Published:Updated:

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!

ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபார்முலா 1

ரேஸ்: ஃபார்முலா 1

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!

ரேஸ்: ஃபார்முலா 1

Published:Updated:
ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
ஃபார்முலா 1

2022 ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் ரேஸில், ஃபெராரியை முந்தி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது ரெட்புல். தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், தன் அணியையும் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த சீசனை மிகவும் சிறப்பாகத் தொடங்கிய ஃபெராரி தங்கள் முன்னிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 4 ரேஸ்களில் ஒன்றில் மட்டும்தான் இரண்டு டிரைவர்களும் புள்ளிகள் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டு ரேஸ்களாக கார்லோஸ் சைன்ஸ் புள்ளிகள் பெறத் தவறிய நிலையில், ஸ்பெய்னில் சார்ல் லெக்லர்க் ஓய்வு பெற்றிருக்கிறார். மெர்சிடிஸ்அணியோ, இந்த மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கம்பேக்கை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

மியாமி கிராண்ட் ப்ரீ

முதல் முறையாக நடந்த மியாமி கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் தங்கள் பெயரை அழுத்தமாகப் பதிக்கும் வாய்ப்பு ஃபெராரிக்கு இருந்தது. தகுதிச் சுற்றில் லெக்லர்க், சைன்ஸ் இருவரும் முதலிரு இடங்களைப் பெற, இரு ரெட்புல் டிரைவர்களும் அடுத்த இரு இடங்களில் இருந்துதான் தொடங்கினார்கள். இருந்தாலும், முதல் வளைவிலேயே சைன்ஸை முந்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் வெர்ஸ்டப்பன்.

வழக்கம்போல் இரண்டாவது லேப்பிலேயே 1 நொடி இடைவெளியை உருவாக்கினார் லெக்லர்க். ஆனால், அது அதிக நேரம் நீடிக்கவில்லை. லெக்லர்க்கின் இடது பக்க முன் டயரில் சிறு சேதம் ஏற்பட, அவரது வேகம் குறைந்தது. அது வெர்ஸ்டப்பனுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. தன் வேகத்தைக் கூட்டிய அவர், எட்டாவது லேப்பில் லெக்லர்க்கை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார். அதன்பிறகு நடப்பு சாம்பியனுக்கு ஃபெராரியால் எவ்வித சவாலும் கொடுக்க முடியவில்லை.

ஃபெராரிக்குக் கைகொடுக்கும் வகையில் 46-வது லேப்பில் சேஃப்டி கார் கொண்டுவரப்பட்டது. 11 லேப்கள் மீதமிருந்த நிலையில், ஃபெராரி லெக்லர்க்கை பிட்டுக்குள் அழைத்து ஒரு ரிஸ்க் எடுத்திருக்கலாம். புதிய டயரோடு லெக்லர்க் நிச்சயம் வெர்ஸ்டப்பனுக்குச் சவாலாக இருந்திருப்பார். ஆனால், ஃபெராரி அதைச் செய்யத் தவறியது. அதனால், எவ்வித பிரச்னையும் இல்லாமல் முதல் மியாமி கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் தன் பெயரைப் பதித்தார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்.

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!
குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!

சேஃப்டி காருக்குப் பிறகு கார்லோஸ் சைன்ஸ், செர்ஜியோ பெரஸ் இருவருக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டி நடந்தது. ஒருகட்டத்தில் பெரஸ் சைன்ஸை முந்தினாலும், லாக் அப் ஏற்பட்டு மீண்டும் பின்தங்கினார். அதனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தது ஃபெராரி.

மியாமியிலும் சேஃப்டி கார் ஜார்ஜ் ரஸலுக்குப் பெரிய உதவியாக இருந்தது. 15-வது இடத்தில் தொடங்கியதால், ஹார்டு டயர்களுடன் தொடங்கினார் ரஸல். அதனால், சேஃப்டி கார் போன்ற ஒரு சூழ்நிலைக்குக் காத்திருந்து அதுவரை அவர் பிட் எடுக்கவேயில்லை. சரியாக சேஃப்டி காரின்போது பிட் எடுத்து வெளியே வந்தவர் ஐந்தாவது இடம் பிடித்தார். லூயிஸ் ஹாமில்ட்டன் ஆறாவது இடம் பிடித்தார். ஆனால், அணியின் இந்த முடிவுகள் ஹாமில்ட்டனுக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை. அதை அவர் ரேடியோவிலேயே வெளிப்படுத்தினார். காரணம், தொடர்ந்து நான்காவது ரேஸாக ரஸலுக்குப் பின் முடித்திருந்தார் அவர்.

வால்ட்டேரி போட்டாஸ், எஸ்டபன் ஓகான், அலெக்ஸ் ஆல்பான், லான்ஸ் ஸ்டிரோல் ஆகியோர் 7-10 இடங்களைப் பிடித்தனர். பிட்லேனில் இருந்து ரேஸைத் தொடங்கினாலும், புள்ளிகளுடன் முடித்தார் ஸ்டிரோல்.

ஸ்பானிஷ் கிராண்ட்ப்ரீ

வழக்கம்போல் போல் பொசிஷனில் லெக்லர்க், அடுத்த இடத்தில் வெர்ஸ்டப்பன் என்று தொடங்கியது இந்த ரேஸ். போல் பொசிஷனிலிருந்து தொடங்கி முன்னிலையும் பெற்றார் லெக்லர்க். ஆனால், பின்னால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நல்ல தொடக்கத்தால் சைன்ஸை முந்தினார் ரஸல். ஆனால், மற்றொரு மெர்சிடீஸ் வீரர் ஹாமில்ட்டனுக்குத் தொடக்கம் நல்லபடியாக அமையவில்லை. ஹாஸ் வீரர் கெவின் மேக்னஸனின் காரோடு மோதி, அவர் டயர் பஞ்சர் ஆனது. அதனால், முதல் லேப்பின் முடிவிலேயே பிட்டுக்குள் நுழைந்தார் ஹாமில்ட்டன். மீடியம் டயரோடு ரேஸைத் தொடங்கியவர், இம்முறை சாஃப்ட் டயரோடு வெளியேறினார்.

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!

ஒருகட்டத்தில், “நான் இந்த இன்ஜினைப் பாதுகாப்பது நல்லது என்று நினைக்கிறேன்” என்று தன் இன்ஜினீயரிடம் மனமுடைந்து கூறினார் ஹாமில்ட்டன். ஆனால், அவர் இன்ஜினீயரோ நிச்சயம் புள்ளிகள் பெற முடியும் என்று நம்பினார். எட்டாவது இடம் வரை பிடிக்க முடியும் என்று அவர் கூறினார். வழக்கம்போல், தன் அட்டகாசமான செயல்பாட்டைக் காட்டத் தொடங்கினார் ஹாமில்ட்டன்.

ஸ்பெயினில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்னிலைக்கு பலமுனைப் போட்டிகள் நடந்தன. நான்காவது வளைவு அதற்குப் பெரிதாக உதவியது. முதலில், ஏழாவது லேப்பின்போது டிராக்கிலிருந்து வெளியேறி சரளைகளுக்குள் நுழைந்தார் சைன்ஸ். அவர் மீண்டும் டிராக்கில் நுழைந்தபோது 12-வது இடத்தில் இணைந்தார். 3 லேப்கள் கழித்து அது வெர்ஸ்டப்பனுக்கும் நடந்தது. இரண்டாவது இடத்தில் இருந்தவர், இம்முறை நான்காவது இடத்தில் இணைந்தார். ஏற்கெனவே நல்ல முன்னிலையில் இருந்த லெக்லர்க்குக்கு, இது மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.

ரெட்புல் காரைவிட வேகம் குறைவானதாக இருந்தாலும், ரஸலின் மிகச் சிறப்பான டிரைவிங், அவரை பெரஸுக்கு முன்னாள் வைத்திருந்தது. இரண்டாவது இடத்துக்கு முன்னேற பெரஸ் வெகுநேரம் முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இந்நிலையில், வெர்ஸ்டப்பன் அவர்களுக்குப் பின்னால் வந்து சேர, பெரும் நெருக்கடிக்கு ஆளானது ரெட்புல். 11-வது லேப்பில் வெர்ஸ்ட்ப்பனை மூன்றாவது இடத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு பெரஸுக்கு சொல்லப்பட்டது. அவரும் வெர்ஸ்ட்ப்பனை அனுமதித்தார். இருந்தாலும், வெர்ஸ்டப்பனையும் முந்த அனுமதிக்காமல் சிறப்பாக செயல்பட்டார் ரஸல். வெர்ஸ்டப்பனின் DRS தேவையான நேரங்களில் பயன்படுத்த முடியாதபடி, அவர் காரில் பிரச்னை ஏற்பட்டது. அது அவரை கடுமையாக பாதித்தது.

டேனியல் ரிக்கார்டோ
டேனியல் ரிக்கார்டோ
குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!

வெகுநேரம் ரஸல் வெர்ஸ்ட்ப்பனைப் பின்தங்க வைத்திருந்ததால், லெக்லர்க் மிகப்பெரிய முன்னிலையை உருவாக்கினார். இந்த ரேஸை அவர் எளிதாக வென்றுவிடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பவர் யூனிட் பிரச்னையால் 27-வது லேப்பின் போது ஓய்வு பெற்றார் அவர்! இப்போது ரஸலும், வெர்ஸ்டப்பனும் முதலிடத்துக்கு முட்டி மோதினர். DRS பிரச்னை தொடர்ந்து கொண்டே இருந்ததால், வேறு யுக்தியைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது ரெட்புல். அதனால், இதை ‘3 ஸ்டாப்’ ரேஸாக மாற்றி, 29-வது லேப்பில் மீண்டும் வெர்ஸ்டப்பனை பிட்டுக்குள் அழைத்தனர். இம்முறை சாஃப்ட் டயர்களோடு வெளியேறிய மேக்ஸ், புயல் வேகத்தில் முன்னேறினார்.

31-வது லேப்பில் ரஸலை முந்தி ரேஸில் முன்னிலை பெற்றார் பெரஸ். பிட்டுக்குப் பிறகு நான்காவதாக வெளியேறிய வெர்ஸ்டப்பன், 32-வது லேப்பில் ஒரு மிகச் சிறப்பான மூவால் போட்டாஸை முந்தினார். 37-வது மற்றும் 38-வது லேப்களில் முறைய ரஸல், பெரஸ் இருவரும் பிட் எடுக்க, வெர்ஸ்டப்பன் முதலிடத்துக்கு முன்னேறினார். வெர்ஸ்டப்பன் மூன்றாவது பிட் எடுத்துத் திரும்பியபோது பெரஸுக்குப் பின் இணைந்தார். ஆனால், அவருடைய வேகம் பெரஸை விட அதிகமாக இருந்ததால் மீண்டும் வெர்ஸ்டப்பனை முன்னால் அனுமதிக்குமாறு பெரஸுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், தன் வருத்தத்தைத் தெரிவித்தார். இந்த ரேஸில் தன்னாலும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அவர் நம்பினார்.

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!
லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்
ம்ியாமி ரேஸில் வெர்ஸ்டப்பன்... (ரெட்புல்)
ம்ியாமி ரேஸில் வெர்ஸ்டப்பன்... (ரெட்புல்)

பெரஸ் தன் அடுத்த பிட்டுக்குப் பிறகு சாஃப்ட் டயர்களோடு வெளியேறி, ஃபாஸ்டர்ஸ் லேப்பைப் பதிவு செய்தார். வேறு டிராமாக்கள் ஏதும் நிகழாததால் வெர்ஸ்டப்பன், பெரஸ், ரஸல் என்று போடியம் நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் பின்தங்கினாலும் சிறப்பாகச் செயல்பட்டு நான்காவது இடத்துக்கு முன்னேறினார் சைன்ஸ். அதேபோல் ஹாமில்ட்டனும் ஐந்தாவது இடம் பெற்றார். வால்ட்டேரி போட்டாஸ், எஸ்டபன் ஓகான், லாண்டோ நாரிஸ், ஃபெர்னாண்டோ அலோன்சோ, யூகி சுனோடா ஆகியோர் 6-10 இடங்களைப் பிடித்தனர். அந்த வாரம் முழுவதும் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந் தாலும், சிறப்பாகச் செயல்பட்டு எட்டாவது இடம் பிடித்தார் நாரிஸ்.

ஆல் பாஸ் ஜார்ஜ்

இந்த சீசனில் இதுவரை நடந்திருக்கும் 6 ரேஸ்களிலுமே புள்ளிகளைப் பதிவு செய்திருக்கும் ஒரே டிரைவர் ஜார்ஜ் ரஸல் மட்டும்தான். சொல்லப்போனால், 6 ரேஸ்களிலுமே முதல் ஐந்து இடங்களுக்குள் முடித்து அசத்தியிருக்கிறார். பஹ்ரைனிலும், எமிலியாவிலும் நான்காவது இடம், சௌதி அரேமியா, மியாமி கிராண்ட் ப்ரீக்களில் ஐந்தாம் இடம், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெய்னில் மூன்றாவது இடம் என தொடர்ந்து சீரான செயல்பாடை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜார்ஜ். சீசனின் முதல் ரேஸான பஹ்ரைன் தவிர்த்து, மற்ற 5 ரேஸ்களிலுமே தன் டீம் மேட் லூயிஸ் ஹாமில்ட்டனை முந்தியிருக்கிறார்.

மோசமான சீசன்

இந்த சீசன் டேனியல் ரிக்கார்டோவுக்கு மிகவும் சுமாராகவே தொடங்கியிருக்கிறது. 6 ரேஸ்களின் முடிவில் வெறும் 11 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறார் ரிக்கார்டோ. தன் சொந்த ஊர் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில் மட்டும் ஆறாவது இடம் பிடித்தார். மற்ற எந்த ரேஸிலும் புள்ளிகள் பெறவில்லை. எமிலியாவின் ஸ்பிரின்ட் ரேஸில் ஆறாவதாக வந்தவர், மெயின் ரேஸில் புள்ளிகள் பெறத் தவறினார். டோரோ ரோஸோ அணியிலிருந்து வெளியேறிய பிறகு அவருடைய மோசமான தொடக்கம் இதுதான்.

குதிரையை முந்திய காளை! ஃபார்முலா 1 திருப்புமுனைகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism