Published:Updated:

`பிரச்னைகளை மனசுக்குள்ளேயே வெச்சுக்கிறது நல்லதா?' - ஆய்வு சொல்லும் அலர்ட் செய்தி!

மெனோபாஸ் வராத பெண்கள், மெனோபாஸ் வந்த பெண்கள், புகைபிடிக்கும் பழக்கமில்லாத பெண்கள் என்று 304 பேரை வைத்து இந்த ஆய்வைச் செய்திருக்கிறார்கள்!

self-silencing women
self-silencing women

மனசுல எதையும் வெச்சுக்காம படபடன்னு பேசுற பொண்ணுங்ககூட, கல்யாணத்துக்கு அப்புறம், லைட்டா சைலன்ட்டாகிடுவாங்க. குழந்தைங்க பிறந்து, வளர்ந்து அவங்க டீன் ஏஜ் பருவத்துக்கு வந்த பிறகு, இந்த அமைதி இன்னமும் அதிகமாகும். 'வீடு நிம்மதியா இருக்கணும்', 'பசங்களுக்குப் பிடிச்சதை நாம ஏன் தடுக்கணும்', 'சொல்பேச்சுக் கேட்கலைன்னா அனுபவபட்டுத் தெரிஞ்சுக்கட்டும்' என்று இந்த அமைதிக்குப் பின்னால பல காரணங்கள் இருக்கும். 

Representative Image
Representative Image
Pixabay

'இந்த அமைதி சம்பந்தப்பட்ட பெண்களின் இயல்பாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை. அதற்கு பதிலாக, குடும்பத்தினரின் தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாமலும் அவர்களை நல்வழிப்படுத்த இயலாமலும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு குமைகிற 40 முதல் 60 வயது பெண்களுக்கு இதய நோய்களும் பக்கவாதமும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்லியிருக்கிறது. 

மெனோபாஸ் வராத பெண்கள், மெனோபாஸ் வந்த பெண்கள், புகைபிடிக்கும் பழக்கமில்லாத பெண்கள் என்று 304 பேரை வைத்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். இதில் சிலர், தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் உணர்வுகளை, கோபங்களை வெளிப்படையாகக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். சிலர் தன் உணர்வுகளையும் கோபங்களையும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்பவர்கள். இந்த இருவகையினரையும் 'அல்ட்ரா சவுண்ட் இமேஜிங்' உதவியுடன் ஆய்வு செய்துபார்த்ததில், உணர்வுகளையும் கோபங்களையும் வெளிப்படையாகக் காட்டுபவர்களைவிட மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு கஷ்டப்படுபவர்களுக்கு இதயத்தமனிகளில் பிளேக் (plaque) என்கிற படிமங்கள் படிவது 14 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

Representative Image
Representative Image

``இதயத்தில் இப்படி அதிகமாகப் படியும் படிமங்களல் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் மாதிரியான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்'' என்கிறார் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் கரேன் ஜாகுபோஸ்கி. அதனால, பிரச்னைகளோ, கோபங்களோ இனிமேல் வெளிப்படையாக காட்டுங்கள்.. அதுதான் உங்கள் இதயத்துக்கு நல்லது!