Published:Updated:

``உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைப்பது எப்படி?" - விரிவான வழிகாட்டி

 எதிர்பார்ப்புகள்
எதிர்பார்ப்புகள்

ஆணும் பெண்ணும் காதலிக்கத் தொடங்கும்போது இந்த எதிர்பார்ப்புகள் புல்லரிப்பைத் தந்தாலும், நாளடைவில் அதையே தங்களைச் சுற்றியுள்ள முள் வேலியாக உணரத் தொடங்கிவிடுவர்.

"றவுகள் என்பவை நம் கையில் பிடித்திருக்கும் மணல் துகள்கள் போன்றவை. எப்போதும் உதிர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், அதை எப்படித் தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது திறமை."

மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

`கல்' பட்டு கண்ணாடி உடைவதுபோல் `எதிர்பார்ப்புகள்' பட்டு உறவுகள் உடைந்துவிடுகின்றன. உறவுகளில் விரிசல் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமே எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போவதுதான். எனவே, அவற்றைக் கட்டுக்குள் வைப்பது தொடர்பாக மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறும் விரிவான வழிகாட்டுதல் இதோ...

உறவுகளும் உணர்வுகளும் :

"தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு" என்பார்கள். அதுபோலதான் இங்குள்ள ஒவ்வொருவரின் எண்ணங்களும் ரசனைகளும் வெவ்வேறாக உள்ளன. நம் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு ஒருவரின் மீது திணிக்கும்போது அது எதிர்பார்ப்பாக மாறுகிறது. இது நிறைவேறாமல் போகும்பட்சத்தில் உறவு முறிந்துபோகிறது. பிறரின் எதிர்பார்ப்பை நாம் ஈடு செய்யாதபோதிலும் இது ஏற்படும்.

`எதிர்பார்ப்புகள்'
`எதிர்பார்ப்புகள்'

பெற்றோர்-பிள்ளைகள், கணவன் மனைவி, காதலர்கள், சகோதரர்கள், சக பணியாளர்கள், நண்பர்கள் என எந்த உறவாக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பு. அவை நம்மைச் சார்ந்தவருக்கு நெருடலைத் தராத வகையில் இருக்க வேண்டும். ஆனால், உறவு முறிவை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு பெரும்பாலும் அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகவே உள்ளது.

இததைத் தவிர்க்க தன்னைப் போன்றே பிறருக்கும் உணர்வுகள் உள்ளன. நான் எதிர்பார்ப்பதுபோல அவர் என்னிடம் எதிர்பார்ப்பதிலும் தவறில்லை என்ற பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உறவுகளில் லாப, நஷ்டக் கணக்கு - பேசித் தீர்த்துவிடலாம்:

லாப, நஷ்டக் கணக்கு
லாப, நஷ்டக் கணக்கு

பொதுவாகவே, நமது மனம் உறவுகளை இரண்டு வகையாகப் பிரித்து வைத்திருக்கும். நமக்குப் பிடித்த, இதமான காரியங்களைச் செய்பவர்கள் லாபக் கணக்கிலும், எரிச்சல், கோபத்தை ஏற்படுத்துவோர் நஷ்டக் கணக்கிலும் வருவர். ஆனால், இது நிலையற்றது. லாபக் கணக்கில் உள்ளவர் நமக்குப் பிடிக்காததைச் செய்யும்போது நஷ்டக் கணக்குக்கு வருவது இயல்பு.

தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்! #VikatanPhotoCards

இது போன்ற நேரங்களில் உறவுகளில் உரசல் ஏற்படும் என்று வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் பேசித் தீர்ப்பதுதான் சாலச் சிறந்தது. அப்படிப் பேசும்போது நாம் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உறவில் விரிசல்
உறவில் விரிசல்

உதாரணத்துக்கு, உங்கள் நண்பர் ஒருவர் நீங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக நடந்துகொண்டு உங்களைக் காயப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவரிடம் பேசும்போது "நீ என்னை காயப்படுத்திட்ட" என்று சொல்வதைவிட "உன் செயல் என்னைக் காயப்படுத்திட்டு" என்று சொல்லும்போது உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அது போல் நாம் கோபமாக இருக்கும்போது பிறரிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு எப்போதும் வீரியம் அதிகம். அது உறவுகளை ஒரே நொடியில் முறித்துவிடும்.

காதலில் மிதமிஞ்சிக் காணப்படும் எதிர்பார்ப்புகள்:

காதலில் எதிர்பார்ப்புகள்
காதலில் எதிர்பார்ப்புகள்

எல்லா உறவுகளிலும் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், காதலில் இதன் நெடி சற்று தூக்கலாகவே இருக்கும்! ஆணும் பெண்ணும் காதலிக்கத் தொடங்கும்போது இந்த எதிர்பார்ப்புகள் புல்லரிப்பைத் தந்தாலும் நாளடைவில் அதையே தங்களைச் சுற்றியுள்ள முள் வேலியாக உணரத் தொடங்கிவிடுவர். தன் காதலன்/காதலியின் ஒட்டுமொத்த சந்தோஷமாக `தான்' மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது எதிர்பார்ப்பின் உச்ச நிலை. இதனால் பாதிக்கப்படும் இணையர் தன் காதலை முடித்துக்கொள்வார். வெகு நாள்களாகக் காதலித்து திருமணம் செய்தவர்கூட சில மாதங்களிலேயே விவகாரத்தை நாடிச் செல்லும் காரணமும் இதுவே.

காதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி?!

மண வாழ்க்கைக்கும் இது பொருந்தும். பெரும்பாலும் மணமுறிவு, நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகளாலேயே ஏற்படுகிறது. எனவே, எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படக்கூடிய அளவில் இருந்தால் பிரச்னையே இல்லை.

எதிர்பார்ப்புகள்
எதிர்பார்ப்புகள்

நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த ஒன்று நிகழாதபோது ஏற்படும் ஏமாற்றத்தால் வரக்கூடிய வலியை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அந்த வலியைத் தந்த உறவை ஒரேடியாகக் கைவிட நினைக்கும். அந்த நேரத்தில்தான் பக்குவமாகச் செயல்பட வேண்டும். இந்த உறவை இனிமேல் தொடரவே முடியாது என்னும் பட்சத்தில்கூட சிறு புன்னகையைவிட்டு வைக்கலாம். இது என்றேனும் அந்த உறவு துளிர் விட உதவும்.

எதிர்பார்ப்புகள் கொஞ்சம் இருக்கட்டும்:

உறவுகள்
உறவுகள்

அதெல்லாம் சரி, "எதிர்பார்ப்புகளே இல்லாத உறவுகள் ரசம் இல்லாத கண்ணாடிபோல இருக்காதா?" என்றால் , வாழ்க்கை சுவைக்க எதிர்பார்ப்புகள் வேண்டும்தான். ஆனால், அவை வாழ்க்கையின் சுவையைக் கெடுத்துவிடாதபடி அளவாகவும் நியாயமாகவும், சுயநலமில்லாமலும் இருந்தால் நலம்.

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை. மனகசப்புகளும் உறவு விரிசல்களும்கூட இல்லை. உடைந்த கண்ணாடியிலும் பிம்பங்கள் தெரிவதுபோல நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற உறவுகளிடமும் பாசமும் நேசமும் மறைந்திருப்பது உண்மைதான். ஆகையால், எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி பழகுவோம். பிரிந்து சென்ற உறவுகளை ஒன்றிணைத்து இருக்கின்ற உறவுகளைக் கொண்டாடுவோம். இனி வரும் உறவுகளையும் வரவேற்போம்.

அடுத்த கட்டுரைக்கு