Published:Updated:

கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் வெளிவந்த பாலியல் மருத்துவர்களோட கட்டுரைகள்ல, `எங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் என் மனைவியை நியூடா பார்த்ததே இல்ல டாக்டர்'னு கணவர்களோட வருத்தங்களை வாசிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பியா கா கர்'னு ஓர் இந்திப் படம். 1972-ல வந்தது. கதையின் நாயகியா `ஜெயா பாதுரி' நடிச்சிருப்பாங்க. யெஸ், அமிதாப் பச்சனோட மனைவி ஜெயா பச்சனேதான். இந்தப் படத்தோட கதைக்கும் இந்த வார `காமத்துக்கு மரியாதை'யின் சப்ஜெக்ட்டுக்கும் சின்ன கனெக்‌ஷன் இருக்கு. கதைப்படி, ஜெயா கிராமத்துல பொறந்து விஸ்தாரமான வீட்டுல வளர்ந்த பொண்ணு. பெற்றோர் பார்த்து வைச்ச நாயகனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மும்பைக்கு வாழ வருவாங்க. நாயகன் ஒண்டுக்குடித்தனவாசி. அந்த வீட்டுக்குள்ள நாயகனோட பெற்றோர், ரெண்டு சகோதரர்கள், ஓர் அண்ணின்னு ஏகப்பட்ட கூட்டம். வீடு நிறைய ஆளுங்க கல்யாணம் முடிஞ்ச கலகலப்புல எல்லாரும் ராத்திரி முழுக்க பேசிக்கிட்டிருப்பாங்க. ஜெயாவோட முதலிரவுக்கு அந்த வீட்டோட கிச்சனைத்தான் ஏற்பாடு பண்ணியிருப்பாங்க. சுற்றிலும் முதலிரவு தம்பதிகள் மேல விழுற மாதிரி நெருக்கத்துல பாத்திரங்கள், அய்யோ பாவமேன்னு இருக்கிற கிச்சன் கதவு, ஜன்னலுக்கு பாதி கதவுதான் இருக்கும். மீதி ஜன்னலுக்கு தன்னோட சட்டையைக் கழட்டி ஸ்கிரீன் மாதிரி போட்டுட்டு நாயகன் முதலிரவுக்கு ரெடியாவார். அது கழண்டு கழண்டு விழும். ஆசை பாதி, மிரட்சி மீதின்னு தடுமாறிட்டு நிப்பாங்க ஜெயா. ஒருவழியா ரெண்டு பேரும் ஒரு முத்தத்துக்கு துணிஞ்சு கிட்ட நெருங்கிறப்போ விடியற்காலை மணி நாலாயிடும். அது வழக்கமா தண்ணி வர்ற நேரம். கிச்சன்ல இருக்கிற குழாய்ல இருந்து தண்ணிக் கொட்ட ஆரம்பிக்க, மொத்த வீடும் தண்ணிப்பிடிக்க முதலிரவு அறைக்குள்ள நுழையும். ஒண்டுக்குடித்தனம், அதிலும் கூட்டுக்குடும்பம். இதுக்குள்ள, புதுசா கல்யாணமான இளம் தம்பதிகள் அவங்க தாம்பத்திய உறவை அனுபவிக்கிறதுக்கு என்னென்ன இடைஞ்சல்களை சந்திப்பாங்க அப்படிங்கிறதுதான் `பியா கா கர்'ரோட கதை.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை
செக்ஸூக்கு குளிச்சிட்டு ரெடியான மட்டும் பத்தாது பாஸ்; இதுவும் முக்கியம்! - காமத்துக்கு மரியாதை - 2

புதுமண தம்பதிகள் வெட்கம் விட்டு ஒண்ணு கலக்குறதுக்கு கட்டாயம் தனிமை தேவை. இதைப் புரிஞ்சுக்கிட்ட பெரியவங்க, `கல்யாணமாயிடுச்சு. புள்ளைங்களுக்கு பொறுப்பு வரணுமில்ல. கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும்'னு சொல்லி தனிக்குடித்தனம் வைப்பாங்க. இந்த எண்ணம் தோணாதவங்க வீட்லேயும், வாய்ப்பில்லாத வீட்லேயும் வாழ்க்கைப்பட்ட பொண்ணுங்க நிலைமை கஷ்டம்தான். ஆண்களோட நிலைமையும்தான். ஒரு கிச்சன், ஒரு பெரிய ஹால். அதுலதான் மொத்த குடும்பமும் படுத்துத் தூங்கும். கூடவே புதுசா கல்யாணமானவங்களும். சின்னதா அசைஞ்சாகூட வளையல் சத்தம் காட்டிக்கொடுத்திடும். வளையலை கழட்டி வெச்சிட்டாலும், உச்சக்கட்டம் வர்றப்போவும் சத்தமில்லாமதான் இருக்கணும். நிலைமை இப்படியிருக்க, ஒரு முழுமையான தாம்பத்திய இன்பத்துக்கான நிர்வாணமெல்லாம் இவங்களுக்கு கிடைக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. எப்பவாவது குடும்பத்துல இருக்கிறவங்க வெளியூருக்குப் போனா, வாய்ப்பு கிடைக்கலாம். அப்படியே கிடைச்சாலும் உறவின்போது நிர்வாணத்துக்குப் பழக்கப்படாத மனைவி அதுக்கு ஒத்துக்கவே மாட்டார். இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் இதுதான் நிலைமை. அந்தக் காலத்துல பெரும்பான்மையான தம்பதிகளோட இரவுகள் இப்படித்தான் இருந்திருக்கு. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த பாலியல் மருத்துவர்களோட கட்டுரைகள்ல, `எங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் என் மனைவியை நியூடா பார்த்ததே இல்ல டாக்டர்'னு கணவர்களோட வருத்தங்களை வாசிக்க முடியும்.

இன்னிக்கு நிலைமை இப்படியில்லை. சின்ன வீடே என்றாலும் சிங்கிள் பெட்ரூம் இருக்கு. பெரும்பான்மை வீடுகள்ல ஏசி இருக்கிறதால சத்தம் வெளியே கேட்கிறதுக்கு வாய்ப்பில்லை. ஸோ, தம்பதியரின் பிரைவசிக்கு வாய்ப்பிருக்கிற காலகட்டம்தான் இது. ஆனா, இந்தக் காலகட்டத்திலும் `என் மனைவி தாம்பத்திய உறவு நடக்கிறப்போ நிர்வாணத்துக்கு மறுக்கிறா'ன்னு கணவன் வருத்தப்பட்டால், அதுக்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்று மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம். அவருடைய பதிலைப் படிப்பதற்கு முன்னால், வாசகரின் கேள்வியை வாசித்து விடுங்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Image by StockSnap from Pixabay

கேள்வி: என் மனைவிக்கு செக்ஸில் ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளது. நான் எந்த முன்விளையாட்டு செய்தாலும் அமைதியாகப் படுத்துக்கொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் அவளுக்கும் விருப்பம் இருக்கிறது. எனக்கு செக்ஸ் ஆசை அதிகம். மேலும் நான் நிர்வாணத்தை அதிகம் விரும்புபவன். படுக்கும்போதும் குளிக்கும்போதும் மனைவியுடன் நிர்வாணமாகவே இருக்க ஆசைப்படுபவன். ஆனால், என் மனைவி இதிலெல்லாம் விருப்பமில்லாமல் இருக்கிறாள். செக்ஸை பொறுத்தவரைக்கும் மிகவும் இடைவெளியுடன் வாழ்ந்து வருகிறோம். நல்ல தீர்வு சொல்லுங்கள் டாக்டர்.

டாக்டர் பதில்: ``இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. `ரொம்ப ஓப்பனா இருந்தா ஹஸ்பண்டுக்கு சீக்கிரம் போரடிச்சிடுவே. கொஞ்சம் ஒளிவுமறைவாவே இரு' என்று சித்தி, அத்தைமாதிரி வீட்டிலிருக்கிற மூத்த பெண்கள் யாராவது அறிவுறுத்தியிருந்தால், இளம்பெண்கள் இப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தாம்பத்திய உறவில் கணவன் - மனைவிக்கிடையே ஒளிவுமறைவில்லாத பகிர்தல் இருந்தால்தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்' என்ற உண்மையைச் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash
`முதலிரவுக்குப் பிறகும் இருக்கு ஆயிரம் இரவுகள்!' - இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க - 3

அபூர்வமாக சில பெண்கள், கணவன் உறவுக்கு நெருங்கினாலே உடலை விறைப்பாக்கிக்கொண்டு காலால் எட்டி உதைத்துவிடுவார்கள். இது உடம்பு தொடர்பான பிரச்னை கிடையாது. மனம் தொடர்பான பிரச்னை. அதனால், `கப்புள் தெரபி' அவசியம்.

தாம்பத்திய உறவின் அடிப்படை பற்றி பேச்சளவில் பெண்ணுக்குத் தெரிந்திருந்தாலும்கூட, திருமணமான புதிதில் `இப்படிப் பண்ணலாமா; அப்படிப் பண்ணலாமா' என்று கணவன் அளவுக்கதிகமாக ஆர்வம் காட்டுகிறபோது, பயந்துவிடலாம். விளைவாக, நிர்வாணத்துக்கு மறுக்கலாம். அளவுக்கதிகமான ஆர்வத்தைக் கட்டுப்படுத்தினாலே பிரச்னை தீர்ந்துவிடும்.

நம்முடைய கலாசாரத்தில் வெறும் உடலை `பப்பி ஷேம்' என்று குழந்தைகள் மனங்களில்கூட பதிய வைத்துவிட்டோம். அடிமனதில் இருக்கிற அந்த எண்ணத்தால்கூட சில பெண்கள் உறவின்போது நிர்வாணத்துக்கு நோ சொல்லலாம். இது மெள்ள மெள்ள மாறிவிடும்.

சில பெண்களுக்கு `மார்பு சின்னதா இருக்கோ', `தொப்பையோட இருக்கேனோ' என்று தன்னுடைய உடலுறுப்புகள் மீது தாழ்வு மனப்பான்மை இருக்கும். அது கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று நிர்வாணத்துக்கு மறுப்பார்கள். சில நேரத்தில், கணவனே தன் மனைவியின் உடலுறுப்புகளைக் கேலி, கிண்டல் செய்துவிடுவான். அதன் பிறகு, அந்த மனைவி எக்காலத்திலும் மூடிமறைத்துதான் இருப்பாள். இந்த இரண்டு பிரச்னைகள்தான் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருக்கின்றன. தன் உடல் எப்படியிருந்தாலும் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டியது பெண்களுடைய பொறுப்பு. `அந்தரங்க நேரத்தில் மட்டுமல்ல எந்நேரத்திலும் மனைவியை கேலி, கிண்டல் செய்யக் கூடாது' என்கிற நாகரிகம் கணவனுக்கு இருக்க வேண்டும்.

மனநல மருத்துவர் ஷாலினி
மனநல மருத்துவர் ஷாலினி

உங்களுடைய விஷயத்தில், `படுக்கும்போதும்', `குளிக்கும்போதும்' என்று நீங்கள் சற்றுக் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பது தெரிகிறது. இதன் காரணமாக, உங்கள் மனைவி நார்மலாக இருப்பதுகூட `ஆர்வமில்லாமல் இருப்பது' போல உங்களுக்குத் தோன்றலாம். முதலில் உங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். மனைவியிடம் மாற்றம் தெரியும். அவரும் உங்களை விரும்புகிறார் என்று நீங்களே சொல்லியிருப்பதால், நீங்கள் ஆசைப்பட்டதும் நடக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். `ஏதோ பிரச்னையிருக்கிறது' என்று தோன்றினால், பாலியல் மருத்துவரை நாடுங்கள்.''

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

இந்தத் தொடரில், தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு