Published:Updated:

`காதல் இனிக்க இதுதான் கட்டாயம் தேவை!' - பெட்ரூம்... கற்க கசடற! - 18

Couple (Representational Image)
News
Couple (Representational Image) ( Photo by Thomas AE on Unsplash )

இதுபோன்ற மனச்சோர்வு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு காதல் வயப்படுவதிலும், காதலில் நிலைத்திருப்பதிலும் இடையூறு ஏற்படும். காதலின் வேதிப்பொருள்களோடு மாத்திரைகளிலுள்ள வேதிப்பொருள்களோடு மோதும்போது இந்தச் சம்பவம் நடக்கிறது. அதனால் மனம் மந்தப்படும்போது உறவு சலித்துவிடுமாம்.

முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி

உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்

நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!

புல்லாப் புலப்பதோர் ஆறு.

- நாலடியார்

(கடல் அலைகள் ஓயாது மோதுவதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே, முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம் - தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது)

மிழ் சினிமாவின் காதல் விரோத வில்லன்களுக்கும், மகள்/மகனின் காதலை ஒப்புக்கொள்ள முடியாத பிடிவாத குணம் உடைய தாய் தகப்பன்களுக்கும் இதுவரை இந்த மாத்திரை பற்றித் தெரியாது... நல்ல வேளையாக!

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

ஆமா.... அப்படியென்ன மாத்திரை இது?

ஃப்ளூஆக்ஸிட்டின்... இதுபோன்ற மனச்சோர்வு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு காதல் வயப்படுவதிலும், காதலில் நிலைத்திருப்பதிலும் இடையூறு ஏற்படும். காதலின் வேதிப்பொருள்களோடு மாத்திரைகளிலுள்ள வேதிப்பொருள்களோடு மோதும்போது இந்தச் சம்பவம் நடக்கிறது. அதனால் மனம் மந்தப்படும்போது உறவு சலித்துவிடுமாம். செக்ஸிலும் ஈடுபாடு இல்லாமல் போய்விடும்.

`ஒரு தம்பதி விவாகரத்தின் எல்லை வரை வந்துவிட்டார்கள். அந்தப் பெண் மனச்சோர்வுக்காக மாத்திரை எடுத்துக்கொள்வது தெரிந்தது. மாத்திரையை நிறுத்திவிட்டு, தாம்பத்யத்தில் அக்கறை காட்டச் சொன்னேன். கணவனின் மீது மீண்டும் ஈடுபாடு வந்தது. விவாகரத்து நின்றது. இப்போது அவர்கள் ஏராளமாக ஒருவரை ஒருவர் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்!’ என்று உதாரணத்தோடு விளக்குகிறார் டாக்டர் ஹெலன் எனும் மனவியலாளர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆகவே, ஏன், எதற்கு, எப்படி என அறியாமல் எந்த மாத்திரையையாவது உட்கொண்டுவிட்டு உபத்திரவத்தில் சிக்காதீர்கள். அப்புறம் படுக்கையறைக்குப் பதிலாகப் பக்கத்து அறையைத்தான் தேட வேண்டியிருக்கும்!

Love (Representational Image)
Love (Representational Image)
Image by StockSnap from Pixabay

இத்தாலியிலுள்ள பிசா பல்கலைக்கழக மனவியல் விஞ்ஞானி டோனாடெல்லா மாராஸிட்டி காதல் நோயின் உயிர்வேதியியல் பற்றி ஆராய்ந்திருக்கிறார். இந்தப் பெண்ணே இருமுறை காதல் வயப்பட்டிருக்கிறார். காதலின், காமத்தின் வீரியத்தைத் தாளமுடியாமல் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டார்! சொன்னால் கொஞ்சம் மிரளுவீர்கள்... எண்ணம் செயல் சுழற்சி நோய் (அப்செசிவ் கம்பல்சிவ் டிஸார்டர்) என்கிற மனக்கோளாறுக்கும் காதலுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றிதான் அந்த ஆராய்ச்சி!

டோனாவும் சக விஞ்ஞானிகளும் கடந்த ஆறு மாத காலத்தில் காதலில் விழுந்த 24 நபர்களை (சப்ஜெக்ட்ஸ்!) ஆராய்ந்தார்கள். அவர்களின் ரத்தத்திலுள்ள செரோட்டினின் அளவு தினமும் 4 மணி நேரம் அறியப்பட்டது. செரோட்டினின் என்பது நமது மூளையிலுள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே சொன்ன மனக் கோளாறால் அவதிப்படும் நபர்களின் செரோட்டினின் அளவும் அறியப்பட்டது. பொதுவாக, இவர்களின் செரோட்டினின் அளவு சமநிலையில் இருக்காது. அதற்காக ஃப்ளூஆக்ஸிட்டின் போன்ற மருந்து தரப்படுவது வழக்கம். இது மனக்கோளாறை மட்டுப்படுத்தும் வகையில் நியூரான்களின் இணைவுப் பகுதிகளில் நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் அளவை அதிகரிக்கும்.

மனநோய், காதல் நோய் - இரண்டுமே இல்லாத சுத்த(!) ரத்தங்களும் இதுபோல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சாதாரண மனிதர்களின் செரோட்டினின் அளவைவிட, காதலர்களுக்கும் மனநோயாளிகளுக்கும் 40 சதவிகிதம் அளவு குறைந்து காணப்பட்டதாம்!

இதற்கு என்ன அர்த்தம்?

காதல், அப்செசிவ் கம்பல்சிவ் டிஸார்டர் - இரண்டுமே ஒரே மாதிரியான வேதிவினைகளைக் கொண்டவை.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Marcelo Chagas from Pexels

இதற்கு என்ன அர்த்தம்?

காதலையும் இந்த மனக்கோளாறையும் தனியாகப் பிரித்துவிட முடியாது.

இதற்கு என்ன அர்த்தம்?

பைத்தியம் ஆகிடாதே... பிழைச்சுக்கோ!

- என்னதான் சொன்னாலும் யாரும் காதலில் விழுந்து கை காலையோ, மனதையோ உடைத்துக்கொள்ளாமல் இருக்கப்போவதில்லை. காதலில் விழுவார்கள்... சில சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும்!

மீண்டும் மீண்டும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது டைட்டானிக் எனும் காமக் கப்பல்தான். இது இருந்தால் அது இனிக்கும். அது இருந்தால் இது இனிக்கும். காதல் சிறக்க காமம் தேவை. காமம் சிறக்க காதல் தேவை. இல்லறம் சிறக்க இவை இரண்டுமே தேவை. அப்படியான ச்ச்ச்ச்சோவீட் விஷயங்கள் இவை - என்றென்றும்!

- சஹானா