Published:Updated:

`சிங்கிள் பெண்கள்தான் மகிழ்ச்சியானவர்கள்!'- ஆய்வில் தகவல்

ஜெ.நிவேதா

கணவர், குழந்தை இல்லாத பெண்கள், மிகவும் தைரியசாலிகளாக இருக்கின்றனர்.

women
women

மகிழ்ச்சியாக வாழ, குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. சிங்கிள் பேரண்டுகளை அடுத்த உறவுக்குத் தயாராக்குவதற்கு அதிகம் சொல்லப்படும் அறிவுரை, இதுதான். ஆனால், சமீபத்திய ஆய்வொன்று, இதைத் தவறு என்கிறது. குறிப்பாக, தனித்து இயங்கும் பெண்களுக்கு எந்தச் சூழலிலும் அது பின்னடைவாக அமையாது என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

single parent
single parent

அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே என்ற நிறுவனம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தது. திருமணமானவர்கள் மற்றும் ஆகாதவர்கள், இணையரைப் பிரிந்தவர்கள் மற்றும் இழந்தவர்கள் ஆகியோரை இந்த ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்தியுள்ளனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் பௌல் டோலன் இதுகுறித்து கூறும்போது, ``திருமணமான பெண்களைப் பொறுத்தவரையில், கணவர் அருகில் இருக்கும்போது மட்டும்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

குடும்பத்துடன் வாழும் ஆண்கள், கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
ஆய்வு

மற்ற நேரங்களில், மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பிம்பத்தை மட்டுமே உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், தனித்து இயங்கும் பெண்கள் அப்படியல்ல. அனைத்து நேரத்திலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

பரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்

கணவர், குழந்தை இல்லாத பெண்கள், மிகவும் தைரியசாலிகளாக இருக்கின்றனர். தங்கள் உடல்நலனின் மீது கூடுதல் அக்கறை காட்டுகின்றனர். பல துன்பங்களையும் மிக எளிதாகக் கையாண்டு கடந்தும் விடுகின்றனர்.

single women
single women

திருமணமான ஆண்களைப் பொறுத்தவரையில், நிலை தலைகீழாக இருக்கிறது. திருமணம்தான் ஆண்களைப் பொறுப்பு மிக்கவர்களாக மாற்றுகிறது என்பதால், திருமணத்துக்குப் பின் அவர்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.