Election bannerElection banner
Published:Updated:

``ஆண் மனது கலப்படத்துடன்தான் இருக்கிறது!" - ஆண்களின் காதல் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர்

Couple (Representational image)
Couple (Representational image) ( Pexels )

மனைவியுடன் நிறைவான திருமண வாழ்க்கையில் இருந்தாலும் சில ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்கள்?

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்தச் சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்கும், ஆண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

Relationship
Relationship
Pixabay
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 11 - மனைவியுடன் நிறைவான வாழ்க்கை...

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில் குடும்ப வன்முறைகள் பற்றியும், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன், ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை, பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது, ஆண்கள் தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆகியவை குறித்து பேசியிருந்தோம். இந்த இதழில் ``மனைவியுடன் நிறைவான திருமண வாழ்க்கையில் இருந்தாலும் சில ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்கள்?'' என்பது பற்றி பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தைப் பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாகத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், நிறைவான தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கும்போதும் இன்னொரு பெண் மீது ஆண்களுக்கு ஈடுபாடு வருவதற்கான காரணம் குறித்த தன்னுடைய கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்
ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

``ஒரு பெண்ணுடன் நிறைவான தாம்பத்தியத்தில் இருக்கும்போதும் என்பதில், எது நிறைவு என்ற கேள்வி வருகிறது. அது மனரீதியானதா அல்லது உடல்ரீதியானதா..? அல்லது இந்த இரண்டையும் தாண்டி இன்னும் வேறு ஏதேனும் தேவைப்படுகிறதா என்பதையும் யோசிக்க வேண்டும். நிறைவான தாம்பத்தியத்துக்கு ஒருவருக்கு சில விஷயங்கள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு அந்தத் தேவைகள் மாறுபடலாம். தவிர, நிறைவான தாம்பத்தியம் என்பது அவரவர் மனதைப் பொறுத்ததும்கூட...

மனைவியுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் இருக்கும்போதே சில ஆண்களுக்கு இன்னொரு பெண் மீது ஈடுபாடு வருவதென்பது, ஏதோ சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டதல்ல. இந்த ஈர்ப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறது. அதனால்தான், வள்ளுவர் `பிறனில் விழையாமை’யை ஆணுக்கு ஓர் அதிகாரமாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு காலம் வரை நம் சமூகம் நூறு சதவிகிதம் ஆணாதிக்க சமுதாயமாகவே இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. சிலருக்கு அது 75 சதவிகிதம் இருக்கலாம். சிலருக்கு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனால், எல்லோருக்குமே அது இருக்கிறது. அதனால்தான் நம் சமூகத்தில் சில ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும், திருமணம் தாண்டிய உறவுக்கு வைப்பாட்டி என்று பெயரிட்டு வாழ்ந்ததும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது. அந்த மனப்பான்மையின் மிச்சம்தான் சில ஆண்களை இப்போதும் மனைவியைத்தாண்டி வெளியிலும் உறவைத் தேடச் செய்கிறது.

couple
couple
Representational images
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 7 - அம்மாவுக்கு அன்பான மகன்... மனைவிக்கு அன்பான கணவனா?

இறுதியாக ஒன்று, அடிப்படையான ஆண் மனது கலப்படத்துடன்தான் இருக்கிறது. அதனால், நிறைவான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் வாய்ப்பும் தூண்டுதலும் கிடைத்தால், சில ஆண்கள் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படவே செய்வார்கள். இதெல்லாம் தவறு கிடையாது என்ற ஆணாதிக்க மனப்பான்மைதான் இதற்குக் காரணம்’’ என்றார்.

நிறைவான தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கும்போதும் இன்னொரு பெண் மீது ஆண்களுக்கு ஈடுபாடு வருவதற்கான காரணம் பற்றிய நிபுணரின் கருத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு