Published:Updated:

தாம்பத்ய உறவு தொய்வடைகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - காமத்துக்கு மரியாதை 13

எல்லா தம்பதியரின் வாழ்க்கையையும் படுக்கையறைக்கு உள்ளே, படுக்கையறைக்கு வெளியே என இரண்டாகப் பிரிக்கலாம். படுக்கையறைக்குள்ளே நிகழ்கிற தொய்வற்ற அன்னியோன்யம்தான் படுக்கையறைக்கு வெளியேயான வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு மனிதரும் தனித்தனி நபர். பிரச்னைகளும் அப்படித்தான், நபருக்கு நபர் மாறுபடும். ஆனால், காமம் தொடர்பான பிரச்னைகளில் மட்டும் ஒருசில பிரச்னைகள் பலருக்கும் ஒரே மாதிரி இருக்கும். அவற்றில் ஒன்றான விந்து முந்துதலுக்கு சென்ற வார காமத்துக்கு மரியாதையில் தீர்வு சொல்லியிருந்தோம். இந்த வாரம், காம உணர்வில் தொய்வு ஏற்பட்டு சலிப்புடன் வாழ்ந்து வருகிற தம்பதிகளுக்கு சில தீர்வுகள் வழங்க, மருத்துவ உளவியலாளர் ராஜவர்மனிடம் பேசினோம்.

``காமத்தில் தொய்வு ஏன் ஏற்படுகிறது என்பதைச் சொல்வதற்கு முன்னால், உங்கள் அனைவருக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். இந்தத் தொய்வு திருமணமான பல வருடங்கள் கழித்துதான் வருமென்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது திருமணமான சில மாதங்களில் கூட வருமென்பதுதான் உண்மை.

ராஜவர்மன்
ராஜவர்மன்

திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு பலமுறை உறவு வைத்துக்கொள்வார்கள். அதையும் நீண்ட நேரம் வைத்துக்கொள்வார்கள். இதை திருமணமான அனைவரும் அறிவார்கள். சில மாதங்களில் இது மெதுவாக குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு சில வருடங்களில் குறைய ஆரம்பிக்கும். எங்கேயோ ஒரு சிலருக்கு சில பல வாரங்களில்கூட குறையலாம். இந்தத் தொய்வைச் சரி செய்ய முடியும். அதுவும் தம்பதிக்கு தம்பதி வேறுபடும். ஆனால், கண்டிப்பாக சரி செய்ய முடியும்.

எல்லா தம்பதியரின் வாழ்க்கையையும் படுக்கையறைக்கு உள்ளே, படுக்கையறைக்கு வெளியே என இரண்டாகப் பிரிக்கலாம். படுக்கையறைக்குள்ளே நிகழ்கிற தொய்வற்ற அன்னியோன்யம்தான் படுக்கையறைக்கு வெளியேயான வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. சரி, இனி காமத்தில் தொய்வு ஏற்படுவதற்கான காரணங்களைச் சொல்கிறேன்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels
எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10

காமத்தின் ஆரம்பத்தில் கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி, தேடலும் மோகமும் அதிகமாக இருக்கும். அது தொய்வடையாமல் இருக்க, இடத்தையும் நிலைகளையும் மாற்றிக்கொண்டே இருங்கள். ஒருநாள் படுக்கைக்கு மேலே என்றால், மறுநாள் சில்லிடும் தரையில் உங்கள் உறவு நிகழலாம்.

அடுத்து கர்ப்ப காலம். இயல்பாகவோ அல்லது மருத்துவ காரணங்களாலோ இந்தக் காலகட்டத்தில் காமம் தொய்வடைந்துதான் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தகட்டம் குழந்தை பிறந்த பிறகு... உடல் பலவீனம், செக்ஸ்தானே தன்னுடைய இவ்வளவு பலவீனத்துக்கும் காரணமென்கிற எரிச்சலில் பெண்ணின் காம உணர்வு தொய்வடைய ஆரம்பிக்கும். ஆணுக்கோ, இது வேறு மாதிரி தொய்வை ஏற்படுத்தும். எப்படித் தெரியுமா? குழந்தை வளர்ப்பில் விருப்பத்துடன் ஈடுபடுகிற அப்பாக்களில் சிலருக்கு காமத்தில் ஈடுபாடு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிலருக்கோ குறைய ஆரம்பிக்கும். இது ஆய்வுகள் சொல்கிற முடிவு. குழந்தை வளர்ப்பில் ஈடுபடும்போதும் காதல் செய்யலாம். காம உணர்வில் தொய்வை உணர்பவர்கள் அடிக்கடி அணைப்பு, முத்தப் பரிமாற்றம், மனைவியின் உடலை வருத்தாத உறவு என இருக்கலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash
விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! -  காமத்துக்கு மரியாதை - 12

சில தம்பதியர், தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை இருவருமே உணர்ந்திருப்பார்கள். ஆனால், அதை சரி செய்ய யார் முதலில் நெருங்குவது என்று தவித்துக்கொண்டிருப்பார்கள். உங்கள் இல்லறத்தின் இனிமையைக் காப்பாற்ற யார் வேண்டுமானாலும் இதைத் தொடங்கலாம். அதற்கு நீங்கள் இருவருமே ஒரே படுக்கையில் உறங்க வேண்டும், அவ்வளவுதான். கூடவே, கணவனும் மனைவியும் தனிமை கிடைக்கும்போது தாங்கள் ஏற்கெனவே அனுபவித்த காமம் குறித்து உரையாடலாம். காமம் அனுபவித்த பிறகு, இருவரும் பரஸ்பரம் உச்சக்கட்டம் அடைந்தோமா என்பதைப்பற்றியும் மெல்லிய குரலில் கேட்டுக்கொள்ளலாம். எல்லா தொய்வுகளும் சரியாகும்."

இந்தத் தொடரில், தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு