Published:Updated:

`ஒன்றாக நேரம் செலவிடும் வாய்ப்பு!' - தினமும் பாத்திரம் துலக்குவதில் மனைவிக்கு உதவும் பில்கேட்ஸ்

பில்கேட்ஸ், மெலிண்டா
பில்கேட்ஸ், மெலிண்டா

கணவர் மட்டும் வேலைக்குச் செல்லும் வீடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்! எல்லா வீட்டு வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டி வரும்.

நீங்கள் பில்கேட்ஸைப்போல பெரிய பணக்காரராக வேண்டும் என்று குடும்பத்திற்குக்கூட அதிக முக்கியத்துவம் தராமல் தீயாக வேலை செய்துகொண்டிருப்பவரா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் இதைப் படித்துவிடுங்கள். பின்னாளில் உதவும்!

தம்பதியின் திருமண வாழ்க்கை வெற்றி பெறுவது என்பது அவர்களின் தனிப்பட்ட பொருளாதார வளத்தையோ, சமூக அந்தஸ்தையோ சார்ந்தது அல்ல. கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் புரிந்துணர்வே அவர்களின் வாழ்வை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.

பில்கேட்ஸ்,மெலிண்டா
பில்கேட்ஸ்,மெலிண்டா

ஆனால், காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய காலகட்டத்தில் இணையர்களுக்கிடையே புரிந்துணர்வு இருக்கிறதோ இல்லையோ, போட்டி நிறையவே இருக்கிறது. யார் அதிகம் சம்பளம் வாங்குகிறோம் என்பதில் தொடங்கி, வீட்டில் எந்த வேலையை யார் செய்ய வேண்டும் என்பதுவரை எல்லாவற்றிலும் ஒரு மறைமுகப் போட்டி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

`50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி!' - இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி

கணவர் மட்டும் வேலைக்குச் செல்லும் வீடுகள் என்றால் கேட்கவே வேண்டாம்! எல்லா வீட்டு வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டி வரும். இதனாலேயே அவர்களுக்கு, `நான் என்ன வேலைக்காரியா?' என்ற மனநிலை ஏதோ ஒரு பிரச்னையின்போது வெடித்து வெளியில் வந்துவிடும். ஆண்களோ, `நான் இருக்கும் வேலை டென்ஷனில் வீட்டு வேலைகளையெல்லாம் எப்படிச் செய்வது?' என்று வெடிப்பார்கள்.

பில்கேட்ஸ்,மெலிண்டா
பில்கேட்ஸ்,மெலிண்டா

நீங்கள் என்னதான் பெரிய வேலை செய்தாலுமே வீட்டில் உங்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொண்டால்தான் இல்லறம் இனிக்கும் என்கிறார், உலக நம்பர் ஒன் பணக்காரரான பில்கேட்ஸ். சொல்வது மட்டுமல்லாமல் செய்தும் காட்டுகிறார். புரியவில்லையா? எவ்வளவு வேலை டென்ஷன் இருந்தாலும், தினமும் இரவு பாத்திரங்களைத் துலக்கும்போது, தன் மனைவியுடன் தானும் இணைந்துகொள்கிறார், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவழிக்கக் கிடைக்கும் வாய்ப்பாக இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

``வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் திறன் கொண்டது இந்தியா!” - பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநரும், உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் தன் வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கு அளித்துவருகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1.8 பில்லியின் அமெரிக்க டாலர்வரை செலவு செய்துவருகிறார். உலக பணக்காரராக இருந்தாலும் பில்கேட்ஸின் எளிமை மற்றும் பிறருக்கு உதவும் மனம் போன்றவை அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஒன்று.

பில்கேட்ஸ், மெலிண்டா
பில்கேட்ஸ், மெலிண்டா

பில்கேட்ஸ், மெலிண்டாவை 1994-ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு தற்போது இரண்டு பெண்கள், ஓர் ஆண் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். பொதுவாழ்வில் வெற்றியடைந்துள்ள இந்தத் தம்பதி, மண வாழ்க்கையிலும் வெற்றிகரமாக 25வது ஆண்டை நோக்கிச் செல்கின்றனர். அதற்குக் காரணம், இது போன்ற சின்னச் சின்ன வீட்டுக் கொடுத்தல்களும், தட்டிக்கொடுத்தல்களும்தான் என்கிறார்கள் இருவரும்.

பில்கேட்ஸ், மெலிண்டா
பில்கேட்ஸ், மெலிண்டா

எனவே ஆண்களே... பில்கேட்ஸைபோல் ஒரு நல்ல கணவராக உங்கள் மனைவிக்கு பாத்திரங்களை துலக்கித் தாருங்கள். நீங்களும் அவரைப்போலவே வேலையில், தொழிலில் முன்னேறலாம். அதாவது குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சியால் உங்கள் வேலையில் டென்ஷன் இல்லாமல் ஈடுபட்டு இலக்கை அடைவீர்கள்!

அடுத்த கட்டுரைக்கு