Published:Updated:

`உடலுறவின் இன்பம் முத்தத்தில் அல்ல; இதிலிருந்துதான் தொடங்குகிறது!' - பெட்ரூம் கற்க கசடற - 8

Couple (Representational Image) ( Photo by Thomas AE on Unsplash )

நெருக்கத்துக்கும் பாலியல் சுகத்துக்கும் மிகவும் தொடர்பு உண்டு. ஆனால், அவை ஒன்றல்ல. ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியும். ஆனால், அது முழுமையானதல்ல... முறையானதுமல்ல!

`உடலுறவின் இன்பம் முத்தத்தில் அல்ல; இதிலிருந்துதான் தொடங்குகிறது!' - பெட்ரூம் கற்க கசடற - 8

நெருக்கத்துக்கும் பாலியல் சுகத்துக்கும் மிகவும் தொடர்பு உண்டு. ஆனால், அவை ஒன்றல்ல. ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியும். ஆனால், அது முழுமையானதல்ல... முறையானதுமல்ல!

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Thomas AE on Unsplash )

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

- குறள்

(நெஞ்சே! காதலால் வளர்ந்த இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?)

சிறந்த செக்ஸ் எது? அதை இணையும் இரு உடல்களால் மட்டுமே உருவாக்கிவிட முடியுமா? நெருக்கமான பாலியல் அனுபவங்களை மேம்படுத்துவது எப்படி?

பெண்களுக்கு உடலுறவு கொள்ள நெருக்கம் தேவை. ஆண்களுக்கு நெருக்கமாக இருக்க பாலியல் தேவை.

ஆம்... உண்மையில் உடல்கள் பின்னிப் பிணைவதைத் தாண்டி, உணர்ச்சிரீதியான நெருக்கமே பலருக்கு - குறிப்பாகப் பெண்களுக்குச் சிறந்த பாலியல் அனுபவங்களுக்கு வழிவகுக்கும்.

நெருக்கத்துக்கும் பாலியல் சுகத்துக்கும் மிகவும் தொடர்பு உண்டு. ஆனால், அவை ஒன்றல்ல. ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியும். ஆனால், அது முழுமையானதல்ல... முறையானதுமல்ல!

நெருங்கிய உறவே அதிக பாலியல் திருப்தியை அளிக்கும்!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

குறிப்பாகப் பெண்களுக்கு, நெருக்கம்தான் சிறந்த பாலியல் மாத்திரை. அதுவே அருமையான ஆர்கஸ அனுபவங்களுக்கு வழிவகுக்கும். செக்ஸ் ஆட்டம் எப்படியிருந்தாலும், அவர் உறவுகொள்ளும் நபருடனான நெருக்கம்தான் சிறப்பான உச்சக்கட்டத்துக்கு காரணமாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. அதனால்தான் நன்கு பழகி, நீண்ட கால உறவை உருவாக்கியோரின் செக்ஸ் செயல்பாடுகள் திருப்திகரமாக அமைகின்றன.

குறுகிய கால உறவுகளில் - செக்ஸை மட்டுமே மையப்படுத்திய உடலுறவுகளில் அந்த அளவு இன்பம் வாய்ப்பதில்லை என்கிறார்கள் உளவியலாளர்கள். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் `நோ-ஸ்ட்ரிங்ஸ்-அட்டாச்டு' உறவுகள் நிலைக்காமல் போவதற்கும், அது திருமணமாக மாறாமல் போவதற்கும்கூட இந்த நெருக்கமின்மையே காரணம். அவர்களின் பாலியல் சந்திப்புகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மகிழ்ச்சியான தருணங்களைவிட துயரங்களே அதிகமாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மனரீதியான நெருக்கமில்லாத இது போன்ற `ஜஸ்ட் லைக் தட்' உறவுக் கலாசாரத்தில் நிறைய பேர் காயமடைகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், நிராகரிக்கப்படுகிறார்கள். இது மனிதகுலத்துக்கு நல்லதல்ல' என்றே மனநல மருத்துவர்களும் பாலியல் நிபுணர்களும் கருதுகிறார்கள்.

உணர்ச்சி ரீதியான நெருக்கம் வாயிலாகப் பாலுறவை சிறந்ததாக்குவது எப்படி?

* நீங்கள் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் விருப்பங்களைப் பற்றியும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைப் பற்றியும் பேசுவதும் எளிதாக இருக்கும்.

* நம்மில் பலரும் செக்ஸ் பற்றிப் பேசுகிறோம்தான். ஆனால், அது திரைப்படங்களில் வருவதைப் போன்றது என்று பெரும்பாலான மக்கள் தவறாக நினைக்கிறார்கள். திரைப்படங்களில் அல்லது போர்னோ படங்களில் இரண்டு பேர் ஒரு வார்த்தையும் பேசாமல் உடனடியாக உடலுறவு கொள்ளத் தொடங்குகிறார்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Image by StockSnap from Pixabay

ஆனால், நிஜ உலகில் நல்ல செக்ஸ் என்பது அப்படி நடப்பதில்லை. அந்த அதிவேகச் செயல்பாட்டுக்கு முன்னும் பின்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. நீங்கள் அதைப் பற்றிப் பேச முடியாவிட்டால், உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இணைக்கு எப்படித் தெரியும்?

* நீங்கள் உங்கள் இணையை நம்பும்போது, புதிய விஷயங்களை முயலவும் (ரிஸ்க் எடுக்கக்கூட ரெடியாக இருப்பீர்கள்!), மகிழ்ச்சியான அனுபவங்களுக்கு வழிவகுக்கவும் தயாராகி விடுவீர்கள். உங்கள் இணை உங்களை நம்பும்போது, அவர்கள் தங்கள் உள்ளார்ந்த எண்ணங்களையும் ஆசைகளையும் வெளிப்படுத்துவார்கள். இந்தப் பரிமாற்றம் உங்களை இன்னும் நெருக்கமான ஒரு ஜோடியாக இணைக்கும்.

* உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதை உணரும்போது, நீங்கள் இருவரும் இயல்பாகவே இருக்க முடியும். பாலியல் இன்பம்பற்றி வெளிப்படையான அணுகுமுறைகளைக் கொண்ட ஜோடிகள் குற்ற உணர்வுகள் ஏதுமின்றி தங்கள் பாலுணர்வை அலசி ஆராய முடியும். இன்பத்தைத் திகட்டத் திகட்ட பெருக்க முடியும். இயந்திரத்தனமான செக்ஸ் நிலைகளைத் தாண்டி, புதிய விஷயங்களில் ஈடுபட முடியும். இதுவே அதிக அளவு திருப்தியான உடலுறவு இன்பத்தை ஏற்படுத்தும்.

* உடலுறவின்போது ஏதேதோ எண்ணங்களால் உங்கள் மனதை அலைபாய விடாமல் உடலுறவு அனுபவத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அனுபவித்து வருவதைப் பற்றிச் சிந்தித்து மகிழுங்கள். பதிலுக்கு உங்கள் இணைக்கு எப்படியெல்லாம் மகிழ்ச்சியைத் தரலாம் என்று யோசியுங்கள்.

* பாலியல் நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதன் மூலமும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதன் மூலமும் உடலின் பாலியல் உணர்வுகளில் முன்முடிவுகளின்றி கவனம் செலுத்த முடியும்.

Couple (Representational Image
Couple (Representational Image
Image by Free-Photos from Pixabay

* உங்களை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் பாலியல் தேவைகளை அறிந்து அதற்கு உண்மையாக இருங்கள். அப்போதுதான் என்ன கேட்பது என்று தெரியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உறவுகளில் வெவ்வேறு முன்னுரிமைகள் இருக்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் முன்னுரிமைகளுக்கு வெளிப்படையாகவும் மரியாதையாகவும் இருக்க முடிந்தால் ஏமாற்றமில்லாத உறவு உறுதி.

*பொதுவாக, பெண்களுக்கு உடலுறவு கொள்ள நெருக்கம் தேவை. ஆண்களுக்கு நெருக்கமாக இருக்க பாலியல் தேவை. அவர் உங்களுடன் உடலுறவு கொள்ளும்போது, பேச விரும்புவார். அப்போது உடைகளோடு கூச்சங்களையும் களைந்து, அதுவரை பேசாத பேச்செல்லாம் தயங்காமல் பேசலாம்.

மனதின் நெருக்கம் இல்லாத உடலின் இறுக்கத்தால் ஏற்படும் இன்பம் ஏன்? இரு மனங்களும் இணைந்து உடலின் இன்பத்தை மனதின் குதூலத்தோடு கோக்கும்போது எப்படி இருக்கும் என்று அனுபவித்துதான் பார்க்க வேண்டும்.

- சஹானா