள்ளலாம். ஏனென்றால், அவர் உன் நன்மையை விரும்புகிறார்.

விராட் கோலி
விராட் கோலி
facebook.com

சில நேரங்களில், பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்று நீ யோசிக்கலாம். ஆனால் ஒன்றை நினைவில்கொள். எந்த நிபந்தனையுமின்றி நம்மை நேசிக்க நம் குடும்பத்தால் மட்டுமே முடியும். நீ அவர்களை திருப்பி நேசி. அவர்களை மதித்து அவர்களுக்கு உன் நேரத்தைச் செலவிடு. அப்பாவிடம், நீ அவரை நிறைய நேசிப்பதாகச் சொல். இன்றைக்கு சொல். நாளைக்கும் சொல். அடிக்கடி சொல்லிக்கொண்டே இரு.

கடைசியாக... உன் இதயத்தை பின் தொடர்ந்துச் செல். அன்பாக இரு. கனவுகளைத் துரத்திச் செல். கனவு காண்பதால் எவ்வளவு பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்டு. நீ நீயாக இரு.

மேலும், அந்த பரோட்டக்களை ருசி. இனி வரும் ஆண்டுகளில் அது மிகவும் ஆடம்பரமாகிவிடும்!'' என்று அந்தக் கடிதம் முடிந்துள்ளது.

virat kohil
virat kohil
face book

எந்த ஆடம்பர வாக்கியங்களும் இன்றி தன் மனதில் உள்ள உணர்வுகளை எளிமையாக குட்டி விராட்டுக்கு வெளிப்படுத்தியுள்ள கோலியின் இந்தக் கடிதம் அவர் ரசிகர்களை மட்டுமன்றி அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.

இந்தக் கடிதம் மூலம் தன் ரசிகர்களை உருகவைத்துள்ள கோலி , தன் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் மலைப்பிரதேசத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

"இந்த தெய்விகமான இடத்திற்கு என் உயிர்துணையுடன் வந்தததில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் . உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றி" என்று மலைப்பிரதேசத்தில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு