``ஒரே நிலையிலான தாம்பத்திய உறவு எல்லா தம்பதியருக்குமே ஓர் அலுப்பை ஏற்படுத்தவே செய்யும். மாற்றத்துக்காக ஒரு சிலர் ஏனல் செக்ஸ் (anal sex) என்று சொல்லப்படுகிற ஆசனவாய் வழி உறவு கொள்வார்கள். அதன் விதிமுறைகளைப்பற்றியே இந்த வாரம் பேசவிருக்கிறேன்'' என்ற பாலியல் மருத்துவர் காமராஜ், தொடர்ந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``ஆசனவாய் வழி உறவு கொண்டிருப்பவர்களும் சரி, உறவு கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களும் சரி... `ஏனல் செக்ஸ் சரியா, தவறா?' என்று குழப்பத்துடனே இருப்பார்கள். ஒரு பாலியல் மருத்துவராகச் சொல்ல வேண்டுமென்றால், செக்ஸில் இதுவும் ஒரு வகைதான். அதனால், தாராளமாக அப்படிச் செயல்படலாம். ஆனால், விருப்பமிருக்கிற பலருக்கும் `ஆசனவாய் வழி உறவு கொண்டால் கிருமித்தொற்று ஏற்பட்டுவிடுமோ' என்கிற பயமும் இருக்கும். ஆணுறை அணிந்து உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்னை வராது. அதே நேரம், கிருமித்தொற்றைவிட ஆபத்தான பால்வினை நோய்களைப் பற்றியே இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பேச விரும்புகிறேன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்கிறவர்கள் பலருக்கும், ஆசனவாய் வழி உறவு கொண்டால் பால்வினை நோய்கள் வராது என்கிற நம்பிக்கையிருக்கிறது. ஆனால், அதில் உண்மையில்லை. இந்த முறையில் உறவு கொண்டாலும் பால்வினை நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். அதிலும், குறிப்பாக ஹெச்.ஐ.வி வைரஸ் மிக மிகச் சுலபமாகப் பரவும். ஏனென்றால், பெண்ணுறுப்பில் ஆறு வகையான லேயர்கள் இருக்கின்றன. ஆனால், ஆசனவாயில் மிக மெல்லிய ஒரேயொரு லேயர் மட்டுமே இருக்கிறது. இதன் வழியாக ஹெச்.ஐ.வி வைரஸ் மிகச் சுலபமாக உடலுக்குள் சென்றுவிடும்.

இதுவே, கணவன், மனைவி ஆசனவாய் வழி உறவு வைத்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது. ஒரே பார்ட்னருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும் பிரச்னையில்லை. ஒருவேளை அவர்களில் ஒருவருக்கு பால்வினை நோய் இருந்தால், அவர்களும் இந்த நிலை தாம்பத்திய உறவைத் தவிர்ப்பதே பாதுகாப்பு.
இன்னொரு முக்கியமான விஷயம், ஆசனவாய் செக்ஸில் ஈடுபட விருப்பமுள்ள தம்பதி, டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது'' என்றவர், இந்த உறவு நிலையில் வரக்கூடிய சில சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

``ஆசனவாய் தசைகள் பெண்ணுறுப்பு தசைகள்போல சுலபமாக விரிந்து சுருங்காது. இறுக்கமாக இருக்கும். அதனால் ஆணுறுப்பை உள்ளே செலுத்தும்போது கடுமையான வலி ஏற்படலாம். சில நேரங்களில் அந்தப் பகுதி தசை கிழியக்கூடச் செய்யலாம். அதனால், மிக மிக மென்மையான முறையில் முயற்சி செய்ய வேண்டும். தவிர, அதிக உயவுத்தன்மை கொண்ட க்ரீமை ஆசனவாயில் அப்ளை செய்த பிறகே உறவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இணை வலிக்கிறது என்று சொன்ன நொடியே நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால், சில நேரங்களில் தசை கிழிந்து ரத்தம்கூட வந்துவிடலாம்" என்றார்.