Published:Updated:

`எங்கள் வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது!' - மகனை வரவேற்று நெகிழ்ந்த `டங்கல்' நிஜ நாயகி

கீதா போகத் - பவன் குமார்
கீதா போகத் - பவன் குமார் ( www.instagram.com/pawankumar_saroha86 )

``எல்லோரும் உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் என் மகனுக்கும் என் குடும்பத்துக்கும் கொடுங்கள்.''

``என் மகனே... உன்னை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன். உன் மீது நாங்கள் பேரன்புடன் இருக்கிறோம். குழந்தை பிறப்பதைப் பார்க்கும் அனுபவத்தை என்னவென்று விவரித்துச் சொல்வது... எல்லோரும் உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் என் மகனுக்கும் என் குடும்பத்துக்கும் கொடுங்கள். மகன் பிறந்த பிறகுதான் எங்கள் வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது'' - தன் பச்சிளம் மகனுக்குப் பாசத்தைக்கொட்டி ஒரு வெல்கம் நோட்டுடன், தன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருப்பவர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை கீதா போகத்.

Son of wrestlers
Son of wrestlers
www.instagram.com/pawankumar_saroha86

கீதா போகத்தின் உடன்பிறந்த சகோதரிகளும் மல்யுத்த வீராங்கனைகள். `டங்கல்' படம் எடுப்பதற்கான இன்ஸ்பிரேஷனே கீதா போகத் மற்றும் அவரின் சகோதரிகள்தான். காமன்வெல்த்தில், தன் மல்யுத்த திறமையால் இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்த முதல் பெண்ணான கீதா, 2016-ல் சக மல்யுத்த வீரர் பவன்குமாரை மணமுடித்தார். இந்தத் தம்பதியருக்குத் தற்போது மகன் பிறந்திருக்கிறான். நண்பர்கள், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ் என அனைவரும் கீதா போகத் - பவன் குமார் தம்பதியருக்கும், அவர்களின் சின்னஞ்சிறு மகனுக்கும் இன்ஸ்டாவில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை கீதா போகத், விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல, அழகான வார்த்தைகளை உணர்ச்சித் ததும்பக் கோப்பதிலும் எக்ஸ்பெர்ட்போல.
கீதா போகத் - பவன் குமார்
கீதா போகத் - பவன் குமார்
www.instagram.com/pawankumar_saroha86

தான் கருவுற்றதை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்கூட, ''ஒரு புது உயிர் நமக்குள் ஜனிக்கும்போதும், ஒரு மெல்லிய இதயத்துடிப்பை முதன்முதலாகக் கேட்கும்போதும், ஒரு தாயின் மகிழ்ச்சி ஆரம்பமாகிறது. இரண்டு சின்னஞ்சிறு பாதங்கள் வயிற்றுக்குள் செல்லமாக உதைக்கும்போதெல்லாம் நான் தனியாக இல்லை என்பதை உணர்கிறேன்'' என்ற அழகான வார்த்தைகளின் மூலமே தான் கருவுற்றிருந்ததை வெளிப்படுத்தியிருந்தார் கீதா போகத்.

வாரிசுக்கு வெல்கம்!

அடுத்த கட்டுரைக்கு