Published:Updated:

தாம்பத்திய உறவுக்குப் பிறகு சோப் வாஷ்; பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E13

Soap ( Pexels )

உறவுக்குப் பிறகு, உடனடியாக உறுப்பை சுத்தப்படுத்தினால், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

தாம்பத்திய உறவுக்குப் பிறகு சோப் வாஷ்; பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E13

உறவுக்குப் பிறகு, உடனடியாக உறுப்பை சுத்தப்படுத்தினால், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

Published:Updated:
Soap ( Pexels )

உலகமயமாக்கல் செக்ஸிலும் எதிரொலித்துக்கொண்டிருப்பதால், சிலரிடம் தன் துணை தாண்டிய உறவுகள் சகஜமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, `பால்வினை நோய்கள் ஏதாவது வந்துவிடுமோ' என்ற பயமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், என்னென்ன பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால், பால்வினை நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிற கேள்வியும் தேடலும் அதிகரித்திருக்கிறது. அதிலொன்றுதான், `உறவுக்குப் பிறகு அந்தரங்க உறுப்பை சோப் போட்டுக் கழுவினால் பால்வினை நோய்கள் வராதா' என்கிற கேள்வி. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

Couple (Representational image)
Couple (Representational image)
Pexels

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உறவுக்குப் பிறகு, உடனடியாக உறுப்பை சுத்தப்படுத்தினால், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. `தன் துணையைத் தவிர்த்து, வேறொரு நபருடன் பாதுகாப்பில்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டோம்' என்று அஞ்சுபவர்கள், அந்தரங்க உறுப்பை 2 அல்லது 3 முறை சோப்பை பயன்படுத்தி நன்கு சுத்தமாக்க வேண்டும். இதனால், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். அதே நேரம், இந்த `ஓரளவு' வாய்ப்பு ஆண்களுக்கே பலனளிக்கும்'' என்றவர், அதற்கான காரணம் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பாலுறவைப் பொறுத்தவரை, ஆண்கள் விந்தை வெளியேற்றுவதால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், ஓர் ஆண் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினைத் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவனுடைய விந்தணுக்களிலும் அந்தக் கிருமிகள் இருக்கும். உறவின்போது இந்த நோய்க்கிருமிகள் பெண்ணுறுப்பில் சேகரமாகிவிடும். பெண்ணுறுப்பில் இருக்கிற சளிப்படலம் வழியாக சுலபமாக இந்தக் கிருமிகளால் உடலுக்குள் சென்றுவிட முடியும் என்பதால், உறவுக்குப் பிறகு சோப் போட்டு வாஷ் செய்தாலும் அதனால் எந்தப் பலனும் இருக்காது. ஏனென்றால், பெண்ணுறுப்பின் அமைப்பு, முழு உறுப்புமே கிருமிகள் சுலபமாக உள்நுழையக்கூடிய வகையில்தான் இருக்கிறது.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெண்ணுறுப்பு திரவத்திலும் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்க்கிருமிகள் அடர்த்தியாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் ஆணுறுப்பின் முன்பகுதியை மட்டுமே கிருமிகளால் தாக்க முடியும். ஏனென்றால், ஆணுறுப்பின் அமைப்பு அப்படிப்பட்டது. இதிலும், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கிய ஆண்களைக் குறைந்த அளவே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்க்கிருமிகள் தாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். முன்தோலை நீக்காதவர்களுக்கு, ஆணுறுப்பின் முன்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடைப்பட்ட வழியே கிருமிகள் உடலுக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். என்றாலும் உறவின் மூலமாக, ஆண்களைவிட பெண்களுக்கே ஹெச்.ஐ.வி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை'' என்றவர், தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அப்படியென்றால், பால்வினை நோய்களே வராமல் இருப்பதற்கு 100 சதவிகிதம் பாதுகாப்பான முறை என்ன என்கிற கேள்வி எழலாம். முதல் வழி, யாருடனும் உறவுகொள்ளாமல் இருப்பது. இரண்டாவது வழி, சுய இன்பம் செய்வதுடன் நிறுத்திக்கொள்வது. மூன்றாவது வழி, கணவன், மனைவி இருவரும் திருமணம் தாண்டிய உறவுகளில் ஈடுபடாமல் இருப்பது. இவைதான் 100 சதவிகிதம் பாதுகாப்பான வழிமுறைகள்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

ஆணுறைகளும் பால்வினை நோய்களைத் தடுக்கக்கூடியவையே என்றாலும், அவை 98 சதவிகிதம் மட்டுமே பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியும். உறவின்போது கிழியலாம். அல்லது ஆணுறையைத் தாண்டியிருக்கிற பகுதியின் வழியாக நோய்த்தொற்று பரவலாம்'' என்று எச்சரிக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism