Published:Updated:

உடல் எடைக்கும் உடலுறவு மகிழ்ச்சிக்கும் தொடர்பிருக்கிறதா? உண்மை என்ன? பெட்ரூம் கற்க கசடற - 13

இளம்பெண்களின் பாலியல் நல்வாழ்வு பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள், பாலியல் வாழ்க்கையில் திருப்தியடையாதவர்கள் மிக அதிகம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 18 முதல் 39 வயதுடைய பெண்களில் 50 சதவிகிதத்தினர் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.

- குறள்

(நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.)

`புல் எப்போதும் பசுமையாக இருக்கும்' என்று நினைப்பது மேலோட்டமான பார்வை. அதே போல சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் உலகளாவிய லென்ஸ் மூலம், மக்கள் அனைவருமே அற்புதமான உடலுறவு கொண்டு வருவதாக நம்பப்படுகிறது அல்லது குறைந்தபட்சம் நம்மைவிட மற்றவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பாக இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், உண்மை அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.

உடலுறவு மற்றும் பாலியல் வாழ்க்கையில் நீங்கள் திருப்தியாக உணர்கிறீர்களா? அப்படியானால் மிக மகிழ்ச்சி. ஆனால், கவலை, மோசமான உடல் தோற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் பாலியல் அதிருப்திக்கு வழிவகுக்கும்.

ஆம்... இளம்பெண்களின் பாலியல் நல்வாழ்வு பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள், பாலியல் வாழ்க்கையில் திருப்தியடையாதவர்கள் மிக அதிகம் என்பதை உறுதிப்படுத்துகிறது. 18 முதல் 39 வயதுடைய பெண்களில் 50 சதவிகிதத்தினர் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துன்பங்களை அனுபவித்துள்ளனர். அதோடு, ஐந்து பெண்களில் ஒருவருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் செயலிழப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

அப்படியானால், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

மோசமான சுய உருவ எண்ணத்தை விரட்டுங்கள்!

கல்வி, வருமானம், உடற்பயிற்சி மற்றும் இனப்பெருக்க வரலாறு ஆகிய விஷயங்களும் தாம்பத்ய வாழ்க்கையோடு ஏதோ ஒரு விஷயத்தில் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. எப்படி?

மேலே கூறிய ஆய்வில்... கடந்த 30 நாள்களில் அவர்களின் பாலியல் அனுபவம் மற்றும் உணர்வுகள் குறித்து கேட்கப்பட்டன. இவற்றில் ஆசை, தூண்டுதல், உச்சக்கட்டம், ஒருவருக்கொருவர் பதிலளித்தல், இன்பம் மற்றும் பாலியல் கவலைகள் ஆகியவை அடங்கும்.

இவற்றுக்கான பதில்களைக் கொண்டு பாலியல் தொடர்பான தனிப்பட்ட துன்பம் கணக்கிடப்பட்டது. பெண் பாலியல் துன்ப அளவுகோல் உருவாக்கப்பட்டது. கவலை, பதற்றம் அல்லது அசௌகர்யம் போன்ற எதிர்மறையான மற்றும் சுய-கவனம் சார்ந்த விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன.

இந்தப் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் தனிமை எண்ணத்தோடு இருந்தார்கள். 6.2 சதவிகிதம் பேர் தங்கள் எடை மிகக் குறைவாக இருப்பது உடலுறவுக்கு உகந்ததாக இல்லையென நினைத்தனர். 46.8 சதவிகிதம் பெண்களோ தங்களின் அதிக எடை அல்லது உடல் பருமன் காரணமாக உடலுறவு திருப்தியாக இல்லையென கவலைப்பட்டனர். இணைக்குப் போதுமான இன்பம் தர முடியவில்லையோ எனத் தாழ்வு மனப்பான்மை கொண்டனர்.

இந்த எண்ணங்களின் காரணமாக இந்தப் பெண்கள் பாலியல் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட துயரங்களை அனுபவித்தனர். இதில் குற்ற உணர்வு, சங்கடம், மன அழுத்தம் அல்லது அவர்களின் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய மகிழ்ச்சியற்ற தன்மை ஆகியவை அடங்கும். இதனாலேயே ஐந்து பெண்களில் ஒருவருக்கு பாலியல் செயலிழப்பு ஏற்படுகிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels
பொய்யான ஆர்கஸம்; கட்டிலில் இந்த நாடகம் மட்டும் வேண்டாம் தம்பதிகளே! பெட்ரூம் - கற்க கசடற - 6

அதென்ன பாலியல் செயலிழப்பு..? உறவில் ஈடுபட முடியாமை, தயங்குதல், தள்ளிப்போடுதல், புறக்கணித்தல், பாதியிலோ அரைகுறையாகவோ விட்டுவிடுதல், வலி அல்லது வேதனையை அனுபவித்தல்... இப்படி பல விஷயங்கள் உண்டு இதில்.

மிகவும் பொதுவான பாலியல் செயலிழப்பு என்பது சுய உருவம் பற்றிய தாழ்வு மனப்பான்மையே. இது 11 சதவிகித பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறது. 9 சதவிகித பெண்களைத் தூண்டுதலில் உள்ள சிரமங்கள் உறவைப் பாதித்தன. 8 சதவிகிதத்தினருக்கு ஆசை ஏற்படுவது ஒரு பிரச்னையாக இருந்தது. உச்சக்கட்டத்தை அடைய இயலாமை 7.9 சதவிகித பெண்களைப் பாதித்தது. 10 பெண்களில் 3 பேர் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துயரங்களைக் கொண்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாகப் பெண்கள் அதிக எடை அல்லது உடல் பருமனோடு இருந்தால், பாலியல் வாழ்வுக்கு தாங்கள் தகுதியில்லாதவர்கள், தங்களால் இணையைத் திருப்திப்படுத்த முடியாது என்று நினைத்து, தேவையற்ற கவலைகளை வளர்த்துக் கொள்கின்றனர். இதுவே ஒரு கட்டத்தில் பாலியல் செயலிழப்புக்குத் தள்ளிவிடும். ஆனால், இந்த எண்ணத்தில் எந்த உண்மையும் இல்லை. உடலின் வடிவத்துக்கும் உடலுறவின் திருப்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே மருத்துவ அறிவியல் கூறும் உண்மை. இந்தப் பிரச்னை உலகில் 12 சதவிகித பெண்களைப் பாதிக்கிறது என்பதால், அதிக கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

தாங்கள் பருமனாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது வழக்கம். மகப்பேற்றுக்குப் பின் இவர்கள் குழந்தைக்குப் பாலூட்டவும் தயங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கெல்லாம் சுய உருவம் குறித்த மோசமான எண்ணமே காரணம். தேவையற்ற இந்த எண்ணத்தைப் போக்கிக்கொள்வதே இதிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியான பாலியல் வாழ்வில் இன்பம் அடைவதற்கான முதல் வழி. இதுவே பெண்கள் நேர்மறையான பாலியல் வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான அடிப்படை.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels
`உடலுறவின் இன்பம் முத்தத்தில் அல்ல; இதிலிருந்துதான் தொடங்குகிறது!' - பெட்ரூம் கற்க கசடற - 8

இப்போது மன உளைச்சலுடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பாலியல் பிரச்னையாக மாறியிருக்கிறது பாலியல் சுய உருவம் பற்றிய தாழ்வு மனப்பான்மை. இது இளம் பெண்களின் தோற்றத்தைப் பற்றிய அழுத்தங்களைப் பிரதிபலிக்கிறது.

பல பெண்கள் சில நேரங்களில் பாலியல் செயலிழப்பை அனுபவிப்பார்கள்

உலகில் 50 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் சில முறையாவது பாலியல் செயலிழப்புக்கு ஆளாக நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில முறை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், எப்போதுமே அப்படித்தான் என்பது கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடிய பிரச்னை அல்ல.

பல பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதில் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான பெண்கள் உரிய முறையில் உடலுறவு கொள்ளாததால்தான் உச்சக்கட்டத்தை அடைவதில்லை. அதுபற்றி இணையோடு பேசத் தயங்கக் கூடாது.

ஆரோக்கியமான பாலுணர்வு என்பது என்ன?

பெண்களுக்கும் பாலுறவில் ஆர்வம் இருக்க வேண்டும். ஏனெனில், செக்ஸ் என்பது மிக இயல்பானது, இயற்கையானது. அது விரும்பப்பட வேண்டும். இணைகளுக்கிடையே ஒருமித்ததாகவும் அமைய வேண்டும். தூண்டுதல் செயல்பாடுகள் மற்றும் உடலுறவின் மூலம் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும். ஆனால், செக்ஸ் வலியை அளிப்பதாக இருக்கக் கூடாது. அது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பாலியல் அனுபவத்திலும் ஒரு பெண் இன்பத்தையும் முழுமையான புணர்ச்சியையும் அனுபவிக்க மாட்டாள் என்பது உண்மைதான். ஆனால், அந்த இன்பம் அடிக்கடி நிகழ வேண்டும். இதுவே ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Loc Dang from Pexels
செக்ஸில் பெண்களின் விருப்பங்களை அறிவதற்கான ஒரே வழி இதுதான்! - பெட்ரூம் கற்க கசடற - 10

உடல் பற்றிய தவறான எண்ணங்களைத் தவிர்க்கத் தொடங்குங்கள்

பெண்களின் பாலியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அறியப்பட்ட உண்மை இது.

இது ஒரு நபர் தன்னைப் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்வது மிக முக்கியம். ஆகவே, பாசிட்டிவ் பாடி இமேஜ் என்கிற உடல்பற்றிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம்.

இதற்கு என்ன செய்வது? தங்களுக்கு மிகவும் விரும்பத்தக்க அல்லது ஆரோக்கியமான எடையை அடைய முயல்வது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்வது ஒரு வழி. ஆனால் பிரச்னை பெரும்பாலும் அதைவிட ஆழமானது. சில பெண்களுக்கு, உடல் எடையைக் குறைப்பது இந்த எதிர்மறை உணர்வுகளை முடிவுக்குக் கொண்டு வராது. முதலில் அவர்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.

அதிக எடை கொண்ட பெண்கள் பலரும் மிகவும் கவர்ச்சியாக உணர்கிறார்கள் மற்றும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையைக் கொண்டுள்ளனர். இதுவே உண்மை.

Couple (Representational Image
Couple (Representational Image
Image by Free-Photos from Pixabay
நல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா? - பெட்ரூம் கற்க கசடற - 12

பாலியல் வாழ்க்கை பற்றி மருத்துவரிடம் பேசுங்கள்

குடும்ப மருத்துவர்கள் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் பாலியல் பற்றிக் கேள்விகள் கேட்பதில்லை. அதனால் நாமேதான் இந்த விஷயங்களை முன்வைத்து ஆலோசனை பெற வேண்டும். தேவையெனில், உளவியல் நிபுணரையும் நாடலாம்.

அதே நேரத்தில், மருத்துவர்களும் மற்ற உடல்நலப் பிரச்னைகளைப் பரிசோதிப்பதோடு நின்றுவிடக் கூடாது. பாலியல் கேள்விகளையும் சேர்க்க வேண்டும். நம் சமூகத்தில் பாலியல் விருப்பங்கள் அல்லது பாலியல் நோய்கள் பற்றிய அறிதலில் போதாமை உள்ளது. பெண்கள் தங்கள் பாலியல் உறவுகளில் திருப்தி அடைகிறார்களா என்று மகளிர் நல மருத்துவர்கள் கேட்க வேண்டும். அது அவர்களுக்கு இந்த மெளனப் பூட்டைத் திறக்க உதவக்கூடும்.

கர்ப்பமாவதில் சிக்கல் இருந்தால், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரிடம் செல்வீர்கள். அவர்களால் உங்களுக்கு உதவ முடியவில்லை என்றால், நீங்கள் அந்த விஷயத்தை அப்படியே கைவிட்டு விடுவீர்களா... மாட்டீர்கள். நீங்கள் வேறொரு நிபுணரைத் தேடுவீர்கள். அதேபோல உங்கள் பாலியல் வாழ்க்கையில் சவால்கள் இருந்தால், நீங்கள் ஒரு நிபுணரைத் தேட வேண்டியது அவசியம்.

- சஹானா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு