Published:Updated:

ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மீண்டும் உறவுகொள்ள முடியும்? காமத்துக்கு மரியாதை S2 E21

Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

``மனதுக்குப் பிடித்ததைப் புதிதாகச் செய்ய ஆரம்பிக்கையில் கிடைக்கிற உற்சாகத்துக்கும் சிலிர்ப்புக்கும் அணை போட முடியாது என்பதால், புதிதாகத் திருமணமானவர்களால் ஒரே நாளில் பலமுறை உறவு வைத்துக்கொள்ள முடியும்."

ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மீண்டும் உறவுகொள்ள முடியும்? காமத்துக்கு மரியாதை S2 E21

``மனதுக்குப் பிடித்ததைப் புதிதாகச் செய்ய ஆரம்பிக்கையில் கிடைக்கிற உற்சாகத்துக்கும் சிலிர்ப்புக்கும் அணை போட முடியாது என்பதால், புதிதாகத் திருமணமானவர்களால் ஒரே நாளில் பலமுறை உறவு வைத்துக்கொள்ள முடியும்."

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

புதிதாகத் திருமணமானவர்கள் மட்டுமல்ல, திருமணமாகிப் பல வருடங்களான தம்பதிகளும் இந்தக் கேள்வியை uravugal@vikatan.com-ல் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். `ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மறுமுறை உறவுகொள்ள முடியும்' என்கிற கேள்விதான் அது. இதற்கான பதிலைச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

பாலியல் நிபுணர் காமராஜ்
பாலியல் நிபுணர் காமராஜ்

``இந்தக் கேள்விக்கான பதில் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன; தம்பதியரிடையே இருக்கிற காதல்; ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது. சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது என்றால், ஒருமுறை உறவுகொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே மறுபடியும் உறவு வைத்துக்கொள்ள கணவன், மனைவி இருவராலுமே முடியும். மனதுக்குப் பிடித்ததைப் புதிதாகச் செய்ய ஆரம்பிக்கையில் கிடைக்கிற உற்சாகத்துக்கும் சிலிர்ப்புக்கும் அணை போட முடியாது என்பதால், புதிதாகத் திருமணமானவர்களால் ஒரே நாளில் பலமுறை உறவு வைத்துக்கொள்ள முடியும். எல்லோருடைய தேனிலவு நாள்களும் இப்படித்தான் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமணமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன என்றால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு பழகியிருப்பார்கள். உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் `புதிது' என்ற எண்ணம் குறைய ஆரம்பித்திருக்கும். விளைவு, தாம்பத்திய உறவின் மீதான ஆர்வம் ஓரளவுக்கோ, சற்றுக் கூடுதலாகவோ குறைய ஆரம்பிக்கும். ஒருமுறைக்கும் அடுத்த முறைக்கும் இடையில் 2 அல்லது 3 நாள்கள்கூட ஆகலாம். இதுவும் தனியறை, மனநிலை, பரஸ்பர விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

காதலிக்கும்போது, கூடவே இருக்க வேண்டும்; தொட்டுப் பேச வேண்டும்; முத்தமிட வேண்டும் என்பதுபோன்ற உணர்வுகள் ஆண், பெண் மனங்களுக்குள் தொடர்ந்துகொண்டே இருக்கும். திருமணமான பிறகு, இந்த உணர்வை மறுபடியும் உணர முடியாதல்லவா? இதே உணர்வுதான் தாம்பத்திய உறவிலும் நிகழும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விந்து வெளியேறியவுடன் ஆண்களுக்கு `refractory period' தேவைப்படும். `ஓய்வு நிலை' என்று இதைச் சொல்லலாம். சிலருக்கு சில நிமிடங்கள், சிலருக்கு சில மணி நேரம் என்று இந்த பீரியட் ஆணுக்கு ஆண் வேறுபடும். இந்த நேரத்தில் மனைவி தூண்டுதல் கொடுத்தால், கணவனால் வெகு சீக்கிரமாக மறுபடியும் உறவில் ஈடுபட முடியும். தவிர, உறவுகொண்ட பிறகு, அன்றைய தினம் அவர்களுடைய உறவு எப்படியிருந்தது, இருவருக்கும் அது இனிமையாக இருந்ததா, ஒருவரையொருவர் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பனவற்றைப் பொறுத்தும் அடுத்த உறவு நிகழும்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

இளவயதினரால் மட்டுமே சில நிமிட இடைவெளியில் உறவுகொள்ள முடியும் என்றில்லை. 60 வயது, ஆனால், பார்ட்னர் புதியவர் என்றால் அடுத்தடுத்து 10 நிமிட இடைவெளியில் இரண்டு, மூன்று முறை உறவுகொள்ள முடியும். சுத்தமாக இருப்பது, அழகுபடுத்திக்கொள்வது, தனிமை, வெவ்வேறு நிலைகள், நிறைய காதல்... இவை அத்தனையும் இருந்தால் எந்த வயதிலும் 5 நிமிட இடைவெளியில் இரண்டாவது முறை உறவுகொள்ள முடியும்'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism