Published:Updated:

காதல் ஹார்மோன் ஆக்ஸிடோசின்; இந்த 5 சமயங்களில்தான் அதிகம் சுரக்குமாம்! - பெட்ரூம் கற்க கசடற - 14

இணைகளிடையே பரிமாறப்படும் முத்தம் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும். டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உதடுகள் முத்தமாக முகிழ்க்கும்போது சுரக்கின்றன. இதில் ஆக்ஸிடோசின் `காதல் ஹார்மோன்' அல்லது `காதல் மருந்து' என்று பெருமிதத்துடன் குறிப்பிடப்படுகிறது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

- திருப்பாவை

(நற்சொற்களையே பேசுகிறவர்கள் உயர்வான மறைச் சொற்களைக் கூறி பசும் இலைகளுடன் கூடிய நாணலை சூரியன் முன் வைத்தபின், எரியும் நெருப்பைப் போலவே கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி, தீயை வலம் செய்ய, கனாக் கண்டேன் தோழி நான்!)

காதலின் மாமருந்து

`காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் கர்ப்பம், பிறப்பு மற்றும் உணர்ச்சிப் பிணைப்பு ஆகிய மனிதத் தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக்ஸிடோசின் என்பது பிரசவம் மற்றும் பாலூட்டுதல் ஆகிய செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமான ஒரு ஹார்மோன். அது மட்டுமல்ல... காதல் காலகட்டத்தில் இணைகளுக்கிடையே ஏற்படும் பரவசம், பதற்றம், தவிப்பு, கிளர்ச்சி போன்ற அத்தனை உணர்ச்சிகளுக்கும் இந்த ஹார்மோனும் காரணமாக இருக்கிறது!

பாலியல் பிணைப்பு, இனப்பெருக்கச் செயல்பாடுகள் மற்றும் பிற சமூக நடத்தைகளில் பெரிதும் பங்களிப்பதால் ஆக்ஸிடோசின் `காதல் ஹார்மோன்' அல்லது `காதல் மருந்து' என்று பெருமிதத்துடன் குறிப்பிடப்படுகிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels
`உடலுறவின் இன்பம் முத்தத்தில் அல்ல; இதிலிருந்துதான் தொடங்குகிறது!' - பெட்ரூம் கற்க கசடற - 8

இணைகளிடையே பரிமாறப்படும் முத்தம் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும். டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உதடுகள் முத்தமாக முகிழ்க்கும்போது சுரக்கின்றன. இதுதான் முத்தத்தின் பரவச இன்பத்துக்கு முதல் காரணம். காமப் பரவசத்தின்போது சுரக்கும் ஆக்ஸிடோசின், சற்று நேரத்துக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கும் ஆற்றலைக்கூடக் கட்டுப்படுத்திவிடும்!

பிரசவத்தில் ஆக்ஸிடோசின்

ஹைபோதலாமஸ் எனப்படும் மூளையின் பகுதியில் ஆக்ஸிடோசின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் பிட்யூட்டரி சுரப்பியில் சேமிக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக நிகழும் ஆக்ஸிடோசின் உற்பத்தியானது, குழந்தைப் பிறப்புக்குப் பிறகான பால் உற்பத்தியைத் தூண்டவும் உதவுகிறது.

ஆக்ஸிடோசினின் அதிசயப் பயன்பாடுகள்

மூளையில் ஆக்ஸிடோசின் விளைவுகள் பற்றி, சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுகள், பிரசவம் மற்றும் பாலூட்டலைத் தாண்டியும் அது செயலாற்றுவதை நிரூபிக்கின்றன. ஆய்வக விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள், சமூக உறவுகள் மற்றும் நடத்தைகளைப் பராமரிப்பதில் `காதல் ஹார்மோன்' முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கவலையைக் குறைக்கவும் அந்த ஹார்மோன் உதவுகிறது. இப்படி இந்த ஹார்மோன் ஓர் அதிசய மருந்தாகவே பிரபலமாகியுள்ளது. இது நேர்மறை உணர்வுகள் மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. மனச்சோர்வு, மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட தீவிர மனநல மற்றும் நடத்தை நிலைமைகளைத் தணிக்கிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Rodrigo Souza from Pexels
நல்ல தூக்கத்திற்கும் செக்ஸூக்கும் இவ்ளோ தொடர்பு இருக்கா? - பெட்ரூம் கற்க கசடற - 12

ஆண்களுக்கும் உண்டு ஆக்ஸிடோசின்!

பெண்களைவிட ஆண்கள் இயற்கையாகவே குறைந்த அளவு ஆக்ஸிடோசினைதான் உற்பத்தி செய்கிறார்கள். எனினும், ஓரின மணம் கொண்ட உறவுகளில் உள்ள ஆண்கள் பற்றிய ஆய்வுகள், இந்த ஹார்மோன் அவர்களின் இணையின் கவர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நம்பகத்தன்மைக்குப் பங்களிக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு ஆக்ஸிடோசின் விளைவுகளைத் தீர்மானிக்க இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவையென்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆக்ஸிடோசினை இயற்கையாகச் சுரக்கச் செய்து, பாலியல் ஆரோக்கியத்தைப் பன்மடங்காக்க... எளிதான ஐந்து வழிகள்!

1. கண்ணோடு காண்பதெல்லாம்!

மென் புன்னகையோடு இணையின் கண்ணோடு கண் நோக்கும்போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரந்து, இணைகளுக்கு இடையே நம்பிக்கை உணர்வை அதிகரிக்கும்.

2. கட்டிப்பிடி... கட்டிப்பிடிடா!

இணைகள் அணைத்துக்கொள்ளும்போது, அந்த நெருக்கத்தையும் இறுக்கத்தையும் குறையவிடாமல், `கட்டிப்பிடித்துக்கொண்டே இருக்கணும்' என நினைக்க வைப்பது இந்த ஹார்மோனின் சுரப்புதான்!

3. கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்!

கைத்தலம் பற்றுதல் எனும் காதலின் முதல் நிகழ்வு திருமண வைபவத்தின்போதே தொடங்கிவிடுகிறது. அப்போதைய பரபரப்பில் ஆக்ஸிடோசின் சுரப்பை உணர முடியாதவர்கள்கூட, முதலிரவின் முதல் ஸ்பரிசமான கைப்பற்றுதலில் நிச்சயம் உணர்வார்கள். `இஞ்சி இடுப்பழகா' பாடலை நினைத்துப் பார்க்கவும்!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash
உடல் எடைக்கும் உடலுறவு மகிழ்ச்சிக்கும் தொடர்பிருக்கிறதா? உண்மை என்ன? பெட்ரூம் கற்க கசடற - 13

சரி... கைப்பற்றும்போது அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது? இணைகள் கைப்பிடித்துக் கொள்ளும்போது கார்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது. அதன்பின் எல்லாமே இன்பமயம்தான்!

4. முத்தமின்றி சத்தம் என்ன?

முத்தம் தொடங்கும்போது அதிவேகமாக ஆக்ஸிடோசின் சுரக்கிறது. காதல் வேட்கை தீவிரமாகிறது. அதன் பின் ஆக்ஸிடோசினும் அற்புதமாகப் பெருக்கெடுக்கிறது. முத்தத்தின் சிறப்புகள் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

5. இசை கேளுங்கள்... நடனம் ஆடுங்கள்!

இணக்கமான பொழுதுகளில் இனிய இசை கேட்பதும், இணைந்து நடனம் ஆடுவதும் நெருக்கத்தை அதிகப்படுத்தி ஆக்ஸிடோசினை அள்ளித் தருகின்றன.

ஆகவே, கண்ணில் தொடங்கி, காதலில் தொடர்ந்து, காமத்தில் நிறைவடையுங்கள்!

- சஹானா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு