Published:Updated:

`பொம்பள முகத்தைப் பார்த்து பேச மாட்டானுங்க!' - ஆண்கள் மீதான குற்றச்சாட்டும் அந்த உளவியலும்

Man
Man ( Photo by Tim Marshall on Unsplash )

ஆண்களின் மார்பக ஈர்ப்புக்குப் பின் இருக்கும் காரணம் என்ன? தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன்.

ஒரு பெண்ணுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆண் அறிந்தோ, அறியாமலோ பெண்ணின் மார்பகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறான். இந்தப் பார்வையானது சம்பந்தப்பட்ட ஆண்களின் இயல்பைப் பொறுத்து, சட்டென்று தன் கண்களைத் திருப்பிக் கொள்வதில் ஆரம்பித்து வக்கிரமான செயலில் இறங்குவதுவரை வேறுபடும். ஆண் தரும் இந்த அசெளகரியத்தைச் சந்திக்காத பெண்கள் இந்த உலகில் கிடையவே கிடையாது என்று 100 சதவிகிதம் உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு ஆண்களிடம் இருக்கிற பலவீனம் இது. வெறுத்துப்போன பெண் உலகம் `இவனுங்க முகத்தைப் பார்த்தே பேச மாட்டானுங்க' என்று தீர்மானம் செய்து, குற்றம்சாட்டவும் ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பான தன் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன்
எழுத்தாளர் சரவணன் சந்திரன்

``மறைச்சு மறைச்சு வெச்சதாலேயே ஈர்ப்பு வந்த விஷயங்க அது. ஒரு தலைமுறைக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா கிராமங்கள்ல கோ-எட் ஸ்கூலே இருக்காது. அப்படியே ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பொண்ணுங்ககிட்ட பேசினா வாத்தியார் அடி வெளுத்துடுவாரு. அட, காலேஜ் படிக்கிறப்போ பேசலாம்னு ட்ரை பண்ணா புரொஃபசர் திட்டுவாரு. இவ்வளவு ஏன், கூடப்பிறந்த தங்கச்சி வயசுக்கு வந்ததும் அவ இருக்கிற ரூம் பக்கம்கூட பசங்களை விட மாட்டாங்க.

வீட்டு ஆண்களோட கண்ணுல படாதபடிக்கு பொண்ணுங்க உள்ளாடைகளை மறைச்சு மறைச்சு வெப்பாங்க. ஒரு விஷயத்தை மறைச்சு மறைச்சு வெச்சா அதைப் பத்தின கற்பனைகள் வர ஆரம்பிக்கிறது இயல்புதானே. அதனாலேயே 70-களிலேயும் 80-களிலேயும் டீன் ஏஜ்ல இருந்த ஆண்களால பொண்ணுங்ககிட்ட சாதாரணமா பேசிப்பழக முடியல. பொண்ணுங்களோட நட்பா இருக்கவும் முடியல. இன்னிக்கு மாதிரி `இவ என் தோழி'ன்னு சொல்றதுக்கு அன்றைய சமூகமும் இடம் கொடுக்கல.

புதிய பகுதி! - 1: ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

இந்தக் காலத்துல பாலியல் விஷயங்களைப் பார்க்கிறதுக்கு நிறைய தளங்கள் இருக்கு. அந்தக் காலத்தில் பாலியல் புத்தகங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற தியேட்டர்ல ஓடுற அடல்ஸ் ஒன்லி படங்களும்தான் வடிகால். அதையும் யாராவது நம்மள பார்த்துடுவாங்களோன்னு பயந்து பயந்துதான் செய்யணும். இந்த ஆண்களுக்கு பெண்ணுடல் குறித்த எந்த அறிவியல் தகவல்களும் தெரியாது. போதாக்குறைக்கு சினிமாக்களும் விளம்பரங்களும் பெண்ணின் மார்பகத்தையே முன்னிலைப்படுத்தின. பொண்ணுங்களோட இயல்பா பழக முடியாதது, பெண்ணுடல் பத்தின நாலெட்ஜ் இல்லாதது ரெண்டும் சேர்ந்துதான், ஆண்கள் மனசுல மார்பக ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, இன்னிக்கு இருபதுகள்லேயும் முப்பதுகள்லேயும் இருக்கிற ஆண்கள்கிட்ட அந்தப் பார்வை மாறியிருக்கு.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். கொரோனாவுக்கு முன்னாடி பெசன்ட் நகர் பீச்ல ஏழெட்டு டீன் ஏஜ் பிள்ளைங்க கடல்ல ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து புரண்டு விளையாடிட்டு இருந்தாங்க. அவங்களோட அந்தச் செயல்பாடு ரொம்ப இயல்பா இருந்துச்சு. இந்தக் கால பிள்ளைகளால `இவ என் தோழி', `இவன் என் தோழன்'னு கைகோத்து ஒண்ணா நடக்க முடியுது, விளையாட முடியுது. ஒருவரையொருவர் தொட்டுப் பேசினாலும் இது ஃபிரண்டோட தொடுதல், இது பாய் ஃபிரண்டோட தொடுதல்னு வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியுது. பெண்ணுடல் பற்றிய அறிவியல் விஷயங்கள் இந்தக்கால ஆண்களுக்குத் தெளிவா தெரியுது.

பெரிய மார்பகம்தான் அழகுன்னு நினைச்சுக்கிட்டிருந்த இந்த சமூகம், ஊட்டச்சத்தில்லாத பொண்ணுங்கள `நெஞ்சே இல்லாம அலையுறா பாரு'ன்னு கிண்டலடிச்சிருக்கு. இன்னிக்கு அப்படியில்ல. இதை நான் கவனிச்சுப் பார்த்ததாலேயே ஸ்ட்ராங்கா இங்க பதிவு பண்றேன்.

பொண்ணுங்க குனிஞ்சு நடந்தப்போ அவங்க மார்பகத்தைப் பார்க்கிறது ஆண்களுக்கு வசதியா இருந்திருக்கலாம். ஆனா, இன்னிக்கு பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கிறாங்க. அவங்க மார்பகத்தைப் பார்க்கிற ஆண்களை `என்ன' என்கிற மாதிரி கண்ணோடு கண் நோக்கிப் பார்க்கிறாங்க. காலம் மாற மாற மனிதனுடைய தவறுகள் ஒவ்வொண்ணா களையப்பட்டுக்கிட்டே வரும். அதுல ஒண்ணாதான் நான் இந்த ஈர்ப்பையும் பார்க்கிறேன்.

Friendship
Friendship
Photo by Felix Rostig on Unsplash
`பிளேபாய்ஸ் அலெர்ட்!' இந்தக் கால ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் தவறுகள் என்ன? - பகிர்கிறார் பாக்யராஜ்

பெண்ணுடல் பத்தின முதிர்ச்சியான எண்ணங்கள் கொண்ட ஒரு தலைமுறை ஆண் உருவாகிவிட்டான்கிறதுதான் என்னோட நிலைப்பாடு. இதுல பெண்ணுடல் மீதான வக்கிரங்கிறது தனி. அது படிச்சவன், படிக்காதவன், பணக்காரன், ஏழைன்னு எல்லோர்கிட்டேயும் இருக்கு. இது எல்லா காலத்திலேயும் இருக்கும். அப்படிப்பட்ட ஆண்களை மனமுதிர்ச்சியான நார்மல் ஆண்களோட சேர்த்துப் பேச முடியாது. பேசவும் கூடாது.''

இது தவிர ஆண்களின் இந்த மார்பக ஈர்ப்பு குறித்து மற்றுமொரு கோணத்தைச் சொல்கிறார்கள் மனநல நிபுணர்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் என்ன என விரிவாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்க.

அடுத்த கட்டுரைக்கு