Published:Updated:

"3 வயதில் பறிபோன பார்வை; இன்று சமூக அறிவியல் ஆசிரியர்" - நம்பிக்கை விதைக்கும் விழித்திறனற்ற தம்பதி

விழித்திறனற்ற ஆசிரியர் தம்பதி

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் வாரந்தோறும் 'உடைத்துப் பேசுவோம்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட எளிய மக்களுடைய, புறக்கணிக்கப்பட்ட கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

"3 வயதில் பறிபோன பார்வை; இன்று சமூக அறிவியல் ஆசிரியர்" - நம்பிக்கை விதைக்கும் விழித்திறனற்ற தம்பதி

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் வாரந்தோறும் 'உடைத்துப் பேசுவோம்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட எளிய மக்களுடைய, புறக்கணிக்கப்பட்ட கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

Published:Updated:
விழித்திறனற்ற ஆசிரியர் தம்பதி

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் வாரந்தோறும் 'உடைத்துப் பேசுவோம்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட மக்களுடைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி ராமு மற்றும் ஈஸ்வரியை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தோம். இருவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். புன்னகையுடன் நம்மை வரவேற்று ராமு பேசத் தொடங்கினார்.

பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி
பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி

"எனக்கு மூன்றரை வயதில் சிக்கன் பாக்ஸ் வந்ததால கண் பார்வை பறிபோனது. அந்த சமயம் வீட்டுல எல்லாருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சிதான். ஆனாலும், கொஞ்ச கொஞ்சமா அவங்களும் மீண்டு வந்து என்னையும் மீட்டெடுத்தாங்க. பிறகு ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடிச்சிட்டு இன்றைக்கு அரசுப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்துட்டு இருக்கேன். நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் பசங்களுக்கு வகுப்பு எடுத்திருந்தாலும் இன்றைக்கும் பசங்க என்னை ஞாபகம் வச்சு ஃபோன் பண்ணி பேசுறாங்க.. அவங்க எதிர்காலம் குறித்து என்னுடன் ஆலோசனை பண்றாங்க. அந்த வகையில் பசங்களுக்கு பிடித்த டீச்சரா இருக்கேன்"" என்றவரின் முகத்தில் அத்தனை பெருமிதத்தை பார்க்க முடிந்தது! அவரைத் தொடர்ந்து அவரின் மனைவி ஈஸ்வரி பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"எனக்கு பிறவியிலேயே பார்வைத்திறன் இல்ல. என் அப்பாதான் என்னுடைய பலம். ஸ்கூல்ல பார்வைத்திறன் இல்லாதவங்க பயிலும் பள்ளியில் படிச்சிருந்தாலும் காலேஜ் நார்மலான பசங்க படிக்கிற இடத்தில்தான் படிச்சேன். நான் மியூசிக் பாடப்பிரிவை தேர்வு செய்ததால ஆரம்பத்தில் அங்க நிறைய புறக்கணிப்புகளையும், கேலிகிண்டல்களையும் சந்திச்சிருக்கேன். நான் நல்லா பாட ஆரம்பிச்ச பிறகு நானே நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு வந்தப்ப தான் எல்லாமும் மாறுச்சு. விருப்பப்பட்ட படியே இப்ப மியூசிக் டீச்சரா பசங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். பார்வைத்திறன் உள்ள பசங்களுக்கு நாம பாட்டு சொல்லிக் கொடுக்கப்போறோம் என்றபோது கொஞ்சம் பயம் இருந்துச்சு. ஆனா, பசங்க எல்லாரும் அத்தனை இயல்பா என்னை ஏத்துக்கிட்டது என் பயத்தையெல்லாம் சுக்கு நூறாக்கிடுச்சு. பசங்களும் சரி, கூட வேலை பார்க்கிற ஆசிரியர்களும் சரி அன்பா பார்த்துப்பாங்க" என்றதும் ராமு தொடர்ந்தார்.

பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி
பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி

"மியூசிக் புரோகிராமிற்கு கீபோர்டு பிளே பண்ணப் போவேன். அந்த புரோகிராமில் ஈஸ்வரி பாட்டு பாடுவாங்க. அங்கே நட்பா பேச ஆரம்பிச்சோம். ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப் போகவும் வீட்ல சொன்னோம். ரெண்டு பேர் வீட்டு சம்மதத்துடன் எங்களுடைய காதல் திருமணம் கை கூடியது. இப்ப மூத்த பையன் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிட்டு நீட் தேர்வுக்கு தயார் செய்துட்டு இருக்கான். பொண்ணு 10-ம் வகுப்பு படிக்கிறா. எங்க பசங்ககிட்ட நாங்க எதையுமே திணிக்கிறதில்லை. அவங்க மேல எங்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கு..." என்றதும் ஈஸ்வரியிடம் எஸ்பிபி நினைவலைகள் குறித்துக் கேட்டோம்.

எனக்கு சின்ன வயசில இருந்தே எஸ்பிபி சாருடைய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அவருடைய குரல் மனதுக்கு நெருக்கமானதொரு உணர்வை கொடுக்கும். அவரை எப்படியாவது சந்திக்கணும் என்கிற ஆசை இருந்துச்சு. ஆனா, அது பலமுறை என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல.

நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்ப `சிகரம்' பட ஷூட்டிங்கிற்காக எங்க ஸ்கூலில் இருந்து 6 பசங்களை கூட்டிட்டு போயிருந்தாங்க. அந்த 6 பேரில் நானும் ஒருத்தி. அந்தப் படத்தில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' பாடலில் அவரை நாங்க போய் சந்திக்கிற மாதிரி ஒரு சீன் வரும். அப்பதான் முதல் தடவையா அவரை சந்திச்சேன். அதன் பிறகு ஸ்கூலிலேயே மறுபடி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரும், நானும் சேர்ந்து ஒரு பாடல் பாடினோம். அவருடன் சேர்ந்து பாடினது ரொம்பவே சந்தோஷமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்துச்சு. என் வாழ்க்கையில் நான் ரொம்ப உடைந்து அழுத தருணம்னா அது அவருடைய இறப்பு செய்தி கேட்டபோதுதான்! அவர் இல்லைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியல!' என்றார்.

ஆசிரியராக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்களுடைய பர்சனல் லைஃப் குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!